எதையோ தேடுகையில்
யதேச்சையாய்க் கிடைத்தது
நான் உனக்கு
அனுப்பாமல் விட்ட
கவிதைக் கடிதம் ஒன்று ...!
சில செய்திகளை
சொல்லியிருக்கக் கூடும்
சில இடைவெளிகளை
நிரப்பியிருக்கக்கூடும்
அந்த கடிதம் ...!
அனுப்பவும் இயலாமல்,
கிழிக்கவும் முடியாமல்,
அந்தக் கவிதைக் கடிதம்
இப்போதும் என்னிடமே,
இருக்கிறது ....!
ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!











