உச்சத்தின் உடல்நிலை அனைவரையும் கலவரப்படுத்தியிருக்கிறது. (நம்மையும் கூட) குறிப்பாக அவரது சரித்திரப் படத்தின் இயக்குனரை. சகுனம் போன்ற மூட நம்பிக்கைகளை அவ்வளவாக நம்பாத இயக்குனரையும் இப்போது சென்டிமெண்ட் பயம் பிடித்தாட்டுகிறது.
சரித்திரப் படத்தில் உச்சத்துக்கு மூன்று வேடங்கள். இதில் ஒரு கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கதை அமைத்திருந்தார்களாம். உச்சம் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற பிறகு கதையை மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதாவது மூன்று கதாபாத்திரங்களும் உயிரோடு இருப்பது போல் கதை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர்.
தலைவர் பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா?











