மத்திய அமைச்சர்கள், தங்கள் பெயரில் இருக்கும், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள், மனைவி, உறவினர்களின் பெயர்களில் இருக்கும் சொத்துக்கள், பணம், நகை இவற்றின் விவரத்தை, ஆகஸ்ட் மாதத்திற்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்' என, ஆணை பிறப்பித்திருக்கிறார், 'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங்.
அமைச்சர்களின் உறவினர்கள், பிரதமரின் அனுமதியின்றி, வெளிநாடுகளில் வேலை பார்க்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார். முன்பு மாநில முதல்வராகவோ, அமைச்சராகவோ பதவி வகித்திருந்தால், அப்போது திரட்டிய சொத்துக்களையும், கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என, அதே பிரதமர் சொல்லியிருக்கிறார்.











