
கூட்டிப் பெருக்கிமுடியவில்லைஒரு குப்பைக் கூடைவாங்கிவா என்றாள்...!
பேன்ஸி ஸ்டோரிலும் சரிநடை பாதை தள்ளு வண்டியிலும் சரிஅழகு அழகாய்விதம் விதமாய்
எத்தனைக் கூடைகள்...!
வாங்கி வந்ததும்வீட்டில்எங்கு வைப்பதுஎன்றேன்...!
சுவற்றின் மூலையில்அல்லதுமேசைக்கு அடியில்என்றாள்...!
கூடை அழகாய்இருக்கிறது என்பதற்காகமேசைமீதா வைக்கிறோம்?
எனக்கு ஞாபகம் வருகிறதுஎத்தனைக் கூடைகள்மேசையின்மீது- நாட்டில்தான்.....