Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/18/2011

தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்!

ஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு  விழா கொண்டாடினோம்..  பார்க்கப் பார்க்க பேரதிசயமாக இருக்கிறது பெருவுடையார் கோயில். ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஓர் அற்புதத்தைப் படைத்தவர்கள் தமிழர்கள் எனும்  பெருமையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 


கற்களுக்கான முகாந்திரமே இல்லாத பகுதியில் கற்கோயிலை, கற்கோட்டையையே கட்டியுள்ளார் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டும் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. மற்ற கோயில்களுக்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. 

மற்ற கோயில்களில் எங்கு பார்த்தாலும் சந்நிதிகள், சிற்பங்கள், மண்டபங்கள் என நிறைந்திருக்கும். பெரிய கோயிலில் கட்டுமான இடங்களுக்கு நிகராக வெற்றிடம் அதிகமாக இருப்பதையும், கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர், அகழி போன்ற அமைப்பு இவை அனைத்தையும் பார்த்தால், ஆபத்துக் காலங்களில் அது கோயிலாக மட்டுமன்றி மக்களுக்கான பெரும் பாதுகாப்பு அரணாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக் கோயில் கட்டப்பட்டதாகக் கருத இடமுண்டு.

மன்னராக இருந்தபோதிலும் சிறந்த முறையில் மக்களாட்சியை நடத்தியவர்; குடவோலை முறை மூலம் உலகுக்கே மக்களாட்சியை அறிமுகப்படுத்தியவர் ராஜராஜன்  என ஆராய்ச்சிகள் மூலம் அறிகிறோம். 

ராஜராஜனின் படையெடுப்புகள், கடல் கடந்து சென்று பெற்ற வெற்றிகள், தமிழ், இசை, கலைக்கு ஆற்றிய தொண்டுகள் என காலமெல்லாம் கொண்டாட எத்தனையோ விஷயங்கள் உள்ளன. 

ஆனால், ஓர் அக்பரை போல, பாபரை போல, ஷாஜகானை போல ராஜராஜனின் புகழ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ராஜராஜனின் கீர்த்திகளை மற்ற நாட்டவரை, மாநிலத்தவரை விடுங்கள், தமிழர்களாவது அறிந்துள்ளனரா? 

அமரர் கல்கி "பொன்னியின் செல்வன்' நாவல் எழுதாவிட்டால் இந்த அளவுகூட அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜனைப் பற்றி அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்குமோ எனத் தோன்றுகிறது. 

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் ஒரு கலைக் கோயிலை படைத்திட்ட நம் தமிழ் மன்னனை ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்துக் கொண்டாட வேண்டாமா? 

ஒரு மன்னராக போரை மட்டுமா நடத்தினார் ராஜராஜன்? இன்றைய மக்களாட்சியை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே தனது ஆளுகைக்கு உள்பட்ட ஒவ்வொரு ஊர்களிலும் நடைமுறைப்படுத்தியவர் அல்லவா?
இன்றைய அரசு நிர்வாகத்துக்கு முன்னோடியாக தனித்தனியாக அரசாங்க நிர்வாக அவைகளை நியமித்து சிறப்புற ஆட்சி நடத்தியவர் அல்லவா?  

பள்ளிப் புத்தகங்களில் ராஜராஜனைப் பற்றி பாடங்கள் உள்ளன. ஆனால், தமிழ் மன்னர்கள் வரிசையில் ராஜராஜனைப் பற்றியும் கூறப்படுவதாக மட்டுமே அது அமைந்துள்ளது. அந்தப் பாடங்களை மாற்றி, ராஜராஜனைப் பற்றி விரிவாக இடம்பெறச் செய்தால் வருங்கால சமுதாயமாவது அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். 

தமிழ் மன்னர்களிலேயே வெளிநாடுகளுக்குப் படையெடுத்து வெற்றிகளை ஈட்டியதில் சிறப்பிடம் வகித்தவர் ராஜராஜன்.  இன்னும்  அவரைப்பற்றி  பல ஆராய்ச்சி செய்து பள்ளி, கல்லூரிப் பாடங்களில் இடம்பெறச் செய்யலாம். 

திரைப்படங்களிலும், இணையதளங்களிலும் மூழ்கி தேவையில்லாத தகவல்களையும்  விரல்நுனியில் தெரிந்திருக்கும் இளைய சமுதாயம் நம் ராஜராஜனைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளட்டுமே.

இவை மட்டுமன்றி, தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக என்றே தனி சுற்றுலா திட்டத்தை சலுகைக் கட்டணத்தில் மாவட்டந்தோறும் அரசு செயல்படுத்தலாம். ராஜராஜன் குறித்து ஆராய்ச்சிகள் மூலம் இதுவரை தெரியவந்துள்ள தகவல்களைப் புத்தகமாக வெளியிட்டு, நூலகங்களுக்கு அரசே வழங்கலாம்.
தமிழ் மன்னரின் பெருமைகளைத் தமிழர்களாவது தெரிந்துகொள்ளட்டும்.
Thanks Dinamani..

                                              2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை
                                              3. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!
                                               
யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....
  

68 comments:

  1. தமிழர் பெருமையைத்தமிழர்களாவது அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. தஞ்சாவூர் மண்ணு எடுத்து...

    ReplyDelete
  3. இருங்க படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  4. Lakshmi சொன்னது…

    தமிழர் பெருமையைத்தமிழர்களாவது அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். நல்ல பகிர்வு.
    -- வாங்கம்மா ரொம்ப நாளைக்கப்புரம் வர்ரீங்க..

    ReplyDelete
  5. FOOD சொன்னது…

    அய்யா வந்திட்டன்யா! வாசித்து விட்டு வருகிறேன்.
    -- வாங்க ஐயா..

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    தஞ்சாவூர் மண்ணு எடுத்து...
    -- என்ன ஒரு பாட்டோட போய்டீங்க..

    ReplyDelete
  7. ரஹீம் கஸாலி சொன்னது…

    இருங்க படிச்சிட்டு வாரேன்
    --- வலைஞன் இன்னைக்கு வரல ஏன்?

    ReplyDelete
  8. FOOD சொன்னது…

    ஒரு மன்னராக போரை மட்டுமா நடத்தினார் ராஜராஜன்? இன்றைய மக்களாட்சியை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே தனது ஆளுகைக்கு உள்பட்ட ஒவ்வொரு ஊர்களிலும் நடைமுறைப்படுத்தியவர் அல்லவா?//
    நல்ல பகிர்வு. அனைவரும் அறிந்திட வைத்ததற்கு நன்றி. ---------------
    தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்! ...

    ReplyDelete
  9. இளைய சமுதாயம் நம் ராஜராஜனைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளட்டுமே.

    ReplyDelete
  10. அனுமனுக்கு அவன் பலம் தெரியாது
    அடுத்தவர்கள் புரிய வைக்கவேண்டும் எனச் சொல்வார்கள்
    நம் தமிழர்களின் நிலையும் அதுவாகத்தான் ஆகிப்போனது
    மிகச் சிறந்த பதிவு
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. //திரைப்படங்களிலும், இணையதளங்களிலும் மூழ்கி தேவையில்லாத தகவல்களையும் விரல்நுனியில் தெரிந்திருக்கும் இளைய சமுதாயம் நம் ராஜராஜனைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளட்டுமே.//

    yes,karun

    ReplyDelete
  12. நல்லா பண்றீங்க தல
    முல்லை தீவுக்கு ரான்சர்
    நண்பா! அடிக்கடி வரமுடியேல்ல

    ReplyDelete
  13. //ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் ஒரு கலைக் கோயிலை படைத்திட்ட நம் தமிழ் மன்னனை ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்துக் கொண்டாட வேண்டாமா?///

    ஆமா அதை கொண்டாட இப்போ இருக்குற மன்னன் புற வாசல் வழியாக அல்லவா போனார். நியாபகம் இருக்கா......?
    இப்பிடி பட்டவங்க எப்பிடிய்யா ராஜராஜன் பெயர் பரப்புவாங்க.....

    ReplyDelete
  14. //இவை மட்டுமன்றி, தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக என்றே தனி சுற்றுலா திட்டத்தை சலுகைக் கட்டணத்தில் மாவட்டந்தோறும் அரசு செயல்படுத்தலாம். ராஜராஜன் குறித்து ஆராய்ச்சிகள் மூலம் இதுவரை தெரியவந்துள்ள தகவல்களைப் புத்தகமாக வெளியிட்டு, நூலகங்களுக்கு அரசே வழங்கலாம்.//

    அரசுக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்காக்கும்...? கனிமொழியை காப்பாத்தவே நேரமில்லையாம் போங்க....

    ReplyDelete
  15. உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு வாத்தி, நம்ம மன்னர்களை பற்றி நல்ல தமிழ் [சாரி கலைஞர் அல்ல] தலைவர்களை பற்றி நாம் உலகுக்கு சொல்ல தவறி விட்டோம்....

    "நாமா அரசா..."????

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    இளைய சமுதாயம் நம் ராஜராஜனைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளட்டுமே.
    /// Thanks...

    ReplyDelete
  17. Ramani சொன்னது…

    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    ---- தொடர்ந்து வாருங்கள்...

    ReplyDelete
  18. shanmugavel சொன்னது…

    //திரைப்படங்களிலும், இணையதளங்களிலும் மூழ்கி தேவையில்லாத தகவல்களையும் விரல்நுனியில் தெரிந்திருக்கும் இளைய சமுதாயம் நம் ராஜராஜனைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளட்டுமே.//

    yes,karun ////// Thanks....

    ReplyDelete
  19. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    நானும் வந்துட்டேன்..
    ///எங்க போயிருந்தீங்க...

    ReplyDelete
  20. யாழ். நிதர்சனன் சொன்னது…

    நல்லா பண்றீங்க தல
    முல்லை தீவுக்கு ரான்சர்
    நண்பா! அடிக்கடி வரமுடியேல்ல
    --- Ok..Ok..

    ReplyDelete
  21. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    ஆமா அதை கொண்டாட இப்போ இருக்குற மன்னன் புற வாசல் வழியாக அல்லவா போனார். நியாபகம் இருக்கா......?
    இப்பிடி பட்டவங்க எப்பிடிய்யா ராஜராஜன் பெயர் பரப்புவாங்க.....
    --- ஆமா தல..

    ReplyDelete
  22. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    அரசுக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்காக்கும்...? கனிமொழியை காப்பாத்தவே நேரமில்லையாம் போங்க....
    --- சரியாச் சொன்னிங்க...

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ சொன்னது…
    உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு வாத்தி, நம்ம மன்னர்களை பற்றி நல்ல தமிழ் [சாரி கலைஞர் அல்ல] தலைவர்களை பற்றி நாம் உலகுக்கு சொல்ல தவறி விட்டோம்.... "நாமா அரசா..."????
    // Thanks 4 ur comments..

    ReplyDelete
  24. பதிவின் ஆரம்பத்தில் உள்ள படம் ரொம்ப நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  25. கட்டுரையின் ஆதங்கம் அர்த்தமுள்ளது. நமது முந்தைய பெருமைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வது மிக அவசியமான ஒன்று தான்..

    ReplyDelete
  26. பாரத்... பாரதி... சொன்னது…

    பதிவின் ஆரம்பத்தில் உள்ள படம் ரொம்ப நல்லாயிருக்குங்க..
    ///வாங்க மாணவ செல்வங்களே...

    ReplyDelete
  27. பாரத்... பாரதி... சொன்னது…

    கட்டுரையின் ஆதங்கம் அர்த்தமுள்ளது. நமது முந்தைய பெருமைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வது மிக அவசியமான ஒன்று தான்..
    ---------- நன்றி...

    ReplyDelete
  28. அஜராஜ சோழன் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. அருமையான பதிவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  29. தஞ்சையையும், தமிழ் அரசனையும் நினைவில் நிறுத்தி பெருமை கொள்வொம்.

    ReplyDelete
  30. சோழ‌ அர‌ச‌ரின் ச‌ந்த‌திக‌ள் இன்றும் இருக்கிறார்க‌ளா? இல்லை அத‌ன் ச‌ந்த‌தியே ச‌ழிந்துவிட்ட‌தா? யாராவ‌து சொன்னால் ம‌கிழ்ச்சி (எல்லாருக்கும்)

    ReplyDelete
  31. சோழ‌ அர‌ச‌ரின் ச‌ந்த‌திக‌ள் இன்றும் இருக்கிறார்க‌ளா? இல்லை அத‌ன் வ‌ர்க்க‌மே அ‌ழிந்துவிட்ட‌தா? யாராவ‌து சொன்னால் ம‌கிழ்ச்சி (எல்லாருக்கும்)

    ReplyDelete
  32. வரலாற்று முக்கியத்துவங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதே.

    ReplyDelete
  33. நம்மை நாம்தான் புகழ்ந்து கொள்ளவேண்டும். கொடைக்கானல், குற்றாலம் என்று வருடா வருடம் திட்டமிட்டு சுற்றுலா போவதுபோல் இது போன்ற பழந்தமிழரின் சிறப்பை சொல்லும் இடங்களுக்கு நம் குடும்பத்துடன் செல்லவேண்டும். அது பற்றி குழந்தைகளுக்கு விளக்கவும் வேண்டும். இதில் கலாச்சார பெருமையையும் பகிர்ந்து கொள்ளப்படும்.

    ReplyDelete
  34. ம்ம்ம்.. ரொம்ப நல்ல பதிவு நண்பா.. தமிழ் மன்னனைப் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி

    ReplyDelete
  35. நல்ல கட்டுரை..பகிர்ந்ததுக்கு நன்றி!

    ReplyDelete
  36. ராஜராஜனை பற்றி நிறைய தகவல்கள்... நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  37. தமிழன் என்றொரு இனம் என்பதற்கான அடையாளங்கள் இப்படிப்பட்ட சில ஆதாரங்கள் மட்டுமே !

    ReplyDelete
  38. இந்த கோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் படாதவாறு கட்டப்பட்டது என்று முன்பு படித்திருக்கிறேன். மலைகளே இல்லாத ஊரில் பாறைகளைக் கொண்டே கட்டப்பட அந்த மக்கள் மிகுந்த சிரமப் பட்டிருக்க வேண்டும். சிறந்ததொரு பதிவு.

    ReplyDelete
  39. komu சொன்னது…

    அஜராஜ சோழன் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. அருமையான பதிவுக்கு நன்றிங்க.
    --- வாங்க ரொம்ப நாளைக்கப்புரம் வரீங்க..

    ReplyDelete
  40. தமிழ் உதயம் சொன்னது…

    தஞ்சையையும், தமிழ் அரசனையும் நினைவில் நிறுத்தி பெருமை கொள்வொம்.
    --- நன்றி...

    ReplyDelete
  41. jothi சொன்னது…

    சோழ‌ அர‌ச‌ரின் ச‌ந்த‌திக‌ள் இன்றும் இருக்கிறார்க‌ளா? இல்லை அத‌ன் ச‌ந்த‌தியே ச‌ழிந்துவிட்ட‌தா? யாராவ‌து சொன்னால் ம‌கிழ்ச்சி (எல்லாருக்கும்)
    --- அப்படியா?

    ReplyDelete
  42. சோழ அரசரின் சந்த‌திக‌ள் இன்றும் இருக்கிறார்க‌ளா? இல்லை அத‌ன் வ‌ர்க்க‌மே அ‌ழிந்துவிட்ட‌தா? யாராவ‌து சொன்னால் ம‌கிழ்ச்சி (எல்லாருக்கும்) --- இ‌தைப்பற்றி தனிப்பதிவு ‌போட முயற்சி ‌செய்கி‌றேன்..

    ReplyDelete
  43. பகிர்வுக்கு நன்றி நண்பா

    உமது வருத்தம் புரிகிறது..........இந்த விஷயம் பல பேருக்கு போய் சேர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  44. மாதேவி சொன்னது…

    வரலாற்று முக்கியத்துவங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதே.
    ---- ஆமாம்..

    ReplyDelete
  45. சென்னை பித்தன் சொன்னது…

    செய்ய வேண்டும்!----- என்ன செய்யனும்..

    ReplyDelete
  46. சாகம்பரி சொன்னது…
    நன்றி தோழரே...

    ReplyDelete
  47. பதிவுலகில் பாபு சொன்னது…

    ம்ம்ம்.. ரொம்ப நல்ல பதிவு நண்பா.. தமிழ் மன்னனைப் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி
    --- முதல்முறை வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  48. செங்கோவி சொன்னது…

    நல்ல கட்டுரை..பகிர்ந்ததுக்கு நன்றி!
    --- நன்றி..

    ReplyDelete
  49. வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...

    ReplyDelete
  50. பிரமிக்க வைக்கும் கலைத்திறன் நம் தமிழ் மக்களுக்கும், மன்னர்களுக்கும் இருப்பது என்றைக்குமே அபூர்வமும், ஆச்சரியமும் தான். இன்னொரு உதாரணம் கரிகால சோழன்.

    ReplyDelete
  51. ராஜ ராஜனுக்கு நான் சொந்தம் என்கிற வகையில் எனக்கும் பெருமைதான்..

    ReplyDelete
  52. நானும் தஞ்சாவூர் என்பதில் எனக்கு பெருமை

    அருமையான பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  53. உளவாளி சொன்னது…

    ராஜராஜனை பற்றி நிறைய தகவல்கள்... நன்றி நண்பரே!!!!
    /// Thanks..

    ReplyDelete
  54. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    நல்ல பகிர்வு...
    /// Thanks 4 coming.

    ReplyDelete
  55. ஹேமா சொன்னது…

    தமிழன் என்றொரு இனம் என்பதற்கான அடையாளங்கள் இப்படிப்பட்ட சில ஆதாரங்கள் மட்டுமே !
    /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  56. சுவனப்பிரியன் சொன்னது…

    இந்த கோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் படாதவாறு கட்டப்பட்டது என்று முன்பு படித்திருக்கிறேன். மலைகளே இல்லாத ஊரில் பாறைகளைக் கொண்டே கட்டப்பட அந்த மக்கள் மிகுந்த சிரமப் பட்டிருக்க வேண்டும். சிறந்ததொரு பதிவு.
    /// Thanks for your comments..

    ReplyDelete
  57. விக்கி உலகம் சொன்னது…

    பகிர்வுக்கு நன்றி நண்பா

    உமது வருத்தம் புரிகிறது..........இந்த விஷயம் பல பேருக்கு போய் சேர வாழ்த்துகிறேன்.
    // Thanks..

    ReplyDelete
  58. டக்கால்டி சொன்னது…

    வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...
    ---- Thanks..

    ReplyDelete
  59. டக்கால்டி சொன்னது…

    பிரமிக்க வைக்கும் கலைத்திறன் நம் தமிழ் மக்களுக்கும், மன்னர்களுக்கும் இருப்பது என்றைக்குமே அபூர்வமும், ஆச்சரியமும் தான். இன்னொரு உதாரணம் கரிகால சோழன்.
    /// Thanks 4 ur comments..

    ReplyDelete
  60. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    ராஜ ராஜனுக்கு நான் சொந்தம் என்கிற வகையில் எனக்கும் பெருமைதான்..
    /// அப்படியா?

    ReplyDelete
  61. r.v.saravanan சொன்னது…

    நானும் தஞ்சாவூர் என்பதில் எனக்கு பெருமை

    அருமையான பதிவுக்கு நன்றி
    -------------------------------------- மகிழ்ச்சி....

    ReplyDelete
  62. அமரர் கல்கி "பொன்னியின் செல்வன்' நாவல் எழுதாவிட்டால் இந்த அளவுகூட அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜனைப் பற்றி அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்குமோ எனத் தோன்றுகிறது.//

    உண்மைதான் ராஜராஜனை பற்றி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ வீர வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாறே தமிழ் நாட்டில் இருந்துதான் தொடங்கபடவேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் பலர் சொல்வதுண்டு. இந்திய இறையாண்மை பேரில் நாம் இழந்தது எவ்வளோவோ

    ReplyDelete
  63. நான் நேரில் பார்க்க விரும்பும் மாமனிதர்களுள் ராஜராஜனும் ஒருவர்.காலம்தான் தடை போடுகிறது.

    ReplyDelete
  64. உண்மையில் முகலாய வரலாறுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட நம் தமிழர் வரலாற்றுக்கு கொடுக்கப்படவில்லை என்பது என் கருத்து. பெரிய சாம்ப்ரஜியத்தை உருவாக்கிய முகலாயர்கள் கூட ஹைதராபாத் தாண்டி வரமுடியவில்லை. அவ்வளவு திறம் படைத்தவர்கள் நம் அரசர்கள். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  65. http://www.youtube.com/watch?v=SnANjdReAlY&playnext=1&list=PLD9CCFCE968C21C42

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"