Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/21/2011

வாக்களிக்க விரும்பாத பெருமக்களே...!


தோ வந்துவிட்டார்கள்  வீதிகளில் "வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை எங்கள் சின்னத்துக்குச் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்' எனக் கட்சிகள் பலவும் போட்டி போட்டுப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டன. 

என்னதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்காணித்தாலும், அவற்றையெல்லாம் மீறி, வறுமையில் வாடுவோரையும், அத்தனைக்கும் ஆசைப்படுவோரையும் நாடிப் பரிசுப் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் வந்துசேரும் காலமிது.

கனவிலும் கண்டிராத வாக்குறுதிகளோடு, முன்பின் தெரியாதவர்கள், அண்ணன், தம்பி, அக்கா, அம்மா, அண்ணி, மாமா என உறவுமுறைகளைக் கூறி ஓட்டு வேட்டை நடத்தும் நேரமிது.இன்றைக்கு அரசியல் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளதை மறுக்க முடியாது.

தேநீர் கடையானாலும், முடிதிருத்தும் நிலையம் ஆனாலும், 4 பேர் உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால் அது நிச்சயம் இன்றைய அரசியல்தான் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.அரசியலைப் பற்றி அலசும் இன்றைய நடுத்தர, ஏழை சமுதாயத்தினர் பெரும்பாலோர், அந்த அரசியலால் லாபம் அடையாதவர்கள்தான்.குறிப்பிட்ட கட்சியின் மீதான அபிமானம் அல்லது வெறுப்பு, அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இன்றைக்கு எல்லோரையும் அரசியல் பேச வைத்துவிட்டது.

இதற்கெல்லாம் அசராதவர்கள் ஒருதரப்பு உண்டு. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று வேதாந்தம் பேசும் வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அத்தகையோரில் பெரும்பாலோர் படித்தவர்களாகவும், நேர்மையை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பதுதான் வேடிக்கை. 

அரசியல் விவகாரங்களை அக்கு வேறு, ஆணி வேறாகப் பேசும் இவர்கள், நாமஓட்டு போட்டுத்தானா அவர்(அவர் நினைக்கும் நல்லவர்) ஜெயிக்கப் போகிறார்? என்ற போக்கில் பேசாமல் இருந்துவிடுவது வாடிக்கை. தேர்தல் முடிவுகள் இவரது எண்ணம்போல் அமையாவிட்டாலோ, "இந்த நாடு உருப்படாது. மீண்டும் வெள்ளைக்காரன் வந்தால்தான் உருப்படும்' என்று பேசத் தொடங்கி விடுவார்கள்.

இன்றைக்கு அரசியலில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரும், கோடிக்கணக்கில் சொத்துக் குவிப்பதற்காக அரசியலில் தஞ்சம் அடைவோரும் மக்கள் பிரதிநிதிகளாகஉலா வருவதற்கு, வேதாந்தம் பேசிவிட்டு வாக்களிக்காமல் இருப்பவர்களும் காரணமாகி விடுகின்றனர்.1951-ல் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களின் சதவீதம் 45.25. அடுத்த தேர்தலில் அது 53.44 சதவீதமாக உயர்ந்தது.பிறகு ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு வாக்களிக்காதவர்களின் சதவீதத்தைக் குறைத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. 

இதனால் 2006 தேர்தலில்கூட வாக்காளிக்காதவர் சதவீதம் 29.18-ஆக இருந்தது.இடப்பெயர்ச்சி, உடல் நலக்குறைவு, தவிர்க்க முடியாத சூழல் போன்றவற்றால் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையில் மிகச்சொற்ப அளவே இருப்பர். மற்றவர்கள் பெரும்பாலும் பேச்சுடன் நிறுத்திக்கொண்டு, செயலில் இறங்காதவர்களாகவே இருப்பர்.

ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும், வாக்கு அளிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட, குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை வாக்களிக்கத் தவறுவோர் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவர்களுக்கு, நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.

அதுவரை பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். 
Thanks dinamani..
முன்தினப் பதிவுகள்:

1. ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினி கடிதம்
2. கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி 
3. சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!

யவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்

ஓட்டு போட மறக்காதீர்கள்....

51 comments:

  1. நூத்துக்கு நூறு உண்மைங்கோ......

    ReplyDelete
  2. யதார்த்தமான கருத்துக்கள்! நடக்கறத சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  3. இன்னைக்கு ஷோ முன்னாலயே போட்டதுக்கு காரணம் இன்று 3 காட்சிகளா?

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி நண்பா நடத்துங்க!

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    இன்னைக்கு ஷோ முன்னாலயே போட்டதுக்கு காரணம் இன்று 3 காட்சிகளா?
    ---- மறுபடியும் ஊருக்கு போயாச்சா?

    ReplyDelete
  6. Pari T Moorthy சொன்னது…

    1..................
    ---- வாங்க...

    ReplyDelete
  7. Pari T Moorthy சொன்னது…

    நூத்துக்கு நூறு உண்மைங்கோ......
    -- ரொம்ப நாளைக்கப்புரம் வர்றீங்க வாங்க..

    ReplyDelete
  8. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    யதார்த்தமான கருத்துக்கள்! நடக்கறத சொல்லியிருக்கீங்க!
    --- ஞாபகம் இருக்கா..

    ReplyDelete
  9. விக்கி உலகம் சொன்னது…

    பகிர்வுக்கு நன்றி நண்பா நடத்துங்க!
    ---- நன்றி...

    ReplyDelete
  10. FOOD சொன்னது…

    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

    யதார்த்தமான கருத்துக்கள்! நடக்கறத சொல்லியிருக்கீங்க!
    ரிப்பீட்டு.
    --- கிரேட் எஸ்கேப்..

    ReplyDelete
  11. FOOD சொன்னது…
    கரெக்டா கண்டு பிடுச்சிட்டீங்களே! ஆசிரியரிடம் அல்வா கொடுக்க முடியுமா? --- சமாளிபிகேஸன்..

    ReplyDelete
  12. ஏற்று கொள்ளததக்க கருத்துகள்.

    ReplyDelete
  13. தமிழ் உதயம் சொன்னது…

    ஏற்று கொள்ளததக்க கருத்துகள்.
    --- நன்றி..

    ReplyDelete
  14. வந்தேண்டா ப்ளாக் காரன் அடடா இப்போ உங்க இடுகை கொஞ்சம் படிக்க போறேன்

    ReplyDelete
  15. டக்கால்டி சொன்னது…

    வந்தேண்டா ப்ளாக் காரன் அடடா இப்போ உங்க இடுகை கொஞ்சம் படிக்க போறேன்
    //////////// தல புது பதிவு எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  16. தலைவா..ஒட்டு போடாதவனும் 49 O பிரிவில் ஒட்டு போடுபவனும் ஒன்னு தான்.
    அனைத்துமே ஊழல் பண்ணும் கட்சிகள் என்றாலும், அன்றைய தேதிக்கு சில ஒப்பீடுகளை செய்தாவது ஒட்டு போட்டால் சரி தான்...பாப்போம் இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதத்தை..

    ReplyDelete
  17. இன்னிக்கு இல்லீங்கோ...நாளைக்கு எல்லாம் அவன் செயல் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளியிடலாம்

    ReplyDelete
  18. //
    பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். ///////


    உண்மை..

    ReplyDelete
  19. கண்டிப்பா ஓட்டப் போட்டுருவோம்.

    ReplyDelete
  20. ஓட்டு போட்டாச்சு. தேர்தலிலும் போட்டு விடலாம்

    ReplyDelete
  21. தலைவா..ஒட்டு போடாதவனும் 49 O பிரிவில் ஒட்டு போடுபவனும் ஒன்னு தான்.
    அனைத்துமே ஊழல் பண்ணும் கட்சிகள் என்றாலும், அன்றைய தேதிக்கு சில ஒப்பீடுகளை செய்தாவது ஒட்டு போட்டால் சரி தான்...பாப்போம் இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதத்தை../// correct..

    ReplyDelete
  22. டக்கால்டி சொன்னது…

    இன்னிக்கு இல்லீங்கோ...நாளைக்கு எல்லாம் அவன் செயல் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளியிடலாம்
    ////சீக்கிரம் ..

    ReplyDelete
  23. FOOD சொன்னது…
    ஆசிரியரின் விருப்பமே எமது விருப்பமும். வாருங்கள் விரைவில் ஒரு புது பதிவோடு./// Thanks..

    ReplyDelete
  24. பாட்டு ரசிகன் சொன்னது…

    //
    பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். ///////

    உண்மை.. //// Thanks...

    ReplyDelete
  25. தமிழ் 007 சொன்னது…

    கண்டிப்பா ஓட்டப் போட்டுருவோம்.
    /// correctu...

    ReplyDelete
  26. பாலா சொன்னது…

    ஓட்டு போட்டாச்சு. தேர்தலிலும் போட்டு விடலாம்
    /// Thanks..

    ReplyDelete
  27. 49o பிரிவில் ஓட்டு போட சென்றால் அங்கிருப்பவர் சொல்வது ஏன் தம்பி ஒரு ஓட்ட வீண்டிக்கிற ஏதாச்சும் ஒண்ணுல அமுக்கிட்டு போ.. அப்படி இல்லனா பல இடத்துல 49o வாய்ப்பே இல்லாம தான் இருக்கு.. இதெல்லாம் ஒரு பொலப்பா???

    ReplyDelete
  28. //பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். //

    சத்தியமான உண்மை...

    ReplyDelete
  29. very true n good post..

    ReplyDelete
  30. முற்றிலும் உண்மையான செய்தியைச் சொல்லும் பதிவு.. ஓட்டுப் போட்டவனை விட ஓட்டுப் போடாதவர்களால் தான் இந்த நாடுக் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனது ...

    ReplyDelete
  31. என்ன நண்பரே...ஒரே...காபி பேஸ்ட்ல இறங்கிட்டீங்க....

    ReplyDelete
  32. நம்மள மாதிரி ரெண்டு தளம் வச்சுக்கக்காங்க....காபி பேஸ்ட் க்கு ஒன்னு...சொந்த சரக்குக்கு ஒண்ணுன்னு

    ReplyDelete
  33. //நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.//
    சரியாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  34. தம்பி கூர்மதியன் சொன்னது…

    49o பிரிவில் ஓட்டு போட சென்றால் அங்கிருப்பவர் சொல்வது ஏன் தம்பி ஒரு ஓட்ட வீண்டிக்கிற ஏதாச்சும் ஒண்ணுல அமுக்கிட்டு போ.. அப்படி இல்லனா பல இடத்துல 49o வாய்ப்பே இல்லாம தான் இருக்கு.. இதெல்லாம் ஒரு பொலப்பா???
    --- வாங்க நண்பரே.. எங்க ரொம்பநாளா நம்ம பக்கம் வருவதில்லை..

    ReplyDelete
  35. சங்கவி சொன்னது…

    //பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும். //

    சத்தியமான உண்மை...
    -- நன்றி...

    ReplyDelete
  36. Kalpana Sareesh சொன்னது…

    very true n good post..
    --- Thanks..

    ReplyDelete
  37. இக்பால் செல்வன் சொன்னது…

    முற்றிலும் உண்மையான செய்தியைச் சொல்லும் பதிவு.. ஓட்டுப் போட்டவனை விட ஓட்டுப் போடாதவர்களால் தான் இந்த நாடுக் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனது ...
    /// Thanks...

    ReplyDelete
  38. ரஹீம் கஸாலி சொன்னது…

    என்ன நண்பரே...ஒரே...காபி பேஸ்ட்ல இறங்கிட்டீங்க....
    ----என்னுடைய மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது நண்பா.. நேரமின்மை... இனி தவிர்க்கிறேன்.....

    ReplyDelete
  39. ரஹீம் கஸாலி சொன்னது…

    நம்மள மாதிரி ரெண்டு தளம் வச்சுக்கக்காங்க....காபி பேஸ்ட் க்கு ஒன்னு...சொந்த சரக்குக்கு ஒண்ணுன்னு
    --- நீங்க என்னுடைய பதிவுலக குரு உங்களால் எதுவும் முடியும்.. இந்த ஒரு தளத்திற்கே நேரம் இன்மையால் கடினமாயிருக்கிறது.. மற்றபடி கருத்துக்கு நன்றி நண்பா?

    ReplyDelete
  40. சென்னை பித்தன் சொன்னது…

    //நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.//
    சரியாகச் சொன்னீர்கள்! --- நன்றி..

    ReplyDelete
  41. ம்ம்ம்ம் பார்க்கலாம்....

    ReplyDelete
  42. இவனுக சோம்பேறி பயலுக பாஸ் எதாவது காரணம் சொல்லிட்டு படுத்திருப்பானுக..

    ReplyDelete
  43. என்ன கொடுமை எவனோ மைனஸ் ஓட்டு போட்ருக்கான்

    ReplyDelete
  44. அருமையான பகிர்வு நன்றி

    ReplyDelete
  45. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

    ம்ம்ம்ம் பார்க்கலாம்....
    // Thanks..

    ReplyDelete
  46. shanmugavel சொன்னது…

    sarithaan vaathyaare!
    /// Thanks..

    ReplyDelete
  47. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    இவனுக சோம்பேறி பயலுக பாஸ் எதாவது காரணம் சொல்லிட்டு படுத்திருப்பானுக..
    --- நன்றி..

    ReplyDelete
  48. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    என்ன கொடுமை எவனோ மைனஸ் ஓட்டு போட்ருக்கான்
    --- வினை விதைத்தவன் வினை அறுப்பான்..

    ReplyDelete
  49. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    அருமையான பகிர்வு நன்றி
    ------------------------நன்றி நண்பா...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"