9/30/2011
இலவசமா பொருட்கள் குடுக்கப் போறீங்களா ஜெயா மேடம் வெயிட்..
Friday, September 30, 2011
அரசியல், இலவசங்கள், கிரைண்டர், செய்திகள், டேபிள் பேன், மிச்சி, லாப்டாப்
15 comments
நல்ல கம்பெனியில் தயாரிக்கப்படும், எந்த பொருளாக இருந்தாலும், அனைத்துப் பொருட்களிலும், அதன், 'சீரியல் எண்' மற்றும் தயாரிக்கப்பட்ட 'லாட், பேட்ச் எண்' தவறாமல் குறிக்கப்பட்டிருக்கும். எனவே, மூன்று பொருட்களையும், ரேஷன் கடைகளில் கொடுக்கும் போதே, ஒவ்வொரு பொருளின் சீரியல் எண்ணை, ரேஷன் கார்ட்டில் பொறுமையாக, கவனமாக பதிந்து, மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
9/29/2011
முரண் - சினிமா விமர்சனம் அல்ல...
சாரலாய்க் கொட்டும்
பனிக்காலங்களின்
வைகைறைகளில்
சாணம் தெளித்து
வாசல் கூட்டி
நடுங்கும் கரங்களால்
மாக்கோலம் தீட்டி
பரங்கிப் பூச்சூட்டிய
அலங்கார அழகை
ஊரே ரசிக்க
மகிழ்ந்துபோவாள் அம்மா
விடியலில்
மௌனமாய்க் கரையும்
எறும்புகளின் பசி...
பனிக்காலங்களின்
வைகைறைகளில்
சாணம் தெளித்து
வாசல் கூட்டி
நடுங்கும் கரங்களால்
மாக்கோலம் தீட்டி
பரங்கிப் பூச்சூட்டிய
அலங்கார அழகை
ஊரே ரசிக்க
மகிழ்ந்துபோவாள் அம்மா
விடியலில்
மௌனமாய்க் கரையும்
எறும்புகளின் பசி...
2.
நீங்கள்உங்களையே தேடி
செல்கையில்
உள்மனதில்
அடி ஆழத்தில்
கேட்குமே ஒரு குரல்..
உண்மையான குரல்...
கேட்டதுண்டா எப்போதாவது?
3.
நிஜமாய் இருக்கிறேன் நான் முரனானவன் என்று
எல்லோரும்
முகம் சுழிக்கிறார்கள் ...
9/28/2011
கேரளாவைப் பார்த்து கற்றுக்கொள்வோமா?
நிலப்பட்டா, அரசு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், உதவித் தொகைகள் என, பலவும் காலதாமதம் செய்யப்படுவதும், ஏதாவது உப்பு சப்பற்ற காரணங்களைக் கூறி, விண்ணப்பத்தைத் தட்டிக் கழிப்பதும், பிறகு அதையே காரணமாக வைத்து, அரசு அலுவலர்கள் லஞ்சம் பெறுவதும், வாடிக்கையான விஷயம்.
பொது மக்களும், உரிய கட்டணங்களோடு, லஞ்சமாக ஒரு தொகையை ஒதுக்கி வைப்பதும் வழக்கமாகி விட்டது.ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், ஒரு பணிக்கு எவ்வளவு கட்டணம், அப்பணி எவ்வளவு நாட்களில் முடியும், அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், தகவல் தெரிவிக்க வேண்டிய அதிகாரியின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்ட, தகவல் பலகை மட்டும், பெரிதாக மாட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அதை உண்மையென நம்பி, களத்தில் இறங்கினால், வேலைக்காகாது என்பது வேறு விஷயம். 'நிலப்பட்டா வழங்க ஒரு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கி பிடிபட்டார்' என, பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளிவந்தாலும், அடுத்த கிராம நிர்வாக அலுவலர், லஞ்சம் வாங்க அஞ்சுவதே இல்லை.
காலதாமதம் செய்து லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும் அலுவலர்களை, காலதாமதம் செய்தால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அதுவும் மீட்டர் வட்டி போல் என்று சட்டம் போட்டால், கண்டிப்பாக, நேர்மையாக, சுறுசுறுப்பாக பணிபுரிய வைக்கும்.
நிதர்சனம் இவ்வாறிருக்க, பொதுமக்கள் துன்பப்படக் கூடாது என்பதற்காக, கேரள அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.அதன்படி, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளில் காலதாமதம் ஏற்படுத்தினால், அரசு அலுவலர்களுக்கு தினமும், 250 ரூபாய் வீதம் அதிக பட்சமாக, ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பக்கத்து வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்தால், நாமும் அதை கடைபிடிப்பதில் தவறில்லையே... கேரள அரசின் வழியைப் பின்பற்றி தமிழக அரசும், இதுபோன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தலாமே! முதல்வர் முன் வருவாரா?
9/27/2011
இனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்?!
தங்களைக் காட்டிக் கொடுக்காமலிருக்க, ஐந்து கோடி தரத் தயாராக இருக்கின்றனர் பயங்கரவாதிகள். கூடிய விரைவிலேயே ஜனாதிபதி மாளிகையிலும், பார்லிமென்டிலும் குண்டு வெடித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம், நம் காவல்துறையும், உளவுத் துறையும், அந்த அளவுக்கு மிகவும் உஷாராக இருக்கின்றன.
இனிமேல், இந்தியாவில் குண்டு வெடிப்பது, அன்றாட நிகழ்ச்சியாகிவிடும். ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படும் தீபாவளி, இனி, நித்திய தீபாவளியாகிவிடும்.
சிதம்பரத்திற்கு, வங்கிகளைத் திறக்கத் தான் நேரம் இருக்கிறது. சிவராஜ் பாட்டீல், உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றவில்லை என காரணம் காட்டி, இவரை உள்துறை அமைச்சராக்கினர். பாவம், இவரது காலத்திலும், குண்டுகள் தாராளமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன.
இனிமேல், தூக்குத்தண்டனையே வேண்டாம் என்ற முடிவுக்கு நம் அரசியல்வாதிகள் வந்துவிட்டதால், இனி கொலை, கொள்ளைகள் தாராளமாக நடக்கும். கோர்ட்டுகள் யாரையும் தண்டிக்கவே முடியாது. உலகத்திலிருக்கும் அத்தனை பயங்கரவாதிகளும் அடைக்கலம் தேடிவர, நம் இந்தியா வழிவகை செய்துவிட்டது.
இனிமேல், குண்டு வெடிப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாம் அவரவர் தலையெழுத்து என்று சொல்லி, அமைதியாகிவிடுவர்.
எதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே?
9/24/2011
அசுர வேகத்தில் அட்டகாசம் - ஓர் அதிர்ச்சித் தகவல்
அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.
9/22/2011
9/19/2011
9/17/2011
அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
முகப்புத்தகத்தில் கலக்கியவை ..
**********************************************************************************
அப்பா ; உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே..
ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..
மகள் ; அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?
அப்பா ; பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!
**********************************************************************************
ப.வீ.காரர் ; மிஸ்டர் மொக்கை.. உங்ககிட்ட இருக்கற ரயில்வே
கைடு கொஞ்சம் கொடுங்களேன்.. கும்பகோணத்திலிருந்து
சென்னை எவ்வளவு தூரம்ன்னு பார்த்துட்டு தரேன்..
மொக்ஸ் ; அடடே.. அது பழைய கைடாச்சே.. இப்போ எல்லாம்
மாறிப் போயிருக்குமே..!
**********************************************************************************
சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்ப்ர்..
அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!
அப்படியா..? என்ன அது கடைசி வரி.. ?
அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!
**********************************************************************************
காதலன் ; உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா
என்ன செய்யறான்னு சொல்றியா..?
காதலியின் தம்பி ; இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு..
எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!
**********************************************************************************
என்ன மொக்கை சார்.. டூத் பேஸ்டை தலையில்
தேய்ச்சுகிட்டு இருக்கீங்க..?
ஈறு உபாதைக்கு சிறந்ததுன்னு போட்டிருக்குதே.. எனக்கு தலை
பூரா ஈரும் பேனுமா இருக்கு..!
**********************************************************************************
நண்பர் ; மொக்கை சார்..! நீங்க எழுதியிருக்கற கதையை
எங்கேயோ படிச்சது போல இருக்கே..?
மொக்ஸ் ; உங்களுக்கு இந்தி படிக்கத் தெரியுமா..?
நண்பர் ; தெரியாதே சார்..
மொக்ஸ் ; அப்பன்னா நீங்க இந்தக் கதையை ஏற்கனவே
படிச்சிருக்கவே முடியாது..!
**********************************************************************************
டாக்டருக்கு இதுதான் முதல் ஆபரேஷனா ஸிஸ்டர்..?
ஆமாம்.. எப்படித் தெரியும்..?
ஆபரேஷன் வாங்க கத்தி வாங்கணும்ன்னு அட்வான்ஸ் கேட்கறாரே..!
**********************************************************************************
போலீஸ் ; உங்க வீட்ல திருடிக்கிட்டு ஓடின வேலைக்காரி
அங்க அடையாளம் சொல்ல முடியுமாம்மா..?
எஜமானி ; என்னங்க.. எதோ கேக்கறாங்க பாருங்க.. !
**********************************************************************************
ஆசிரியர் ; அக்கால ஆட்சிக்கும் இக்கால ஆட்சிக்கும் என்ன வேறுபாடு..?
சின்னா ; அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
**********************************************************************************
ஏண்டி..? பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்தவங்க பொண்ணு
பேரு ரமாவா..?
ஆமாங்க.. ஏன் கேக்கறீங்க..?
இங்கே பாரு உன் பையன் ராமஜெயம் எழுதியிருக்கிற அழகை..
ரமா ஜெயம்..ரமா ஜெயம்ன்னு !
**********************************************************************************
காதலி ; ஒண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கணும்.. இல்லே
தற்கொலை பண்ணிக்கணும்.. என்ன கோபால் சொல்றீங்க..?
காதலன் ; எப்படியும் நான் தப்பிக்கவே வழி இல்லையா கீதா..?
**********************************************************************************
9/16/2011
முதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...!?
'வகுப்புக் கலவர தடுப்பு மசோதா' என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, தமிழக முதல்வர் எச்சரித்தது, அனைவருக்கும் நினைவிருக்கும்.
வகுப்புக் கலவர தடுப்பு மசோதா, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் வடிவமைத்தது.
இந்தியாவில் எங்கு மதக் கலவரம் நடந்தாலும், அதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு, அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய, இம்மசோதாவின் ஒரு பிரிவு அனுமதிக்கிறது.
இதனால், இம்மசோதாவில் உள்ள பாதுகாப்பை பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மையினர் கலவரத்தை தூண்டி விட்டாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பெரும்பான்மை இந்துக்கள் தான் பாதிக்கப்படுவர்.
அதாவது, விசாரணைக்கு முன்பே, தீர்ப்பு வாசிக்கப்படுவதைப் போல! மேலும், இம்மசோதா, சட்டமாக்கப்பட்டால், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று, அம்மாநில அரசை கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை பிரகடனப்படுத்த முடியும்.
எந்தவொரு கலவரத்தையும் அடக்குவதற்குத் தேவையான காவல்துறையை, அந்தந்த மாநில அரசே தன் வசம் வைத்துள்ளது. (பரமக்குடி கலவரம் வழக்கில் உள்ளதால் அதைப் பற்றி தீர்ப்பு வந்தவுடன் பேசுவோம் - குட்டு) மேலும், இது, அம்மாநிலத்தின் உள்விவகாரம். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் கேட்டு, துணை ராணுவத்தின் உதவியைப் பெற முடியும்.
எனவே, இம்மசோதாவே தேவையற்றது. இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பதே, அரசியல் சட்டத்துக்கு முரணானது. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அரசின் அமைச்சரவை அங்கீகரித்த எந்த ஒரு சட்டமும் அல்லது முடிவும், இந்த தேசிய ஆலோசனை கவுன்சிலில் வைத்து, அதன் அங்கீகாரத்தை பெற்ற பின் தான், அதை நடைமுறைப்படுத்த முடியும்.
இந்தியாவில், இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பது, வல்லரசு நாடுகளின், 'வீட்டோ பவர்' அதிகாரத்துக்கு சமமானது என்றால், அரசியலை ஒரு பாடமாக விரும்பிப் படித்த பட்டதாரிகளுக்கு எளிதில் புரியும். இது, சட்ட முன்வடிவு பெறுவதற்கு முன், பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்க, தன் கட்சி பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
'வரும் பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு' என்ற பழமொழியின்படி, தமிழக முதல்வர் ஜெ.,யின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கது.
9/15/2011
11 குழந்தைகள் மரணம்.? நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?
Thursday, September 15, 2011
அரசியல், ஆந்திரா, சமூகம், செய்திகள், மருத்துவம், விழிப்புணர்வு
25 comments
9/14/2011
ஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் முன்னேயாவது...
கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக இன்று 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு நடைபெறும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான போராட்டம்.
அகில இந்திய அளவில் இதை கொண்டுசெல்லவேண்டும். அன்னாஹசாரே போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் எல்லோரும் ஆதரவு தெரிவித்தது போல இதற்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட கோரியும், இதற்காக நடை பெறும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவர்கள் ஒன்று திரளவேண்டும்.
ஈழ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம், மீனவர்கள் பிரச்சனைக்காக ஒன்று கூடினோம், இந்தப் பிரச்சனைக்கு ஏன் ஒதுங்குகிறோம்.
(இந்த உண்ணாவிரதத்தில் நம் பதிவர் சகோதரர் கூடல்பாலா அவர்களும் கலந்து கொண்டுள்ளார்)
(இந்த உண்ணாவிரதத்தில் நம் பதிவர் சகோதரர் கூடல்பாலா அவர்களும் கலந்து கொண்டுள்ளார்)
ஒன்றுபடுவோம் உறவுகளே...
அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.
அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.
9/12/2011
விரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்?!
சுப்ரீம் கோர்ட், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில்? மேற்கொள்ளும் நடவடிக்கையைப் போல், தமிழகத்தில் நடந்துள்ள, மிகப் பெரிய குற்றமான நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், எந்த உயர் அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும், தனிப்பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அத்தனையும் தீர விசாரணை செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கே மிகுந்த காலம் தேவைப்படும் என்றே தோன்றுகிறது.
9/08/2011
இந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்?
9/07/2011
சிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா? அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...!
அனேக ஹொட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த காணொலி மூலம் காணலாம்.
விலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்
கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது உணவுப்பொருட்களின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காய விலை 57.1 சதவீத மும் உருளைக்கிழங்கு விலை 13.33 சதவீதமும் பழங்களின் ஒட்டுமொத்த விலை 21.58 சதவீத மும் காய்கறி விலை 18.72 சதவீதமும் அதிகரித் துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
9/06/2011
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்
- தொடக்கம் : 1983
- முதலீடு : ரூ.15 கோடி
- தலைமை நிலையம் : எழும்பூர், சென்னை
- நிர்வாக மண்டலங்கள் : சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்
- மதுக் கடைகளின் எண்ணிக்கை : 6500
- சேமிப்பு கிடங்கு : 41
- நிகர வருவாய் : ரூ.12491 கோடி(2009&10ம் ஆண்டு)
- ஊழியர்கள் : 30000
- முதலாளி : தமிழ்நாடு அரசு
- வாடிக்கையாளர்கள் : ‘‘குடி’’மகன்கள் அட நீங்கதான் ..
ஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடியோ இணைப்பு
9/04/2011
2ஜி பிரச்சனையில் ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்திய அரசு?
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று "டிராய்" ஒருபுறம் ஆ.ராசாவுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ள நிலையில், மறுபுறம் சிபிஐ-யும் நேற்று முன்தினம் தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கைவிரித்துள்ளதால், காட்டிக்கொடுப்பு பயத்தில் மத்திய அரசு 2ஜி வழக்கின் போக்கை மாற்றுகிறதா என்ற கேள்வி பலமாக எழுகிறது..
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால், அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
9/03/2011
அம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்!
பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான Peugeot Citroen (உச்சரிப்பு – பேர்ஜோ சித்ரோ), இந்தியாவில் தமது தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்ததே தமிழகத்தைத் தான்.
தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் வரை அவர்களது ஆய்வுக் குழு வந்து பார்வையிட்டுச் சென்றது. அதையடுத்து ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, கார் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.
வெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்
"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்." இதுவே வெற்றியின் ரகசியம்.
எங்கு சென்றாலும் இளைஞர்களிடம், வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையையும், லட்சியத்தையும், கனவையும் நான் பார்க்கிறேன்.
9/02/2011
தங்கத்தின் மீது ஆசையா.. வேண்டாம் விபரீதம்...
நாளுக்கு நாள், ஏறி வரும் தங்கத்தின் விலை பிரமிக்க வைக்கிறது. சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டு விட்ட தங்கம், இனி பலருக்கு எட்டாக் கனி தான். "பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன்' என்ற வழிமொழியை, நடைமுறைப் படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
இந்தியாவில், நடுத்தரக் குடும்பங்களில் கூட, 10 சவரன் நகை இல்லாமல், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், கவுரவ குறைச்சல் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது. கந்து வட்டி கடனில் தான், பல திருமணங்கள் நடந்தேறுகின்றன. இதற்காக நிலங்களும், வீடுகளும் அடமானம் வைக்கப்பட்டு, பின், வட்டி கட்ட முடியாமல், அவை மூழ்கிப்போகின்றன.
தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும். வல்லரசு நாடுகளின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப, தங்கத்தின் விலை ஆட்டம் போடுகிறது. அந்த ஆட்டங்களிலிருந்து, நாம் விலகி நிற்பதே, விவேகமான செயல். தங்க நகைகள், முதலீடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் சொத்தாக கருதப்படுகிறது.
இந்த காரணங்களுக்காக, பெற்றோர், திருமணத்தின் போது, தங்கள் பெண்ணிற்கு மனம் உவந்து அளிக்கும் தங்க நகைகளுக்கு பதில், நீண்ட கால, அரசு கடன் பத்திரங்கள், வங்கி வைப்பு நிதிபத்திரங்களை பரிசாக வழங்கலாம். இவைகளை வாங்கும் போது, செய்கூலி இல்லை. முதலீடாக மட்டுமில்லாமல், தொடர்ந்து வட்டி வருவாயை அளிக்கும் இவைகளை, கழுத்து சங்கிலியைப் போல், திருடர்கள் அறுத்து செல்ல முடியாது.
நெருக்கடி தருணங்களில் இவைகளின் மீது, குறைந்த வட்டியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.விண்ணுக்கு விலை செல்லும் தங்கத்தை துரத்துவதை விட்டு விட்டு, நம் பொருளாதார சக்திக்குட்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துவது தான், நடுத்தர வர்க்கத்துக்கு நல்லது.
இம்மாதிரி முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.தங்கத்தை ஒதுக்கும், மனப்புரட்சி தேவை!
Subscribe to:
Posts (Atom)