Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/07/2011

விலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்


உணவுப்பொருள் மீதான பணவீக்கம் இரட் டை இலக்கத்தை எட்டியுள்ளது. ஐந்து மாத இடைவெளிக்குப்பின் 10.05 சதவீதமாக உண வுப் பொருள் மீதான பணவீக்கம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது உணவுப்பொருட்களின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காய விலை 57.1 சதவீத மும் உருளைக்கிழங்கு விலை 13.33 சதவீதமும் பழங்களின் ஒட்டுமொத்த விலை 21.58 சதவீத மும் காய்கறி விலை 18.72 சதவீதமும் அதிகரித் துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.


விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வழக்கம்போல ஆரூடம் கூறி வருகிறார். வரக் கூடிய மாதங்களில் உணவுப்பொருட்களின் விலை குறையும் என்றும், இதனால் இந்தப் பொருட்களின் மீதான பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். பருவ மழை சிறப்பாக இருப்பதால் வேளாண் பொருள் விளைச்சல் அதிகரிக்கும். இதனால் விலை குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாய விளைபொருளின் விலைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் இடையில் முக்கியப் பங்குண்டு என்பது மறுக்கக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அதே நேரத்தில் இன்றைக்கு உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிப்பது இயற்கை மட்டுமல்ல, மத்திய-மாநில அரசுகள் பின்பற்றும் தாராளமய பொருளாதாரக் கொள்கை யும், இதனடிப்படையிலான முன்பேர வர்த்தக நடைமுறையும் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

முன்பேர வர்த்தக முறையின் தீங்கு குறித்து ஆயிரமாயிரம் காரணங்களை இடதுசாரிக்கட்சி களும் உள்நாட்டு சிறு வர்த்தக அமைப்புகளும் பட்டியலிட்டு இந்த முறைக்கு முடிவுகட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. 


முன்பேர வர்த்தக முறையில் சாதகமான பலன் என்பது குறித்து ஒரு காரணத்தைக்கூட மத்திய ஆட்சி யாளர்கள் முன்வைக்கவில்லை. ஆனால் அந்த முறையை தடை செய்ய இவர்கள் தயாராக இல்லை. வர்த்தகச் சூதாடிகள் பலன் பெறுகிறார் கள் என்பதைத் தவிர நாட்டுக்கோ, நாட்டு மக் களுக்கோ இந்த முறையால் நயா பைசா அளவுக்குக்கூட பயனில்லை.

இது ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த விவசாய மும் நிலைகுலைந்து வருவது உணவுப்பொருள் மீதான பணவீக்கத்திற்கு ஒரு காரணமாக உள் ளது. அரசு பின்பற்றும் விவசாயிகளுக்கு விரோத மான கொள்கையால் உரமானியம் போன்றவை வெட்டப்படுகின்றன. 


விவசாயத்துறையே பன் னாட்டு நிறுவனங்களின் சூதாட்டக்களமாக மாற் றப்பட்டு வருகிறது. நமது நாட்டின் விவசாயத் தை அந்நியர்களிடம் முற்றாக ஒப்படைக்கவும் அரிசி, கோதுமைக்குக்கூட அடுத்த நாடுகளி டம் கையேந்தி நிற்பதற்கான நிலையை மத் திய ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

உணவுப்பொருள் இறக்குமதியில் பெரும் தொகை களவாடப்படுகிறது. எனவேதான் ஆட்சியாளர்களுக்கு உணவுப்பொருள் மீதான பணவீக்கம் உயர்வது குறித்து கவலையில்லை. இறக்குமதி செய்து கொள்ளையடிக்கலாம் என்று திட்ட மிடுகிறார்கள். விவசாயிகளும் சாதாரண எளிய மக்களும் எக்கேடுகெட்டால் அவர்களுக்கு என்ன?



கவலைப்பட வேண்டியது மக்களும், மக்களுக்காகப் பாடுபடும் இயக்கங்கள்தான். சிந்திப்போம் உறவுகளே...

28 comments:

  1. //விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.//

    இவனுங்க கடைசி வரை இந்த பிரச்சினையை தீர்க்க மாட்டாங்க அடுத்த தேர்தலுக்கு ஒரு மாசம் முன்னாடி எதாவது விவசாய கடனை தள்ளுபடி பண்ணிட்டா போதும் நம்மாளுங்கள பல்லை இளிச்சுகிட்டு ஓட்டு போட்டுருவாங்க

    ReplyDelete
  2. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மாப்ள...பொம்மை ஆட்சி நடக்குது...என்னத்த சொல்றது!

    ReplyDelete
  4. யாரு ஆட்சிக்கு வந்தாலும் பொதுமக்கலுக்கு எந்த பிரயோசனமுமில்லே.அவங்க பலவிதத்திலும் போடிக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கு. அதிலும் இந்த விலைவாசி ஏற்றம் ரொம்பவே அதிக கஷ்ட்டம் கொடுக்குது

    ReplyDelete
  5. பயனுள்ள தெளிவான சிந்திக்கத் தூண்டிச் செல்லும்
    அருமையான பதிவு
    பதிவுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உணவு பொருட்கள் விலை ஏற ஏற ஒட்டு மொத்த வாழ்க்கையே மாறிவிடும்

    ReplyDelete
  7. மச்சி... பதுக்கல் தான் முதல் காரணம்...

    ReplyDelete
  8. ஊக வாணிகமும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைகள் இல்லையென்றால் இங்கு விலை உயர்வு கண்டிப்பாக இருக்காது...

    ReplyDelete
  9. தமிழ் மணம் ஆறு

    ReplyDelete
  10. அறிந்து கொள்ள வேண்டிய பதிவு

    ReplyDelete
  11. நல்ல அலசல்

    ஆனா இங்க ஒரு கோளாறு இருக்கு யாருக்கும் இது அவளவா தெரியறதில்ல, தெரிஞ்சவங்களும் கண்டுக்கிறது இல்லை.

    நம்ம ஊரு பிரகஸ்பதி இருக்காரே அதான் பிரதமரு (யாரா வேணா இருக்கலாம் இப்ப இருக்கிறவரு மட்டும் இல்ல) ஏதாவது நாட்டுக்கு டூர் போகும் போது ஏதாவது ஒப்பந்தத்துல இவ்வளவு உணவு தானியம் குடுக்குறோம் சக்கரை குடுக்குறோம்ன்னு கையெழுத்து போட்டுட்டு வந்துடுவாங்க, அது கண்டிப்பா குடுத்தே ஆகணும் இல்லாட்டி அவனுங்க தப்ப பேசுவாங்க நம்ம மரியாதை கெட்டு போகும், அதனால எல்லா வருசமும் இருக்கோ இல்லையோ மொதோ வெளிய எக்ஸ்போர்ட் பண்ணிடுவாங்க, இப்ப விளைச்சல் கம்மி ஆகும் போது நமக்கு தேவையான அளவு கிடைக்காது அப்ப விலை ஏறும், இங்க இல்லையா எங்க எக்ஸ்போர்ட் பண்ணுனான்களோ அங்கே இருந்தே இம்போர்ட் பண்ணுவாங்க, எக்ஸ்போர்ட் பண்ணும் போது ஒரு வரி இம்போர்ட் பண்ணும் போது ஒரு வரி அரசுக்கு ரெட்டை லாபம் நமக்கு நல்ல நாமம்...

    ReplyDelete
  12. உணவு பதுக்கல்கள் இருக்கும் வரை விளைஎர்ரத்தை ஒன்னும் செய்ய முடியாது...!

    ReplyDelete
  13. முதல்ல காங்கிரசை வீட்டுக்கு அனுப்பணும்....

    ReplyDelete
  14. பயனுள்ள பகிர்வு. . .

    ReplyDelete
  15. பசியின்றி புசித்து
    தேவைக்கு மீறிய
    பொருளைஎல்லாம்
    பதுக்கி வைக்கும்
    பெரும் பெருச்சாளிகளே
    இவ்விலை உயர்வுக்கு காரணம்..

    ReplyDelete
  16. எது எப்படியோ சாமன்ய மக்களின் வயிற்றில் அடிக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  17. பயன் உள்ள பதிவே..... முடிவு நல்லதாவே இருக்கட்டும்..

    ReplyDelete
  18. ஆம் ,சிந்திப்போம் ,சரி தமிழ்மணம் எங்கே?

    ReplyDelete
  19. இந்த கட்சிக்கு தான் ஆளுகிற ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான பிரச்சனை. இதில் நாட்டை கவனிக்க எங்கே நேரமிருக்கு?

    ReplyDelete
  20. இந்த அரசு எதுவும் செய்யாது!

    ReplyDelete
  21. அரசியல் பதிவுன்னா நமக்கு அலர்ஜி

    ReplyDelete
  22. நல்ல ஆய்வான உண்மை நிலையை உணர்த்தும் பதிவு
    ஆனால் செவிடன் காதில்
    ஊதிய சங்கே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்,
    விலைவாசி உயர்விற்கான காரணங்கள்,,

    விலை உயர்வினைத் தூண்டும் அரசியல் மாற்றங்களின் பின்னணி என அசத்தலான ஆராய்ச்சியினைத் தந்திருக்கிறீங்க.
    ரொம்ப நன்றி பாஸ்.

    ReplyDelete
  24. ஊக வணிகம் குறித்து பல பேருக்கு விழிப்புணர்ச்சி இல்லாததே காரணம்... இது பற்றிய பதிவு விரைவில் ஆணிவேரில் வரும் என்று இங்கு கூறிக் கொள்கிறேன்..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"