Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/27/2011

இனி இந்தியாவும் பாகிஸ்தானாய் மாறிவிடும்?!


டில்லி ஐகோர்ட்டில் வெடிகுண்டு விபத்தில், இறந்தவர்களுக்கு பணமும், கருணையும் காட்டி, தன் கடமையை முடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படுமாம்! 

தங்களைக் காட்டிக் கொடுக்காமலிருக்க, ஐந்து கோடி தரத் தயாராக இருக்கின்றனர் பயங்கரவாதிகள். கூடிய விரைவிலேயே ஜனாதிபதி மாளிகையிலும், பார்லிமென்டிலும் குண்டு வெடித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம், நம் காவல்துறையும், உளவுத் துறையும், அந்த அளவுக்கு மிகவும் உஷாராக இருக்கின்றன. 

இனிமேல், இந்தியாவில் குண்டு வெடிப்பது, அன்றாட நிகழ்ச்சியாகிவிடும். ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படும் தீபாவளி, இனி, நித்திய தீபாவளியாகிவிடும். 

சிதம்பரத்திற்கு, வங்கிகளைத் திறக்கத் தான் நேரம் இருக்கிறது. சிவராஜ் பாட்டீல், உள்துறை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றவில்லை என காரணம் காட்டி, இவரை உள்துறை அமைச்சராக்கினர். பாவம், இவரது காலத்திலும், குண்டுகள் தாராளமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. 

இனிமேல், தூக்குத்தண்டனையே வேண்டாம் என்ற முடிவுக்கு நம் அரசியல்வாதிகள் வந்துவிட்டதால், இனி கொலை, கொள்ளைகள் தாராளமாக நடக்கும். கோர்ட்டுகள் யாரையும் தண்டிக்கவே முடியாது. உலகத்திலிருக்கும் அத்தனை பயங்கரவாதிகளும் அடைக்கலம் தேடிவர, நம் இந்தியா வழிவகை செய்துவிட்டது. 

இனிமேல், குண்டு வெடிப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாம் அவரவர் தலையெழுத்து என்று சொல்லி, அமைதியாகிவிடுவர். 

எதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே?

25 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...தீவிரவாதம் என்பதை மூடி மறைக்கும் அரசு பம்மாத்து தான் ஞாபகத்துக்கு வருது என்ன கொடுமைய்யா!

    ReplyDelete
  2. தமிழ்மணம் இணைச்சு ஓடும போட்டாச்சு...

    ReplyDelete
  3. நாம சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியது தான்... அரசு எப்பவும் மௌனம் தான்

    ReplyDelete
  4. ஒவ்வொருமுறை பயங்கரவாதிகள் குண்டு வெடிக்கும்போதெல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொல்கிறார்கள்... அந்த இரும்புக்கரம் என்னதான் செய்துக்கொண்டிருக்கிறதோ?!

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கம் பாஸ்,

    தூக்குத் தண்டனைகள் நிறுத்தப்படும் பட்சத்தில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை அருமையான அரசியல் ஒப்பீடாகத் தந்திருக்கிறீங்க.
    பொறுத்திருந்து பார்ப்போம், காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  6. பாவம் பாஸ் மக்கள்

    ReplyDelete
  7. உண்மை மட்டுமல்ல இனி இதுதான் விதி.

    ReplyDelete
  8. //சே.குமார் said...

    உண்மை மட்டுமல்ல இனி இதுதான் விதி.////

    உன்ன மாதிரி, என்ன மாதிரி ஆளுங்க இருக்குற வரை, காயடிப்பதும் அடிக்கப்படுவதும் விதிதான்....

    #நீ என்ற ஒருமையைப் பயன்டுத்தியதுக்கு மன்னியுங்கள்....

    ReplyDelete
  9. தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்று நினைக்கும் கட்சி நான். உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்.

    ReplyDelete
  10. குண்டு வைத்தவனை பிடிப்பதை விட, பிடிபட்டவனையும் விடுவிக்க தானே முயற்சிக்கிறார்கள்.

    ReplyDelete
  11. //
    இந்தியாவில் குண்டு வெடிப்பது, அன்றாட நிகழ்ச்சியாகிவிடும்
    //
    காங்கிரஸ் இருக்கும் வரை அப்படிதான்

    ReplyDelete
  12. //
    தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே?

    //

    உண்மைதான்

    ReplyDelete
  13. பயமாகத்தான் இருக்கு.

    ReplyDelete
  14. அஞ்சுவது அஞ்சமை பேதமை!

    ஆம்! அஞ்சுவது நியாமே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. எதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே?//காங்கிரஸ் இருக்கும் வரை அப்படிதான்இருக்கும்
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  16. நம் மக்களின் சகிப்பு தன்மைக்கு ஒரு அளவே கிடையாது போங்க, குண்டு வெடிச்ச சித்த நேரத்துல எல்லாத்தையும் மறந்துருறாங்க, இது நாட்டின் சாபக்கேடு!!!!!

    ReplyDelete
  17. தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக சகோ.கருண்...

    உங்கள் கவலைதான் எல்லோருக்கும் உள்ளது. என்ன செய்வது... பயங்கரவாதிகளை பிடிப்பதில்லை. பிடித்தாலும் தண்டனை கொடுப்பதில்லை. இதைவிட கொடுமை பயங்கரவாதிகளிடமே ஆட்சியை ஒப்படைபப்து குறித்து ஆலோசிப்பதுதான்...! @எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் நாம்..?

    பயங்கரவாதத்தை ஒழிக்கும் நம் முயற்சிகள் இப்படி எதிர் திசையில் பிரயாணித்தால்... இனி நம் நாட்டை அந்த இறைவன் மட்டுமே காப்பாற்ற முடியும் சகோ.கருண்.

    நல்லதொரு பதிவுக்கு மிக்க நன்றி சகோ.கருண்.

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு கருண் சார்..

    எல்லோரும் யோசிக்க வேண்டியதும் கூட

    ReplyDelete
  19. நீங்கள் அச்சப்படுவது நியாயம்தான் இன்று பயங்கரவாதம் தீவிரவாதம் என எல்லாவற்றையும் அரசே செய்யும்போது நாம் பயந்துதானே அக வேண்டி இருக்கிறது

    ReplyDelete
  20. எதையும் தாங்கும் இதயம் இருப்பதால், எந்த மாதிரியான இறப்பிற்கும், நம் இந்தியர்கள் பழகிக் கொள்வர். அப்பாவிகள் மட்டும்தான் குண்டுக்குப் பலியாவர். தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடித்து, அமைதியாகிவிடுவர். உண்மைதானே?


    ஆமா உண்மையிலும் உண்மைதான்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"