டில்லியில், 1997 முதல் இதுவரை, 13 குண்டுவெடிப்பு நாசவேலைகள் நடந்துள்ளன. ஆனால், அக்குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானோர், கண்டுபிடிக்கப்பட்டு கோர்ட்டின் முன் நிறுத்தப்படவில்லை. (செய்தி தினமலர்)
மும்பைத் தாக்குதலில், உண்மையான காவல் துறை அதிகாரிகள், வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, அஜ்மல் கசாபை உயிருடன் பிடித்தனர். ஆனால், அவன், தீனி போட்டு வளர்க்கப்படுகிறான்.
மேலும், தூக்குத் தண்டனையிலிருந்து, 'ஓட்டு வங்கி அரசியல்' காரணமாக, தப்பி விடுவானோ என்ற ஐயமும் உள்ளது. நம் இன்றைய தேவை, சர்தார் வல்லபாய் படேல் போன்றதொரு திடசித்தம் கொண்ட உறுதியான தலைமை. சிதம்பரம், கபில்சிபல், ராகுல் போன்ற வாய்ச்சொல் வீரர்களும், திக்விஜய் சிங் போன்ற கோமாளிகளும் அல்ல.
இம்முறையாவது தார்மீகப் பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம், பதவி விலகவேண்டும்.ஏதோ சிவாஜி ராவ் பாட்டிலை விட, திறமையானவர், உறுதியானவர் என அடையாளம் காணப்பட்டு, உள்துறைக்குப் பொறுப்பேற்ற சிதம்பரம், ஒரு வித்தியாசத்தையும் காட்டவில்லை.
வழக்கமான பல்லவியாக, 'பயங்கரவாதிகளை வேரறுப்போம், பயங்கரவாதத்திற்கென போராட்டத்தில் வெல்வோம்' என்று, வாய்ப்பந்தல் போடுகிறாரே தவிர, காரியத்தில் ஒன்றும் காணோம்.போதும், போதும் என்றளவுக்கு, மக்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் வந்த போதும், ராகுல் ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு வந்தபோதும், பாதிக்கப்பட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இனியாவது ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள், இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டுமே என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
மாப்ள சினிமா வீராதி(!) வீரர்களுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்ல போல....எல்லாம் சவ மயமாக்கிட்டு இருக்காரு!
ReplyDeleteமச்சி எப்போ அரசியல்வாதிங்க செயல்பட்டிருக்காங்க? வெறும் பேச்சு மட்டும் தான்..
ReplyDeleteஉண்மையான உண்மை!
ReplyDelete:)
இன்னும் எத்தனை பேரின் மரணத்துக்கு காத்திருக்கிறார்களோ.
ReplyDelete//
ReplyDeleteஇனியாவது ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள், இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டுமே என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்
/
very true
tamilmanam 5
ReplyDeleteஆளும் பொறுப்பில் இருப்பவங்க எப்பவுமே வாய்ச்சொல்லில் வீரர்களாகத்தானே இருக்காங்க.செயலில் காட்டினா பரவால்லே.
ReplyDeleteசரியா சொன்னீங்க பாஸ்
ReplyDeleteஓட்டுவங்கி அரசியலில் நியாயத்தையும் நேர்மையையும எதிர்பார்க்க முடியாது. இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு சில லட்சங்களை கொடுத்துவிட்டு ஒரு நாளைக்கு பல லட்சங்களை செலவிட்டு குண்டுவைத்த தீவிரவாதிகளுக்கு முழுபாதுகாப்புகொடுத்து ராஜஉபசாரம் நடக்கும் சிறையில்...தீவிரவாதிக்கு கருணைமனு ஆளுநரிடம் முறையிட வசதி ...ஆக மொத்தம் இறந்த அப்பாவி மக்களும் உயிரை பணயம் வைத்து பிடித்துக் கொடுத்த காவலர்களின் தியாகமும் கேலிக்கூத்தாகிவிடும். காலம் காலமாய் இதுதானே நடக்கிறது...
ReplyDeleteநெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட உள்துறை அமைச்சரையும் கையாலாகாத இந்த மத்திய அரசையும் நினைத்துவிட்டால்..
உண்மைதான் நண்பா... நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த....
ReplyDeleteபேருக்குதான் செயல் வீரர்கள்!
ReplyDeleteஉண்மையில் வாய்ச்சொல்லில் தான் வீரர்கள்!
ஆளும் வர்க்கம் கொஞ்சம் உத்திரவாதமா இருக்கவேண்டும்...
ReplyDeleteபேச்சு மட்டும் தான் அவர்களுக்கு தெரியும் .
ReplyDeletet.m -10
இனியாவது ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள், இப்போதைய தேவை, பேச்சல்ல, செயல் மட்டுமே என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteவாய்ச்சொல் வீரம் எதற்கு ஆகும்??
பயங்கரவாத செயல்கள் அடியோடு நிறுத்தப் பட்டால் ஆளும் வர்க்கத்தின் ஆயுள் அடியோடு குறைந்து விடும், ஆகையால் மறைமுகமாக் பயங்கரவாத செயல்களை இவர்கள் ஊக்குவித்து கொண்டு தான் இருப்பார்கள்... அனைவருக்கும் வேலை வாய்ப்பு, கற்க கசடற என்னும் கல்வி, மற்றும் சுகாதார மேம்பாடு இவை அனைத்தும் கிடைக்கும் அன்று தானாகவே காணாமல் போய் விடும் பயங்கரவாதம்... இந்த மாதிரி பயங்கரவாத செயல்கள் நடக்கும் பொழுது மத்திய அரசு செயல் படுத்தும் திட்டங்கள் எவை எவை கண்ணுக்கு புலப்படாமல் நிறைவேறுகின்றன என்று பாருங்கள் உண்மை புரியும்... சுனாமி தாக்கிய இரவு மத்திய அரசு கொண்டு வந்தது காப்புரிமை சட்ட திருத்தம்... இது போல் எவ்வளவோ மர்மங்கள் முக்கிய செய்திகளால் எங்கோ ஒரு மூலையில் இடம் பிடித்து நம் கண்ணுக்கு தெரியாமல் போய் விடுகின்றது..
ReplyDeleteAn internal change should be brought in...
ReplyDeleteமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.
இங்கே சொடுக்கவும்
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி