Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/11/2011

ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது




போனவார செய்தி: ஒருபோதும் தேர்தலில் போட்டியிடாத நபரை, (அன்னா ஹசாரேவை) மக்களின் பிரதிநிதியாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?



ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது. காங்கிரஸ் எம்.பி., சசிதரூரின் சமீபத்திய வெளிப்பாடு, அவரை, 
அரசியல்வாதி என்று ஒப்புக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.


இவரைப் போன்றோர், நாட்டின் அரசியலை அல்லது காங்கிரசின் சரித்திரத்தையாவது தெரிந்து கொண்டு வாயைத் திறப்பது தான், நியாயமாக இருக்கும்."ஒருபோதும் தேர்தலில் போட்டியிடாத நபரை, (அன்னா ஹசாரேவை) மக்களின் பிரதிநிதியாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' என்று கேள்வி எழுப்புகிறார்.


இன்று, உங்களைப் போன்றோரை, வாழ வைத்துக் கொண்டிருக்கும் காந்திஜி, எந்த தேர்தலில் நின்று, மக்கள் பிரதிநிதியாக போராடி, நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்?அவ்வளவு பின்நோக்கிக் கூட போக வேண்டாம், இன்று உங்களையெல்லாம், பார்லிமென்டில் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திச் செல்லும் மன்மோகன் சிங், எந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்?


முதலில், மன்மோகன் சிங்குக்கு, உங்கள் உபதேசத்தைக் கூறுங்கள்; பிறகு, அன்னா ஹசாரே பக்கம் வாருங்கள். பேசுவதற்கு முன், சற்று யோசியுங்கள். நாடே திரண்டு நின்று, அவரைப் பின்பற்றி, ஊழல் ஒழிப்பிற்காக போராடியது உங்கள் கண்களில் படவே இல்லையா?


"டிவி' கேமராக்கள் சகிதமாக, சில ஆயிரம் மக்களுடன், மைதானத்தில் அமர்ந்து போராடியவர், எப்படி மக்கள் பிரதிநிதியாக முடியும்' என்று கேட்கிறீர்களே... உங்களால், எம்.பி., என்ற பதவியை வைத்துக் கொண்டு, அதுபோல் ஒரு கூட்டத்தை அல்லது நீங்கள் கூறியிருப்பது போல, சில ஆயிரம் மக்களையாவது கூட்ட முடியுமா என யோசித்த பிறகு பேசுங்கள்.


பதவிக்காக போராடவில்லை; மக்களுக்காக போராடியவர் காந்தியவாதி அன்னா ஹசாரே என்பதை உணர்ந்து, மவுனம் காப்பதே உங்களைப் போன்றோருக்கு அழகு!

24 comments:

  1. உங்கள் பதிவுடன் இருவிதங்களில் வேறுபடுகிறேன்.

    1. மன்மோகன்சிங் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவில்லைதான், ஆனால் ராஜ்யசபா எம்பியாக இருப்பவர்,பிரதமர் ஆகுவதற்கு இந்திய அரசியல் சட்டம் அனுமதி அளித்துள்ளது.

    2.அப்படியே மன்மோகன் சிங் தேர்தலில் நின்றிருந்தாலும் நீங்கள் அவரை ஒரு எம்பியாகத்தான் தேர்ந்தெடுப்பீர்கள், பிரதமராக அல்ல. நமது தேர்தல் முறை பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை அல்ல.

    பாராளுமன்ற எம்பிக்கள் சேர்ந்து யாரை வேண்டுமென்றாலும் பிரதமர் ஆக தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுத்துள்ளது அரசியலமைப்புச் சட்டம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் 6 மாதங்களுக்குள் லோக்சபா/ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

    இது தவறான நடைமுறை என்றால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றக் கோர வேண்டும். அதைவிடுத்து இதை சிறுமைப்படுத்துவது, நமது ஜனநாயகத்தை நாமே கேவலப்படுத்திக் கொள்வது. அன்னா ஹசாரே ஆரம்பத்தில் இருந்து அதைத்தான் செய்து வருகிறார்.

    ReplyDelete
  2. என்னைப்பொறுத்தவரை பதவியில் இருப்பவர்கள் எதையும் கொஞ்சம் யோசிச்சு பேசணும்....

    ReplyDelete
  3. சூடான பதிவு தான்..ஆனாலும் பன்னியார் சொல்வதில் நியாயம் இருக்கு.

    ReplyDelete
  4. போனவார செய்தி: ஒருபோதும் தேர்தலில் போட்டியிடாத நபரை, (அன்னா ஹசாரேவை) மக்களின் பிரதிநிதியாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    ---

    சசி போன்று நாட்டுக்கு எதையும் செய்யாத நாய்கள் குலைத்துக்கொண்டே இருக்கும்,,,
    மன்மோகன் ராஜ்யசபா எம் பி யாக நுழைந்தவர்...ஆனால் அவர் தகுதியானவரா என்பது கேள்விக்குறியே..

    ஸ்பெக்டரம்,இலங்கை தமிழர் படுகொலை,அயல்நாட்டு ஊழல் பண விஷயம் ...இம்மூன்றில் கண்ணை மூடி காது வாய் பொத்தி குரங்கு போல் இருப்பதால் இந்தியாவின் முதன்மை குற்றவாளி அவர் தான்...

    ReplyDelete
  5. தேர்தலில் போட்டியிட்டு
    பலமுறை பாராளுமன்றம் சென்று
    மற்றவர்கள் எல்லா என்னத்தை பெரிசா
    சாதிச்சிட்டாங்க....
    மன்மோகன் ஒரு பொம்மை பிரதமர்...
    இயலாதவர்...
    கட்டளையிடப்பட்ட இயந்திர மனிதன்....

    நாவு இருக்கிறதென்று வந்ததை பேசக்கூடாது சசிதரூர் அவர்களே,

    ReplyDelete
  6. ஆமா சொல்லிப்புட்டன் அடக்கி வாசியுங்க அரசியல் வாதிகளே

    ReplyDelete
  7. //பதவிக்காக போராடவில்லை; மக்களுக்காக போராடியவர் காந்தியவாதி அன்னா ஹசாரே என்பதை உணர்ந்து, மவுனம் காப்பதே உங்களைப் போன்றோருக்கு அழகு!//

    சாட்டையடி பதிவு. ஐ.நா வில் ஆடம்பரமாக சுற்றித்திரிந்தவனுக்கு எப்படி தெரியும் நம் மக்களின் கஷ்டங்கள்.

    ReplyDelete
  8. தன் பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தெர்யாத ஒரு த்ட்டுகெட்ட மனிதன் பேசுவதை ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டும்?

    ReplyDelete
  9. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு

    ReplyDelete
  10. தலைப்பு சரிதான்

    ReplyDelete
  11. வணக்கம் சார், பதவியில் இருப்பவன் எல்லாம் நல்லவனும் இல்லை! பதவியில் இல்லாதவன் எல்லாம் கெட்டவனும் இல்லை!

    மக்களுக்குச் சேவை செய்ய, பதவி அவசியமில்லை! ஆனால் துணையாக இருக்கிறது!

    ReplyDelete
  12. பண்ணிக்குட்டியார் கருத்துக்கு உடன்படுகிறேன்...

    ReplyDelete
  13. ஆமாம் இவ்வளவு பேசுறானே சசிதரூர், இவன் கிரிக்கெட்டில் ஊழல் செய்த பணம் எங்கே சத்தமே இல்லையே ஏன்..??

    ReplyDelete
  14. பன்னிகுட்டி சொல்வது முற்றிலும் சரியே..

    ReplyDelete
  15. ///இன்று உங்களையெல்லாம், பார்லிமென்டில் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திச் செல்லும் மன்மோகன் சிங், எந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்?///

    சபாஷ்! சரியான கேள்வி!

    ReplyDelete
  16. சொல் என்ற சாட்டை கொண்டு
    அடித்துச்
    சொல்லி விட்டீர் நன்று நன்று!
    தங்களி்ன் நேற்றைய ஐயத்திற்கு
    இன்று விடை! என் வலையில்
    த . ஓ 12

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:
    இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)

    ஒருமுறை வாருங்களேன் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

    ReplyDelete
  18. மக்கள் பலம் என்னவென்று தெரியாமல் பேசிடாரு. . .

    ReplyDelete
  19. உங்கள் பதிவின் தலைப்பே பல அர்த்தங்களை சொல்லிவிட்டது.....சாரி பாஸ் நான் வெளியூர் உங்கள் அரசியல் புரியவில்லை.........ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  20. வணக்கம் நண்பா,

    உங்கள் பதிவு மீண்டும் என் டாஷ்போர்ட்டில் தெரிய மாட்டேங்குது,
    செங்கோவியின் ப்ளாக்கில் பார்த்துத் தான் உங்கள் பக்கம் வந்தேன்.

    ReplyDelete
  21. எனக்கு குழப்பத்தினைத் தருகிறது இந்த அரசியல் பதிவு,
    அம்பாலிக்கா எஸ் ஆகிறேன்.

    மன்னிக்கவும் நண்பா.

    ReplyDelete
  22. பண்ணிகுட்டியாரின் வாதம் சிறு பிள்ளை தனமாக இருக்கிறது, இருந்தாலும் நானும் உங்கள் பதிவில் உள்ள சில குறைகளை எடுத்து காட்டுகிறேன்...
    முதலில் காந்தி மட்டுமே சுதந்திரம் வாங்கி தந்தார் என்பதை நீங்களும் ஆதாரமாக்காதீர்கள்..
    இரண்டாம் உலக போருக்கு பின்பு காந்தி சுதந்திரத்திற்க்காக ஒரு துரும்பையும் கில்லி போடவில்லை என்பதே உண்மை..
    இரண்டாவது அண்ணா ஹஜாரே காந்தியவாதி என்று கூறுவது.. முதலில் காந்தியவாதி என்றால் என்ன என்பதிலேயே எனக்கு சந்தேகம் உண்டு.. அது இரண்டாம் பட்சம், நீங்கள் சொல்வது போல் அகிம்சை வழி காந்தியவாதத்தை அண்ணா ஹஜாரே தன உண்ணா விரதத்தில் மட்டுமே கடை பிடித்தார் என்பதே உண்மை.. ஊழல் செய்யும் அமைச்சர்களை தூக்கில் போடுங்கள் என்று கூறுவது நீங்கள் சொல்லும் காந்தியவாதம் ஆகாது என்பது உண்மை..
    சசி திரும்பவும் அமைச்சராகனம்னு பாக்கிறார், அவ்வளவே..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"