Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/08/2011

இந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்?


"நான், பார்லிமென்டை நம்புகிறேன், அதன் உறுப்பினர்களை அல்ல' என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இதைக் கிண்டல் செய்யும் விதமாக, அமைச்சர் சிதம்பரம் பேசும்போது, "பார்லிமென்ட் என்பது, அதன் தூண்களும், விதானமும், சுவர்களும், தரையும்தானா, அதன் உறுப்பினர்கள் இல்லையா' என, பெரும் தோரணையுடன் கேட்டு, சுற்றிப் பார்த்து, வெற்றிப் புன்னகை செய்தார்.


ஆமாம், உறுப்பினர்களும் சேர்ந்ததுதான் பார்லிமென்ட்; ஒத்துக்கொள்வோம். அன்றைய பூலான் தேவிகளும், இன்றைய மகாத்மாக்களான ராஜாக்களும், கனிமொழிகளும், கல்மாடியும், தயாநிதிகளும் சேர்ந்தது தான் பார்லிமென்ட்! 

ஏன், பார்லிமென்டில் கேள்வி கேட்பதற்கு, லஞ்சம் வாங்கியவர்களும், நம்பிக்கை ஓட்டளிக்க, கோடிகள் பெற்றுக் கொண்டோரும் சேர்ந்ததுதான் பார்லிமென்ட். இந்த மெஜாரிட்டி தம்மிடம் உண்டு என்பதால்தான் சிதம்பரத்தின் பேச்சு இப்படி உள்ளது.

"பார்லிமென்டே சுப்ரீம்' என, இவர்கள் முழங்குவதற்கு இந்த மெஜாரிட்டிதான் காரணம். இத்தகைய மெஜாரிட்டி இயற்றும் சட்டத்தின் நாளைய கதி என்ன? மக்கள் வெள்ளம் இவர்களைப் புரட்டிப்போட்டு வேறொரு மெஜாரிட்டியை உருவாக்கும்போது, வரலாற்றுக்குள் இந்த சட்டம் சமாதியாகும் வாய்ப்பு உண்டு. 

எமர்ஜென்சி காலத்து சட்டங்களுக்கு என்ன நேர்ந்தது? "சட்டத்தை மீறுவதற்கு முன்பே அன்னாவை ஏன் கைது செய்தீர்கள்' என, மேலும் எகத்தாளமாக கேட்கிறார். "ஏன், அன்று லாலுவையும், அத்வானியையும் கைது செய்யவில்லையா' என, எமர்ஜென்சி காலத்தை நினைவு கூரியும் பேசுகிறார். 

அந்த நகைப்பை அப்பாவித்தனமாக உறுப்பினர்கள் சிலரும் பகிர்ந்து கொண்டனர். உலகமே காரியுமிழ்ந்து கண்டித்த, ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்துவிட்டு, அதன் காரணமாகவே மண்ணைக் கவ்விய வரலாற்றை, அதையே மார்தட்டி பெருமைப்படும் உதாரணமாகக் காட்டி பேசுவதை எப்படி வர்ணிப்பது?

சொல்லுங்கள் நண்பர்களே ?

31 comments:

  1. சொல்லுங்கள் நண்பர்களே ?////

    அப்புறமா சொல்றேன்..

    ReplyDelete
  2. பேச்சைத் தவிர இவிங்ககிட்ட ஒண்ணும் இல்லை.

    ReplyDelete
  3. மீண்டும் இவர்கள் மண்ணை கவ்வும் நேரம் வெகுதூரத்தில் இல்லை ...

    ReplyDelete
  4. //பேசுவதை எப்படி வர்ணிப்பது?//

    கீழ்த்தரம்!

    ReplyDelete
  5. பொம்மைகளின் காலம் கொடுமையானது மாப்ள!

    ReplyDelete
  6. பேசுவதைத்தவிர என்ன செய்கிரார்கள்?

    ReplyDelete
  7. வேலியே பயிரை மேய்கிறது..
    வேலியை மாற்ற வேண்டியதுதான்...

    ReplyDelete
  8. தமிழ்நாட்டை விட்டே வெரட்டணும் சார்!

    ReplyDelete
  9. இந்த அரசியல்வாதிங்கள் நினக்கிறார்கள் மக்கள் short time memory உள்ளவங்க எதையும் சீக்கிரமே மறந்திடுவார்கள் என

    ReplyDelete
  10. //உலகமே காரியுமிழ்ந்து கண்டித்த, ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்துவிட்டு, அதன் காரணமாகவே மண்ணைக் கவ்விய வரலாற்றை, அதையே மார்தட்டி பெருமைப்படும் உதாரணமாகக் காட்டி பேசுவதை எப்படி வர்ணிப்பது?//
    வர்ணிக்ககூடியளவில் இல்லை.. அரசியல் என்றும் சாக்கடைதான்.. காரணம் மக்கள் மனங்களும் சாக்கடையானதுதான்.

    ReplyDelete
  11. அமைச்சர் சிதம்பரம் பேசும்போது, "பார்லிமென்ட் என்பது, அதன் தூண்களும், விதானமும், சுவர்களும், தரையும்தானா, அதன் உறுப்பினர்கள் இல்லையா' என, பெரும் தோரணையுடன் கேட்டு, சுற்றிப் பார்த்து, வெற்றிப் புன்னகை செய்தார்.//



    அடிங்கோய்யால..........

    ReplyDelete
  12. உலகமே காரியுமிழ்ந்து கண்டித்த, ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்துவிட்டு, //

    சோனியா இருக்கும் வரை இனியும் காங்கிரஸ் திருந்தப் போவது இல்லவே இல்லை...இனி ஜெயிக்கப் போவதும் இல்லை...

    ReplyDelete
  13. ///, "பார்லிமென்ட் என்பது, அதன் தூண்களும், விதானமும், சுவர்களும், தரையும்தானா, அதன் உறுப்பினர்கள் இல்லையா' என, பெரும் தோரணையுடன் கேட்டு, சுற்றிப் பார்த்து, வெற்றிப் புன்னகை செய்தார்.////

    நம்பர் வன் காமடி.ஹி.ஹி.ஹி.ஹி.
    வடியேல் கூட இம்புட்டு காமடி பன்ன மாட்டார்யா


    இன்று இரவு(இலங்கை,இந்திய நேரப்படி)என் கடையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு வர இருக்கின்றது..அவனைவரும் மறக்காமல கலந்து கொள்ளவும்(ஹி.ஹி.ஹி.ஹி இப்ப எல்லாம் எதுக்கும் விளம்பரம் செய்பது பெசன்)

    ReplyDelete
  14. அன்பு வணக்கங்கள் வேடந்தாங்கல் கருன்...

    அருமையாக இருக்கிறது உங்கள் தளம்...

    நல்லதை செய்ய யாரும் முன் வருவது இல்லை.. அப்படியே யாராவது தப்பி தவறி வந்துவிட்டால் அவரையும் உண்டு இல்லை என செய்துவிடுவது...

    நல்லா தான் சொல்லி இருக்கீங்க...

    அருமையான பகிர்வுப்பா....

    ReplyDelete
  15. உலகமே காரியுமிழ்ந்து கண்டித்த, ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்துவிட்டு, அதன் காரணமாகவே மண்ணைக் கவ்விய வரலாற்றை, அதையே மார்தட்டி பெருமைப்படும் உதாரணமாகக் காட்டி பேசுவதை எப்படி வர்ணிப்பது?

    ////////

    ம்ம்

    ReplyDelete
  16. செருப்பால அடிக்கிறது தான் இப்ப பேஷன்

    ஆனா நான் காந்தியவாதி அடுத்த எலெக்சன் வரட்டும் அப்ப தெரியும் நான் யார்ன்னு !!??

    ReplyDelete
  17. த்த்த்தூ........ஹ்! (இந்த அடைப்பு குறிக்குள் சிதம்பரத்தின் புகைப்படத்தை கற்பனைக்குள் வைத்துக்கொள்ளவும்)

    ReplyDelete
  18. கள்ளத்தனமாக வெற்றிப்பெற்று அமைச்சரானவர் தானே இவர். இதுவும் பேசுவார் இன்னமும் பேசுவார். எல்லாம் தலைவிதி.

    ReplyDelete
  19. வீட்டுக்கு அனுப்பலாம்...நாடுகடத்தலாம்...தூக்கிலிடலாம்....இவைகள் அத்தனையும் சேர்தேயும் செய்யலாம்..

    ReplyDelete
  20. என்ன செய்யலாம்? இந்த மானங் கெட்டவனுங்க இருப்பதை பார்த்தாலே காரி உமிழத்தேனும். தோணனும் இவனுகளுக்கு மானமும் இல்ல தமிழன்னு உணர்வுமில்ல . எல்லாத்தமிழனும் ஒன்று கூடி அவனுகளை புறக்கணித்தாலே உணருமோ என்னவோ ?

    ReplyDelete
  21. ப.சி சிறந்த பொருளாதார மந்திரியாக இருப்பார் என்ற கணிப்பில் 2G உட்பட அவர் பெயர் வருவதும்,தில்லுமுல்லு காரணமாகவே உள்துறைக்கு மாற்றிய்மைக்கப்பட்டாரோ என்ற சந்தேகமும் எழுவதோடு மட்டுமல்லாமல் உள்துறையில் செருப்படி முதற்கொண்டு வாங்கி தமிழகத்தின் பெயரைக்கெடுத்துக்கொண்டதுமில்லாமல் தமிழகத்திலிருந்து ஒரு பிரதம மந்திரி என்ற நம்பிக்கையையும் கெடுத்துக்கொண்டார்.

    ReplyDelete
  22. நல்ல அலசல் கட்டுரை.

    ReplyDelete
  23. நல்ல அலசல் கட்டுரை.

    ReplyDelete
  24. கொஞ்சநாள் கருனநிதியுடன் இருந்த அனுபவம் ப.சி.யை இப்படி பேச வைக்கின்றது.பாவம்.வயதாகிவிட்டாலே இப்படியெல்லம் பேசத்தோன்றும்.என்ன செய்வது? மறப்போம்,மண்ணீப்போம்.

    ReplyDelete
  25. பேசாம வீட்டுக்கு அனுப்பிடலாமா சார்.

    அடுத்த தேர்தலில் மக்கள் அனைவரும் எதிர்கட்சிக்கு வாக்களித்தால் எல்லாம் சரியாகி விடும் தானே?

    ReplyDelete
  26. அது வந்து... காங்கிரஸ் ம்ம்ம் ... சிதம்பரம்.. ம்ம்ம்ம் நாளைக்கு சொல்றேன்.. நாளைக்கு ம்ம் ம ஒகே வா.. நாளைக்கு

    ReplyDelete
  27. விடுங்க நண்பரே,,,,
    அடுத்தாப்ல மாப்ளைகளுக்கு
    லீவ் கொடுத்துற வேண்டியதுதான்....

    ReplyDelete
  28. நாடு கடத்தலாம்...:)

    ReplyDelete
  29. செட்டியாருக்கு அன்னா சொல்வது புரியவில்லை", "பார்லிமென்ட்டை நம்புகின்றேன்" என்று கூறினால் ஓட்டு பிச்சை கொடுத்து உங்களை மக்கள் மன்றத்தில் வேலைக்கு வைத்து உள்ளார்கள், நீங்கள் எஜமான்கள் அல்ல, பணியாட்கள் உங்கள் பனி சிறப்பாக இல்லை என்றால் அடுத்து வரும் தேர்ந்தலில் உங்களை தூக்கி விட்டு அடுத்தவரை பணியில் அமர்த்தும் அதிகாரம் மக்களுக்கு மட்டுமே உண்டு அதுதான் பார்லிமென்ட், யாராவது அவருக்கு அடுத்து சொல்லுங்கப்பா...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"