Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/10/2011

இதை எந்தக் கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்?



முகப்புத்தகத்தில் கலக்கியவை ..
**********************************************************************************
இந்தப் படத்தை டீ.வி.க்கு கொடுக்கணும்ன்னு திட்டம்
போட்டே தயாரிச்சுருப்பாங்க போல..

ஏன் அப்படிச் சொல்றீங்க..?

படம் பூரா 20 நிமிஷத்துக்கு ஒருதடவை விளம்பரங்கள் வருதே..!


**********************************************************************************
நான் சின்னவயசில 5 மைல் நடந்து போய் சங்கீதம் கத்துண்டேன்..

அப்போலேருந்தே உங்களுக்கும் சங்கீதத்துக்கும் ரொம்பதூரம்ன்னு
சொல்லுங்க..!


**********************************************************************************

ஹலோ வசந்த் & கோ தானே..? எனக்கும் மனைவிக்கும்
பெரிய சண்டை.. உடனே வாங்க..

நாங்க எதுக்கு வரணும்..?

நீங்கதானே சார் சொன்னீங்க.. டீ.வி. வாங்கி ரெண்டு வருஷம்
வரைக்கும் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் நாங்க வந்து
தீர்த்து வைப்போம்ன்னு..!

**********************************************************************************

என்னடா.. மருந்துக் கம்பெனிக்கு வேலைக்குப் போனியே..
எப்படி இருக்கு..

மாசம் ரெண்டாகுது.. மருந்துக்குக் கூட சம்பளத்தைக் கண்ணுல
காட்ட மாட்டறானுகடா..!

**********************************************************************************
என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?

ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!

**********************************************************************************
தொண்டன் 1 ; ஏண்ணே.. நம்ம தலைவர் மலச்சிக்கலில்
அவதிப்படறாரோ..?

தொண்டன் 2 ; ஏன் அப்படிக் கேட்கிறே..?

தொண்டன் 1 ; இன்று முக்கிய பேட்டி தர்றதா நிருபர்களை
வரச் சொல்லியிருக்காரே..!

**********************************************************************************
தொண்டன் 1 ; என்ன இருந்தாலும் பணம் சம்பாதிக்கறதில
நம்ப தலைவரை அடிச்சுக்க முடியாது..

தொண்டன் 2 ; எப்படிச் சொல்றே..?

தொண்டன் 1 ; நேத்து 10 பேர்கிட்ட பிளேன்ல கண்டக்டர்
வேலை வாங்கித் தரேன்னு சொல்லி பணம் கறந்துட்டாரே..!

**********************************************************************************
திருடன் ; நான் 3 கொலை பண்ணினவன்.. ஒழுங்கா பீரோ
சாவியக் கொடு..

டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்.. ஒழுங்கா
ஓடிப் போயிடு..!

**********************************************************************************
டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
இப்போ எப்படி இருக்கார்..?

நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்..!

**********************************************************************************
விருந்தாளி ; வாசல் வரை வந்து வழியனுப்பறது ரொம்ப
சந்தோஷமா இருக்குங்க..

வீட்டுக்காரர் ; நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
நம்ப முடியலீங்க..!

**********************************************************************************

31 comments:

  1. நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
    நம்ப முடியலீங்க..!///

    செருப்பு வாங்க யாரை நம்பனும்????

    ReplyDelete
  2. நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
    நம்ப முடியலீங்க..!///

    செருப்பு வாங்க யாரை நம்பனும்????//

    ராஸ்கல் பிச்சிடுவேன்....

    ReplyDelete
  3. //
    என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?

    ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
    கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!


    //

    சொந்த அனுபவமா ?

    ReplyDelete
  4. அருமையான ஜோக்ஸ்

    ReplyDelete
  5. //
    டாக்டர் ; நடக்கக் கூட முடியாம வந்தாரே ஒரு பேஷண்ட்...
    இப்போ எப்படி இருக்கார்..?

    நர்ஸ் ; வர்றியா.. ஓடிப் போகலாம்ன்னு என்னைப் பார்த்து
    கேட்கிற அளவுக்கு தேறிட்டார் டாக்டர்../

    //

    அந்த பேஷன்ட் நம்ம சிபி அண்ணனா ?

    ReplyDelete
  6. நல்ல ஜோக்ஸ்.... தொடருங்கள்...

    ReplyDelete
  7. நல்லா சிரிக்க முடிஞ்சது. நல்ல ஜோக்ஸ்.

    ReplyDelete
  8. கலக்கல் சிரிப்பு மக்கா !

    ReplyDelete
  9. என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?

    ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
    கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!

    ReplyDelete
  10. என்னங்க...இந்தப் புடவை எனக்கு அழகா இருக்காங்க..?

    ம்ம் நல்லாருக்கு.. கடைக்காரன் அப்பவே சொன்னான்.. எந்தக்
    கழுதைக்கு கட்டினாலும் நல்லா இருக்கும்ன்னு..!//

    ஹய்யோ ஹய்யோ முடியல....

    ReplyDelete
  11. கலக்கல் காமெடிகள் சார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நர்ஸ் ஓடிப்போகும் ஜோக் செம

    ReplyDelete
  13. குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கின்றது!

    ReplyDelete
  14. செம ஜோக்ஸ்... சிரித்துக்கொண்டே இருந்தேன் சகோ

    ReplyDelete
  15. நேத்து முக்கிய பிரமுகர் கைதுன்னு நியூஸ்ல சொன்னாங்களே,அப்போது அது.......?

    ReplyDelete
  16. அனைத்தும் கலக்கல்ஸ்

    ReplyDelete
  17. சிரிப்புக் கதம்பம்
    மணமணத்து சிரிக்க வைத்தது...

    ReplyDelete
  18. ஹா ஹா
    செம ஜோக்ஸ்

    ReplyDelete
  19. //தமிழ்வாசி - Prakash said...
    நேத்துதான் புது செருப்பு வாங்கினேன்.. யாரையும்
    நம்ப முடியலீங்க..!///

    செருப்பு வாங்க யாரை நம்பனும்????

    //

    முதல்ல இவரை உள்ளே விடாதீங்க, கருன்.

    ReplyDelete
  20. நல்ல சுவையான ஜோக்குகள். ரசிக்க வைத்தது. நன்றி.

    ReplyDelete
  21. உண்மையை சொல்றேன். சிரிப்பு வரல.ஆனா,நல்லாயிருக்கு!

    ReplyDelete
  22. கலக்கலோ கலக்கல்!

    ஆமா! இதெல்லாம் எங்கே
    கிடைக்கிது..?
    எதுக்கு நமக்கு.
    போடுங்க! படிக்கிறோம்!
    சிரிக்கிறோம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. சிரிப்பு சிரிப்பு................இது மகிழ்சியின் உயிர்த்துடிப்பு.......கலக்கல் ஜோக்ஸ் நண்பா

    ReplyDelete
  24. எல்லாமே கலக்கலான நகைச்சுவைகள்...

    சிரிப்பு நிற்க மாட்டேங்குது...

    ReplyDelete
  25. முக்கியமான பிரச்சினைகள் மறக்கடிக்கப் பட்டன..

    ReplyDelete
  26. டாக்டர் ; நான் 10 ஆபரேஷன் பண்ணினவன்

    super

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"