'வகுப்புக் கலவர தடுப்பு மசோதா' என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, தமிழக முதல்வர் எச்சரித்தது, அனைவருக்கும் நினைவிருக்கும்.
வகுப்புக் கலவர தடுப்பு மசோதா, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் வடிவமைத்தது.
இந்தியாவில் எங்கு மதக் கலவரம் நடந்தாலும், அதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு, அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய, இம்மசோதாவின் ஒரு பிரிவு அனுமதிக்கிறது.
இதனால், இம்மசோதாவில் உள்ள பாதுகாப்பை பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மையினர் கலவரத்தை தூண்டி விட்டாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பெரும்பான்மை இந்துக்கள் தான் பாதிக்கப்படுவர்.
அதாவது, விசாரணைக்கு முன்பே, தீர்ப்பு வாசிக்கப்படுவதைப் போல! மேலும், இம்மசோதா, சட்டமாக்கப்பட்டால், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று, அம்மாநில அரசை கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை பிரகடனப்படுத்த முடியும்.
எந்தவொரு கலவரத்தையும் அடக்குவதற்குத் தேவையான காவல்துறையை, அந்தந்த மாநில அரசே தன் வசம் வைத்துள்ளது. (பரமக்குடி கலவரம் வழக்கில் உள்ளதால் அதைப் பற்றி தீர்ப்பு வந்தவுடன் பேசுவோம் - குட்டு) மேலும், இது, அம்மாநிலத்தின் உள்விவகாரம். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் கேட்டு, துணை ராணுவத்தின் உதவியைப் பெற முடியும்.
எனவே, இம்மசோதாவே தேவையற்றது. இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பதே, அரசியல் சட்டத்துக்கு முரணானது. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அரசின் அமைச்சரவை அங்கீகரித்த எந்த ஒரு சட்டமும் அல்லது முடிவும், இந்த தேசிய ஆலோசனை கவுன்சிலில் வைத்து, அதன் அங்கீகாரத்தை பெற்ற பின் தான், அதை நடைமுறைப்படுத்த முடியும்.
இந்தியாவில், இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பது, வல்லரசு நாடுகளின், 'வீட்டோ பவர்' அதிகாரத்துக்கு சமமானது என்றால், அரசியலை ஒரு பாடமாக விரும்பிப் படித்த பட்டதாரிகளுக்கு எளிதில் புரியும். இது, சட்ட முன்வடிவு பெறுவதற்கு முன், பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்க, தன் கட்சி பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
'வரும் பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு' என்ற பழமொழியின்படி, தமிழக முதல்வர் ஜெ.,யின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கது.
தமிழ்மணம் இணைச்சாச்சு. நண்பா
ReplyDeleteவணக்கம் பிரகாஷ் சார், அம்மாவுக்கு நீங்க தந்த பாராட்டும், குட்டும் சரியே!
ReplyDeleteSuper
ReplyDeleteகுட் போஸ்ட்
ReplyDeleteபாராட்டு..
ReplyDeleteகுட்டு..
ரெண்டுமே அருமை.
நல்ல பதிவு
ReplyDeleteயோவ் வாத்தி பார்த்துய்யா, வளர்மதி உருட்டுகட்டையோட ஆட்டோவுல வந்துரப்போறாயிங்க...
ReplyDeleteயோவ் வாத்தி பார்த்துய்யா, வளர்மதி உருட்டுகட்டையோட ஆட்டோவுல வந்துரப்போறாயிங்க...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteயோவ் வாத்தி பார்த்துய்யா, வளர்மதி உருட்டுகட்டையோட ஆட்டோவுல வந்துரப்போறாயிங்க///
Repeat
பாராட்டு குட்டு ஓஹோ... இதுதான் நடுநிலையோ :)
ReplyDeleteபாராட்டு தான் இருக்கு..குட்டு எங்கே மாப்ள?
ReplyDeleteவாத்தியார் குட்ட மறந்துட்டாரு!
ReplyDelete//இந்தியாவில், இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பது, வல்லரசு நாடுகளின், 'வீட்டோ பவர்' அதிகாரத்துக்கு சமமானது//
ReplyDeleteஇந்தியாவின் கொள்கைகளையும்,வழிநடத்தும் அதிகாரங்களையும் கொண்டதால் பிரதமர்,ஜனாதிபதியை விட வலுவானது தேசிய ஆலோசனை கவுன்சில்.
ரெண்டும் நியாயமானதே பாஸ் உங்க பாராட்டு குட்டு ரெண்டையும் சொன்னேன்.
ReplyDeleteபாராட்டும் குட்டும் நியாயமானதே .
ReplyDeleteம்ம்ம் ஆனா குட்டு ஸ்ராங்கா இல்ல )))
ReplyDeleteபாராட்டும் குட்டும் சரியானதே.
ReplyDeleteஒரு கண்ணுக்கு நெய்யும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் பழக்கம் இல்லை என்பதை உணர்திவிட்டீர்~
ReplyDeleteஎங்கே மதச்சார்பற்றவர்கள்(போலி) யாரையும் காணோமே!
ReplyDeleteஆட்சி அதிகாரம் பறி போய் விடும் என்று தான் அனைவரும் பயப்படுகிறார்கள், மக்கள் மேல் உள்ள அக்கரையில் அல்ல.. காவல்துறை கலவரத்தை அடக்கும் என்பதை பரமக்குடியிலும் குஜராத்திலும் நான் காணவில்லை என்பதால் நம்ப முடியவில்லை... நேற்றும் சேலம் பகுதியில் மறியலில் ஈடுபட தாயாரான வாலிபர்களை அடித்து உதைத்தது இந்த அரசு மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்பது தெரிகிறது.. இதை வன்மையாக கண்டித்த தோழர் [?] ராமகிருஷ்ணன் அங்கே அம்மாவிடம் உள்ளாட்சி தேர்தலுக்காக கை ஏந்தி நின்றது அடி வாங்கியவர்களை விட எனக்கு அதிகம் வலித்தது.. மத சார்பற்றவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. வேண்டும் என்றால் மனித நேயம் உள்ளவர்கள் என்று கூறலாம்..
ReplyDeleteவிரைவில் ஒரு குட்டு அல்ல பல
ReplyDeleteகுட்ட வேண்டிவரும் நண்பரே!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்மாவுக்கு வலிக்கக்கூடாதுன்னு மெள்ளமா குட்டினீங்களோ.
ReplyDelete