Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/10/2011

நடிகை காந்திமதி - நினைவலைகள்


நேற்று பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.


அடியே! அறிவு கெட்டவளே; மானம் கெட்டவளே; ரோசம் கெட்டவளே; வெட்கம் கெட்டவளே;....... உடம்பே கண்டம் துண்டமா வெட்டி உப்பு கண்டம் போட்டுருவேன்... ஏண்டி இந்த குருவம்மா அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு கோழி வளர்த்தா.... அதே வக்கனையா திருடி, வாய்க்கு ருசியா திங்க தெரியுதாடி.... அந்த வாயே கிழிச்சா..... அடியே அளந்து பேசு நாக்கை அறுத்துபுடுவேன் அறுத்து..... இது காந்திமதி 16 வயதினிலே படத்தில் படபடவென பேசும் வசனம்.

எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.

இதே போல் பாரதிராஜா இயக்கத்தில் அமைத்த இன்னொரு படமான மண்வாசனை படத்தில் பாட்டி வேஷத்தில் பழமொழிகள் சொல்லி நடிப்பில் சக்கபோடு போட்டிருப்பார். முத்து படத்தில் ரஜினியோடு காந்திமதி செய்யும் ரொமாண்டிக் கலாட்டா அனைவரும் ரசிக்கக் கூடியது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோர் நடித்த பெரும்பாலான படங்களில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று புகழ் பெற்றார்.

நடிப்பில் நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவார். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்..


31 comments:

  1. காந்திமதி நடிப்புலகில் 'காந்த-மதி'

    ReplyDelete
  2. சோகமும், நகைச்சுவையும் தெளிவாய் தரும் நடிப்பும் குரலும் என்றென்றும் மறக்க முடியாது..

    ReplyDelete
  3. ஆமாம் நல்ல நடிகை நண்பரே

    ReplyDelete
  4. வெகுளித்தனமான பாந்தமான நடிப்புக்கு சொந்தக்காரர்......!

    ReplyDelete
  5. வயது மூப்புல எம்ஜியார் சிவாஜி,ஜெமினி இருக்குற இடத்துக்கு போயிட்டாங்களா!

    ReplyDelete
  6. நல்ல நடிகை ஆத்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  7. தமிழ் மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு & all voted

    ReplyDelete
  8. வெட்கம் கெட்டவளே;....... உடம்பே கண்டம் துண்டமா வெட்டி உப்பு கண்டம் போட்டுருவேன்... ஏண்டி இந்த குருவம்மா அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு கோழி வளர்த்தா.... அதே வக்கனையா திருடி, வாய்க்கு ருசியா திங்க தெரியுதாடி.... அந்த வாயே கிழிச்சா..... அடியே அளந்து பேசு நாக்கை அறுத்துபுடுவேன் அறுத்து.....//

    அவ்......என்ன நீங்க யாரையோ பேசுறீங்க என்று நினைச்சா...
    இது காந்திமதியோட வசனமா?

    ReplyDelete
  9. காந்திமதியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  10. எடுபட்டபயலே எனும்போது என்னமாதிரி இருக்கும்
    அருமையான நடிகை

    ReplyDelete
  11. அருமையான நடிகை....!!! ஆன்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  12. நல்ல நடிகை என்பதை விட
    என்றும் நினைவில் நிற்கும் நடிகை !!!!

    ReplyDelete
  13. என்றென்றும் நினைவில் நிற்கும் நடிகை!

    ReplyDelete
  14. நல்ல நடிகை.... அவரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. ”ஏலேய் என்ன பெத்த மக்கா”இதுவும் அவர்களின் புகழ்பெற்ற வசனங்களில் ஒன்று மிகவும் மனதைப்பாதித்துவிட்டது அவரது மரணம்..சன் டிவியில் ஒளிபரப்பாகும் பொண்டாட்டிதேவை தொடரில் கலக்கி வந்தார்...பாவம் அவது நடிப்பை இனிக்கானும் பாக்கியம் இல்லை..அவரது ஆத்ம சாந்திக்காக பிராத்திப்போம்

    ReplyDelete
  16. நல்ல குணச்சித்திர நடிகை..அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  17. ஆத்து கொடுக்கிறியா
    ஆத்து
    என அவர் உடலை உலுக்கி சொல்லும் அழகு
    இன்னும் கண்ணிற்குள் நிற்கிறது....

    ஆத்மா இறைநிழலில் சாந்தி பெறட்டும்.

    ReplyDelete
  18. நல்ல நடிகை காந்திமதி அம்மா அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  19. இப்ப தான் விஷயம் தெரியுது :-(

    ReplyDelete
  20. நல்ல நடிகை எனக்கு மிகவும் பிடித்த நடிகை , தனக்கென்று ஒரு தனி ஸ்டையிலை உருவாக்கி நடித்து கொண்டு இருந்தார்,
    அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  21. திறமையான நடிகை காலச் சக்கரத்தில் கலைந்தது நடிப்புத் தாய் ஆத்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  22. திறமையான நடிகை காலச் சக்கரத்தில் கலைந்தது நடிப்புத் தாய் ஆத்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  23. திறமையான நடிகை காலச் சக்கரத்தில் கலைந்தது நடிப்புத் தாய் ஆத்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete
  24. அருமையான நடிகை காட்டானின் சகோதரி போன்றவர் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

    ReplyDelete
  25. அருமையான நடிகை காட்டானின் சகோதரி போன்றவர் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

    ReplyDelete
  26. எனக்கு அவர் ஞாபகம் வருவது மண் வாசனை படம்தான்.உண்மையிலேயே த்மிழ் மண்ணை மணக்க வைத்தவர்.அவருக்கு நம் அஞ்சலி.
    நன்றி சகோ

    ReplyDelete
  27. உண்மையிலேயே த்மிழ் மண்ணை மணக்க வைத்தவர்.அவருக்கு நம் அஞ்சலி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"