அதிக குதிரை சக்தி கொண்ட, இரு சக்கர வாகனங்களில் வீதி உலா வரும் இளைஞர்கள், வாகனங்களை சாலைகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் செல்கின்றனர்.தேவையே இல்லாமல், அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி, அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், தாங்களும் விபத்தில் சிக்கி, மற்றவர்களையும் விபத்துக்கு உள்ளாக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.
சாலையைத் தங்களுக்குத்தான் பட்டயம் எழுதிக்கொடுத்துவிட்டதாக நினைத்து, இவர்கள் செய்யும் சாகசங்கள், மக்களை பயமுறுத்தி வருகிறது.ஆக்சிலேட்டரை முழுவதுமாக முறுக்கிக்கொண்டு, சாலைகளில் பாம்புகளைப் போல் வளைந்து, நெளிந்து தாறுமாறாக ஓட்டுவது, குறுகிய இடைவெளியில் முந்துவது, முந்த முயற்சிப்பது, ஓடிக்கொண்டிருக்கும், இரு வாகனங்களுக்கு இடையே புகுந்து, "கட்' செய்வது, இடதுபுறமாக முந்துவது என, பலரை பயமுறுத்தி வருகின்றனர்.
தலைக்கவசம் அணிந்து கொண்டோ, அணியாமலோ தலை தெறிக்கும் வேகத்தில், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஓட்டுவதால், பாதசாரிகள் பீதியில் உறைந்து போகின்றனர்.
பல இரு சக்கர வாகனங்களில், பின்புறமாக வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும், "ரியர் வீயூமிர்'களை காணமுடிவதே இல்லை. அவை அப்புறப்படுத்தப்படுவது ஏன் என்றும் தெரியவில்லை.தனக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
சாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.
செய்வார்களா?
உயிரின் அருமை புரியவில்லை சார்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ....
கூகுளில் பேசி தேடலாம்
புரிந்தால் சரி
ReplyDeleteஇஞ்சினின் சத்தத்தைக் கூட்டி வைத்து உயிரை வாங்கும் இம்சை ஆசாமிகள் நிறைய இருக்கின்றனர். எனக்கும் இதே ஆதங்கம் உண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteஹி ஹி ஹி....
ReplyDelete#என்னையா பண்ணுறது......
வயசு அப்புடி........
மற்றவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய அசுரவேக, இரு சக்கர வாகன ஓட்டுனர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ReplyDeleteஎனக்கும் ஆதங்கம் உண்டு.
பகிர்வுக்கு நன்றி
சாலை விதிகளைப் பின்பற்றாமல், அட்டகாசம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டுனர்களைப் பிடித்து, கடுமையான அபராதம் விதிக்கவும், தொடர்ந்து சாலை விதிகளை மீறும்பட்சத்தில், வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்.
ReplyDeleteசெய்வார்களா?//
அட வாத்தி நம்ம போலீசைப் பற்றி நமக்கு தெரியாதா என்ன...?? அம்பதோ நூறோ குடுத்தா மேட்டர் சால்வ், அல்லாமலும் நம்ம ஆளுங்க நிறையபெர்கிட்டே லைசன்சே கிடையாதே....!!!
இளமை வேகம் மற்றவர்களின் உயிரை வாங்கிவிடக்கூடாது அல்லவா?
ReplyDeleteஇப்போதெல்லாம் நாம் கவனமாக சாலைகளில் செல்லுவது மட்டும் போதாது என்று எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கவனத்தையும் சார்ந்தே இருக்க வேண்டி இருக்கிறது.
ReplyDeleteமுழுக்க முழுக்க ஆமோதிக்கிறேன்
ReplyDeleteNalla niyayamaana aaivu ....
ReplyDeleteஅப்படி வேகமா போயி என்னாத்த சாதிக்க போறானுக...
ReplyDeleteசாதனை பண்றதுக்கு எவ்வளவோ இருக்கு உலகத்தில
இதை ஏன் கையில் எடுத்துகிறாங்க....
100 ரூபாய் மாமூலை வெட்டு அப்புறம் பேசுன்னு சொல்வாங்க இந்த போ(லி)லீஸ்காரனுங்க. அப்புறம் எங்கே இவர்களை அடக்குவது.
ReplyDeleteபட்டு தெளிபவன் தான் மனிதன் )))
ReplyDeletetamilmanam 7
ReplyDeleteஇவர்களை அடக்குவது எப்படி .
ReplyDeleteஅவர்களது வீண் சாதனைக்கு அடுத்தவன் உயிர் சோதனைக்கு உள்ளாவது எந்த விதத்தில் ஞாயம்... அருமையாக கேட்டுள்ளீர்கள் நண்பரே!
ReplyDeleteஉயிரின் அருமை புறிந்து கவனமாக இருந்தால் பரவால்லே.
ReplyDelete