இன்றைய இந்திய ஜனநாயகம் ஊழல்வாதிகளிடமும், கிரிமினல் மாஃபியாக்களிடமும், பணமுதலைகளிடமும், பேராசை பிடித்த வாரிசுகளிடம் சிக்கிக்கொண்டு, மனசாட்சியற்ற மக்களாட்சியாக மாறிவிட்டது.
கூட்டணிக்கட்சி வரலாறு காணாத முறைகேடுகளில் ஈடுபட்டாலும், தடுக்க முடியாததற்குக் காரணம் கூட்டணி தர்மம் என்று நா கூசாமலும், வெட்கம் இல்லாமலும் திருவாய் மலர்கிறார்.
உலகளவில் நடைபெறும், உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் ஒரு அமைச்சர் பயமே இல்லாமல் ஊழல் செய்கிறார்.
மிக மோசமான நிதி நிர்வாகத்தாலும், அதிக சம்பளச்சுமையாலும், இலவசப் போலிக் கவர்ச்சி திட்டங்களாலும், கரைபுரண்டு ஓடும் ஊழல்களாலும், டாஸ்மார்க் சாராய வருமானத்தையும் மீறி தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்ட நிலையில், எல்லா வகை புதிய திட்டங்களுக்காகவும் வெளிநாட்டு வங்கிகள், உலக வங்கி ஆகியவற்றிடம் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் நிதியமைச்சரோ "தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரோ, "ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி தமிழ்நாட்டை கேவலப்படுத்துகிறார்.
ஊழல்களில் ஊறிப்போன, நாக்கில் நரம்பில்லாமல் பேசும், சொந்தத் தொகுதி பக்கமே தலைகாட்டாமல் இருக்கும், அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கும், குடும்ப உறுப்பினர்களை அரசியலில் களமிரக்கும். Etc.. அரசியல்வாதிகளுக்கு யார் கொடுத்தது இந்த துணிச்சல் . அவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது.
ஒரு ஓட்டிற்கு 1000, 2000 ரூபாய், ஒர் ஆப்ஃ பாட்டில், ஒர் குவாட்டர் பிரியாணி கொடுத்தால் சில மட்டி ஜனங்கள் ஓட்டு பொட்டுவிடுவார்கள் என்கிற நினைப்பு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
மக்களாகிய நாம்தான் அவா்களுக்கு இந்த துணிச்சலையும், நினைப்பையும் கொடுத்தோம். நம்முடைய ஓட்டின் முக்கியத்துவம் தெரியாமல் கண்டகழிசடை நாய்களுக்கு (மன்னிக்கவும்) ஓட்டுப் போட்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்து அழகுபார்த்தோமே நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
இதோ வருகிறது இன்னும் ஓரு தோ்தல்.. இந்த தேர்தலாவது பணபலம், ஆள்பலம், இன்னபிற அவலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அதற்கு தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வேண்டிய உண்மையான முயற்சிகளை எடுக்கத் தேர்தல் ஆணையம் முயற்சி செய்ய வேண்டும். ஊடகங்களும் இதற்கு துணைபுரிய வேண்டும். நம் பதிவுலகமும் இதற்கு ஆதரவு தரவேண்டும்.
2. மாணவர்களின் எதிர்காலம் 3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
வட...?
ReplyDelete>>>ஒரு ஓட்டிற்கு 1000, 2000 ரூபாய், ஒர் ஆப்ஃ பாட்டில், ஒர் குவாட்டர் பிரியாணி கொடுத்தால் சில மட்டி ஜனங்கள் ஓட்டு பொட்டுவிடுவார்கள் என்கிற நினைப்பு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
ReplyDeleteஅனுபவம் தந்த பாடம்.
அலெக்சா ரேங்க்கில் அபரித முன்னேற்றம். வாழ்த்துக்கள்.
ReplyDelete//ஒரு ஓட்டிற்கு 1000, 2000 ரூபாய், ஒர் ஆப்ஃ பாட்டில், ஒர் குவாட்டர் பிரியாணி கொடுத்தால் சில மட்டி ஜனங்கள் ஓட்டு பொட்டுவிடுவார்கள் என்கிற நினைப்பு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது.//
ReplyDeleteநம்மாளுக சும்மா கொடுக்கறாங்கன்னா ஒரு மாசத்துக்கு வீட்ல சோறுகூட ஆக்கமாட்டானுக...
வாங்குபவன் இருக்கும் வரை கொடுப்பவன் கொடுத்துக்கொண்டு தான் இருப்பான்....
தட்டுனா திறக்காது என்பது நிதர்சனம்..........ஆனா மக்கள் மனசுல வேற மாதிரி எண்ணம் ஓடுது............அது இவனுங்க இவ்ளோ அடிக்கிறாங்க நாம மட்டும் என்ன காசுக்கு ஆசைப்படாத காந்தியான்னு...............!
ReplyDeleteme the first?
ReplyDeleteகண்ட கண்டகழிசடை நாய்களுக்கு ஓட்டுப் போட்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்து அழகுபார்த்தோமே நமக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
ReplyDeleteகண்ணியமாகவா? நடந்தால் அதிசயம்தான்.
ReplyDeleteஅரசியல் என்னும் சாக்கடையில் இருந்து எப்போது தமிழன் வெளி வருவான்
ReplyDeleteஇதையும் பாருங்க சார்
ReplyDeleteஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்
ஆனால் நிதியமைச்சரோ "தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'//
ReplyDeleteவெட்கம்
தேர்தல்ல பாடம் புகட்டுவோம்
ReplyDeleteசரியான பதிவு..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
நாமும் ஒன்றிணைந்து செயல் படுவோம்..
//ஓரளவு கண்ணியமாக நடைபெற்றால்தான் தமிழகத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.//
ReplyDeleteநடக்குமா?நடந்தால் நல்லது! நடக்கவேண்டும்!நம் கடமையை நாம் கண்ணியத்தோடும்,கட்டுப்பாட்டோடும் செய்வோம்!
ஆனால் நிதியமைச்சரோ "தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரோ, "ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி தமிழ்நாட்டை கேவலப்படுத்துகிறார்.
ReplyDelete...இதற்கு மேல என்ன சொல்ல?
பணபலம், ஆள்பலத்தை விடுங்க. நாம நேர்மையா ஓட்டு போடுவோம்.
ReplyDeleteLike it
ReplyDeleteஅட போங்க பாஸ்.... காமெடி பண்ணிட்டு... ஊழலைப் பார்த்துப் பார்த்து மக்களுக்கு அறிவே தேய்ஞ்சு போச்சு... ஒணத்தி இருக்கிற ஒவ்வொருத்தனும் தி.மு.கவுக்கு ஓட்டு போடமாட்டான்.. நான் அதிமுக காரனுமில்லை, தேமுதிக காரனுமில்லை.. சாதாரண பொதுஜனம். 1.75 லட்சம் கோடியில என்னோட பணமும் இருக்குங்கற கோவத்தில சொல்றேன்.
ReplyDeleteஆனால் நிதியமைச்சரோ "தமிழகம் கடன்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது'' என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரோ, "ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்'' என்றுகூறி தமிழ்நாட்டை கேவலப்படுத்துகிறார்.
ReplyDeleteபஞ்!
மாஸ்டர்! இன்னிக்கு விடுமுறைல நிக்குறேன்! ஸோ இன்னிக்கு விட்ட குறை தொட்ட குறை எல்லாமே முடிச்சுடுறேன்! அப்புறம் உங்க ப்ளாக்கு கு கமென்ட் மாடரேஷன் அவசியம் தானா?
ReplyDelete( சும்மா கேட்டேன் பாஸ்! கமெண்டு போஸ்ட் பண்ணிய அடுத்த நிமிஷமே ப்ளாக் ல வந்துடுச்சுன்னா நமக்கு ஹப்பியா இருக்கும்! - ஆமா ரெகுலரா கமெண்டு போடுற மூஞ்சி! சொராறு பாரு! )
பிரபல பதிவர்னா கமெண்ட் மாடரேசன் இருக்கத்தான் செய்யும்..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா!
ReplyDeleteஎரியிற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு பாத்து ஓட்டு போடுற நிலைலதான் இருக்காங்க நம் மக்கள்..காமராஜர் காலத்திற்கு பிறகு!
ReplyDeleteஏமாறுகிறவன் இருக்கிற வரைக்கும் ஏமாத்துரவன் இருக்கத்தான் செய்வான்.
ReplyDeleteஅதனால் நாம தான் முதல்ல திருந்தனும்.
//செங்கோவி சொன்னது…
ReplyDeleteபிரபல பதிவர்னா கமெண்ட் மாடரேசன் இருக்கத்தான் செய்யும்..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா!
அதே அதே
"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html
present sir
ReplyDeleteஅன்புடன் வணக்கம் தங்களின் பதிவு தற்போதைய நிலைமைக்கு மிகவும் தேவை மேலும் மேலும் பதிவிடுங்கள் மொத்த பதிவுலகம்
ReplyDeleteதேர்தலில் சரியானபடி வாக்களிக்க இணைந்து செயல்படுங்கள்
"""" நான் அதிமுக காரனுமில்லை, தேமுதிக காரனுமில்லை.. சாதாரண பொதுஜனம். 1.75 லட்சம் கோடியில என்னோட பணமும் இருக்குங்கற கோவத்தில சொல்றேன்""""
கழுத விட்டைய்ல்... முன் பின் ..விட்டை.. வேறு கிடையாது எல்லாம் கட்சியும் ஒண்ணுதான் யாரை தேர்ந்தெடுக்கலாம் என கருத்து கணிக்கலாம்..ஒட்டு போடும்போது சரியான நபரை தேர்ந்தெடுங்கள்,, .நன்றி .