புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கையைத் தன் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் அனுப்பினார்.
திருமணத்திற்கு அவசியம் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் கலைவாணர் ஏன்.எஸ் கிருஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப்பிக் கூடவே ஒரு வித்தியாசமான கடிதத்தையும் இணைத்திருந்தனர்.
அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக்கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திருமணம் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறுகிறது. இங்கு நீங்கள் வந்தால் சுற்று வட்டார மக்களும், பாண்டிச்சேரி மக்களும் கூடிவிடுவார்கள். அத்துணைப் பேருக்கும் வேண்டிய வசதிகளை என்னால் செய்து கொடுக்க இயலாது.
கூட்டத்தை சமாளிப்பது திருமண நேரத்தில் சிரமமாகிவிடும். எனவே தயவு செய்து தங்களது வாழ்த்தை மட்டும் அனுப்பி வைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
இந்த துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?
பாரதி இரசிகன் ஆயிற்றே..
ReplyDeleteவாழ்வின் நிதர்சனங்களை அறிந்தவர்கள்..
ReplyDeleteகூட்டம் கூட்டுவதில் மட்டும் முனைப்பு காட்டும்
இக்காலத்தவருக்கு இதெல்லாம் புரிய வேண்டும்..
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
நா கூட என்னோட தோஸ்துங்க யாரும் என் அக்கா கல்யாணத்துக்கு வந்துராதிங்கன்னு சொல்லிட்டேன்.. சரக்கு அடிச்சுட்டு சல்லைய கொடுத்துருவானுங்க...:)
ReplyDeleteபாரதிக்கு இருக்கும் துணிச்சலில் பாதியாவது அவன் ரசிகனுக்கு இருக்காதா? பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇதுவரை தெரியாத ஒரு விசயத்தை எழுதியிருகிறீர்கள்... ஆச்சர்யமான தகவல்....
ReplyDeleteஉங்கள் கருத்துக்காக
காதல் - காதல் - காதல்
அருமையான தகவல் சகோ.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
பாரதிதாசனின் வித்தியாசமான அழைப்பு வியக்க வைத்தது. அப்புறம்... கலைவாணர் என்ன செய்தார் கருன் சார்? நல்ல பகிர்வுக்கு ந்னறி.
ReplyDeleteபாரதி தாசனுக்கு இணை வேறாரு..
ReplyDeleteவித்தியாசமான இதுவரை அறியாத அரிய தகவல்
ReplyDeleteபதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 6
தகவல் எனக்கு புதுசு - பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஅறிய தகவல் மாப்ள இது போல நிறைய எழுது....
ReplyDeleteஅறியாத தகவல்!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
அரிய தகவல் தரும் பதிவு மிக அருமை.
ReplyDeleteவலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html