ஆறாவதாய்
பிறந்திருக்கிறது
பெண் குழந்தை
இம்முறையும்...
ஒரு பாலாடை
கள்ளிப்பாலோ,
ஒரு கைப்பிடி
நெல் மணியோ
தலையைப் பிடித்து
தொண்டையில் தள்ளி,
மூச்சை நிறுத்தி இருப்பாள்
அந்த மருத்துவச்சி ...
ஆறு பெற்ற அலுப்பில்
படுக்க வருவாள்
உன் தர்ம பத்தினி
குழந்தைப் பெற்ற
வலி நீங்காமல்
இம்முறையும்...
காமத்தோடும்
போதையோடும்
உன் காமத்
தொல்லையின் உச்சத்தில்
இம்முறையும்
நினைத்துக் கொள்வாள்....
நீ..
கொன்றுப் போட்ட
அந்தக் குழந்தைகளின்
கடைசி அழுகுரலை...
என்ன கொடுமைய்யா இது...ஸ் ஸ் அபா ஜீரணிக்க முடியல!
ReplyDeleteகொடுமைய்ளும் கொடுமை இது தான்
ReplyDeleteம் ...
ReplyDeleteசே, என்னஒரு மோசம்.
ReplyDeleteஓ! கொடுமை! .....சகோதரா...
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
பெண் சிசுக்கொலைக்கு மூல காரணமே வரதட்சிணை தானே?
ReplyDeleteவேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது.
இனி அவளுக்கு எதை செய்யப்போகிறாய். அதனால் மொத்தமாக அவளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிடு என்கிறது வேதம்.அதனால், பெண்ணுக்காக ஆபரணங்கள் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் என பல விலை மதிப்பற்ற பொருள்களை பெண்ணுடன் சேர்த்து அனுப்புவார்கள்.
சீதனம் எவ்வளவு இருக்கும் என்பதை யூகிப்பதற்காக ஒரு வேத மந்த்ரம் பாருங்கள்
‘ஏ கந்தர்வாஹா அப்சரஸ்ய தேவிஹிஏஷீ விருஷ்ஹேசு ஆஷதே ஷிவாஸ்தே’
ஏ, தேவதையே கந்தவர்களே எங்கள் பெண்ணை திருமணம் செய்து அனுப்புகிறோம். அவளுக்காக சீதனங்களை வண்டி வண்டியாக அனுப்புகிறோம். அவை அனைத்தும் அவளோடு பத்திரமாக போய்ச்சேரவேண்டும். எல்லாமே விலை மதிப்பற்ற பொருட்கள் என்பதால் பேய்கள், பிசாசுகள் அவற்றை அண்டாமல் அபகரித்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுகிறது அந்த வேத மந்த்ரம்
சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? இன்னாரு புதிய சீதனத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வேதம். அதன் பெயர் அனுதேயி. அனுதேயி என்றால் என்ன பொருள்? அதன் பயன் என்ன? நீங்கள் கேட்பது புரிகிறது. அனுதேயி என்றால் ஜடப் பொருள் அல்ல. அது இயங்கும் உயிர் பொருள். மணப்பெண் மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லும் போது கூடவே இந்த உயிர்ப் பொருளும் செல்லும். அவள் சொன்ன வேலைகளைச் செய்யும். அப்படி என்ன சீதனம் அது என யோசிக்கிறீர்களா?
அதாவது அனுதேயி என்றால் பின் தொடர்ந்து வந்து சொன்னதை செய்பவர். அதாவது இங்கே இன்னொரு பெண் . ஆமாம். பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1. >>>>> வேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது. <<<<<<
2. >>>> சிவனும் வரதட்சணை வாங்காமல் இருக்க முடியாது. சிவன் வாங்கிய வரதட்சணை! கடவுளாகிய சிவன் வரதட்சணை வாங்கியதாம் <<<<<
-----------------------------
பெண்களை கேவலப்படுத்துன் விஷகருத்துக்களை உருவாக்கி வளர்த்து வருவது யார்?
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
3. **** பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? அதற்கான காரணத்தை பார்ப்போம். *****
.
மனதை வலிக்க செய்துவிட்டீர் வாத்தி, கொடுமை கொடுமை...!!!
ReplyDeleteஆறாவதாய்
ReplyDeleteபிறந்திருக்கிறது
பெண் குழந்தை
இம்முறையும்...
>>
மாப்ள, அவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போய்ய்யா முதல்ல
ஆறாவதாய்
ReplyDeleteபிறந்திருக்கிறது
பெண் குழந்தை
இம்முறையும்...
>>
மாப்ள, அவனை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போய்ய்யா முதல்ல
மனதை கனக்கச் செய்த கவிதை. வாழ்த்துக்கள்..
ReplyDeleteபெண்படும் பாடு அது சொல்லி மாளாது. எதிர்பாலினத்தின் வேதனை அறிய முயன்றிருக்கின்றீர்கள். வலியுணர்த்தும் கவிதை. பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteவருத்தமாய்த்தான் இருக்கிறது..நல்ல படைப்பு வாழ்த்துகள்..
ReplyDeleteநெஞ்சை பிழிகிற வரிகள்...
ReplyDeleteஎன்று தீரும் இக் கொடுமை!
ReplyDeleteஇன்றும் நடக்குதே இம்மடமை!
புலவர் சா இராமாநுசம்
இது தமிழ் பெண்களின் சாபம்...!
ReplyDeleteசுருக்குன்னு ஒரு கவிதை!!..
ReplyDeleteஇன்னுமா இது எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு, யாரும் போலீஸ் கோர்ட்க்கு போறதில்லையா?
படிக்கும் பொழுது மணம் கனமாகிறது .
ReplyDeleteவலிகளை வார்த்தையில் பதிவு செய்த விதம் சிறப்பு...
ReplyDeleteபடிக்கும் பொது உணரமுடிகிறது வலிகளை ..
வாழ்த்துக்கள்
இதில் குற்றத்தை யார்மேல் சுமத்துவதெனத் தெரியவில்லை.
ReplyDeleteகாரணம்,
பெண்சிசுவைக் கொல்வதும் ஒரு ‘பெண்’ (மருத்துவச்சி) தானே?
படிக்கும் போது மனம் வலிக்கின்றது பாஸ்
ReplyDeleteகொடுமையிலும் கொடுமை..
ReplyDeleteKavithai Summa 'Naruk' nu irukku Sago. Vaalthukkal.
ReplyDeleteTM 10.
மனதை நெகிழ வைத்து விட்டது கவிதை.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"