Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/05/2011

கேப்டன் தோனியை காப்பாற்றுங்கள்!


கேப்டன் தோனியை தடையில் இருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பு இந்திய பவுலர்களுக்கு உள்ளது. அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்க வேண்டும்.
 


வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இதில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், குறிப்பிட்ட நேரத்துக்குள் 3 ஓவர்கள் வரை குறைவாக வீசிய குற்றத்துக்காக, கேப்டன் தோனி மற்றும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 

ஏற்கனவே, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில், தாமதமாக பந்துவீசிய குற்றத்துக்காக, கேப்டன் தோனிக்கும் சக வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஐ.சி.சி., விதிப்படி,ஒரே ஆண்டுக்குள் மூன்று போட்டிகளில் தாமதமாக பந்துவீசும் அணியின் கேப்டன், அடுத்து வரும் ஒரு டெஸ்டில் பங்கேற்க தடைவிதிக்கப்படும்.
 
இந்நிலையில், நாளை டொமினிகாவில் துவங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய பவுலர்கள் விரைவாக பந்துவீசி, தோனியை தடையில் இருந்து காப்பாற்ற வேண்டும். இல்லையெனில், வரும் ஜூலை மாதம் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான, லார்ட்ஸ் டெஸ்டில் பங்கேற்க முடியாது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடக்கும் 2000 வது டெஸ்ட். வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்டில் தோனியை பங்கேற்க வைக்க வேண்டிய பொறுப்பு, இந்திய அணியின் பவுலர்கள் கையில் தான் உள்ளது.
 

17 comments:

  1. நாந்தான் ஃபர்ஸ்டா

    ReplyDelete
  2. தோனியை காப்பாத்தணுமா....இதே சானியா மிர்ஸா ந்னு சொல்லியிருந்தா கும்பல் அள்ளியிருக்கும் ஹஹா

    ReplyDelete
  3. நீ ஏன்யா அந்த பய புள்ளைக்காக கவலைப்படுறே!

    ReplyDelete
  4. Oh . . Its a new information . . .

    ReplyDelete
  5. நம்ம கேப்டன சாச்சிபுடாதீங்க மச்சான்

    ReplyDelete
  6. naama rendu perum innaikku cricket bat'ai kaiyil eduthirukkom.

    ReplyDelete
  7. இப்படியும் ஒரு சோதனையா ....

    ReplyDelete
  8. கேப்டன் கூலுக்கு இப்படி ஒரு சூடான நெருக்கடியா!பந்து வீச்சாளர்களே, கருன் சொன்னது போல் கொஞ்சம் பார்த்துச் செயல் படுங்க!

    ReplyDelete
  9. அப்புறம் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தோனியை காண முடியாது ,,,,))

    ReplyDelete
  10. மாப்ள தோனி இருந்தாலும் ஒன்னும் கிழிக்க போறதில்லை விடு மாப்ள

    ReplyDelete
  11. இதெல்லாம் சும்மா. அதை அவரே பார்த்துப்பாரு...

    ReplyDelete
  12. Sari... ishant, praveen kaiyilathaaney irukku...
    avanga enna mudivula irukkangannu theriyalaiyey...

    ReplyDelete
  13. போயி எதாவது குஜிலிய தேடட்டும் விடுங்க

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"