'விருதுநகர் மாவட்டதில் உள்ள பெருமாள்தேவன்பட்டி என்கிற ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் அலட்சியத்தால், அந்தப் பள்ளியின் கல்வித் தரம் குறைந்து விட்டது என, ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த வருட 'மாணவர்கள் சேர்க்கையும் சரிந்து விட்டது என ஆத்திரமடைந்த, மாணவர்களும், பெற்றோரும் பெரும் போராட்டம் நடத்தினர்' என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
அப்பள்ளியில், 36 மாணவ - மாணவியர் மட்டுமே இப்போது படிக்கின்றனர் எனவும், இரண்டு இடைநிலை ஆசிரியர், நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். பள்ளியில் உள்ள பல்வேறு குழு உறுப்பினர்களும், ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யும்படி, கல்வித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்; அவர்கள் மெத்தனமாக இருந்துள்ளனர். அதனால் தான் அப்பள்ளியில் கல்வித்தரம் குறைந்தது என பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதற்க்கு என்ன தீர்வு என பார்த்தல், அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும், ஒரே நேர்கோட்டில் இணைந்து சென்றால் தான், பள்ளியில் வளர்ச்சியும், மாற்றமும் இருக்கும்.'வங்கி கணக்கில் மாதந்தோறும் சம்பளம் வந்து சேர்ந்து விடுகிறது' என, பொறுப்பின்றி இருந்தால், மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறையாதா...
ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர் விகிதத்தை விட, உபரி ஆசிரியர்கள் பல நுாறு பேர் இருக்கின்றனர். மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிக்கு, இவர்களை மாற்றி விடலாம்.
மாணவர்கள் மிக குறைவாக பயிலும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தொகுப்பூதிய அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யலாம்.அரசு பள்ளிகளுக்கு எதிராக, பெற்றோர் போர்க்கொடி துாக்கும் முன், சம்பந்தப்பட்டோர் விழித்து செயல்பட்டால், அரசு பள்ளிகள் துாங்கி வழிய வேண்டி இருக்காது.
விழிக்குமா அரசு?
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"