Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/12/2018

ஏ.ஐ.சி.டி.இ.,யின்(AICTE) நுழைவுத்தேர்வுகள்...! தெரிந்துகொள்வோம்..

மேலாண்மை மற்றும் மருந்தியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் பட்டதாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., நடத்தும், சிமேட் மற்றும் ஜி.பி.ஏ.டி., ஆகிய தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை எழுதலாம்.

இத்தேர்வுகளில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சிமேட்

சிமேட்அனைத்து வகை மேலாண்மை பட்டப்படிப்பில், முதுநிலை பட்டம் பெற விரும்பும் மாணவர்கள், ‘காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்’ எனும் ‘சிமேட்’ நுழைவுத் தேர்வை எழுதலாம்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் பேஸ்டு முறையில், 180 நிமிடங்கள் இத்தேர்வு நடைபெறும். டேட்டா இன்டர்பிரிட்டேஷன் மற்றும் குவான்டிடேட்டிவ் டெக்னிக், லாஜிக்கல் ரீசனிங், லேங்குவேஜ் காம்பிரிஹென்சன் மற்றும் ஜெனரல் அவார்னஸ் உள்ளிட்ட 4 பிரிவுகளில், 25 கேள்விகள் வீதம் ஒவ்வொரு பிரிவிலும் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு; ஒவ்வொரு தவறான பதிலுக்கும் தலா 1 மதிப்பெண்ணை இழக்க நேரிடும் என்பதால் மாணவர்கள் கவனத்துடன் இத்தேவை எழுத வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: www.aicte-cmat.in

ஜி.பி.ஏ.டி.,

மருந்தியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், ‘கிராஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட்’ எனும் ஜி.பி.ஏ.டி., நுழைவுத் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், உதவித்தொகை பெறும் வாய்ப்பு உண்டு.

கல்வித்தகுதி: இளநிலை பி.பார்ம் பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.

தேர்வுமுறை: கம்ப்பியூட்டர் பேஸ்டு முறையில் 3 மணி நேரம் இத்தேர்வு நடைபெறும். மைக்ரோ பயலாஜி, கிளினிக்கல் பார்மசி, பார்மசூடிக்ஸ், பார்மகாலஜி, பார்மசூடிக்ஸ் கெமிஸ்ட்ரி, பிசிகல் பார்மசி, பார்மசூடிக்ஸ் அனலிசிஸ், பயோ கெமிஸ்ட்ரி மற்றும் மெடிக்கல் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.aicte-gpat.in

All India Council for Technical Education (AICTE) has released the exam date for the Common Management admission Test (CMAT) 2018. The exam is scheduled to be held on January 21, 2018.
The registration procedure will begin from October 20 and will conclude on December 15.

Eligibility criteria:

  • Candidates should have acquired a graduate degree in any dicisipline from a recognised university or institute
  • Final year students of Graduate Courses (10+2+3) whose result will be declared before commencement of admission for academic year 2018-19 can also apply for CMAT online exam

Paper pattern:

  • The exam will consist of 100 questions based on quantitative techniques and data interpretation, logical reasoning, language comprehension and general awareness
  • Duration of the test is 180 minutes (three hours)
Note: Candidates must note that there shall be negative marking for wrong answers, for each wrong answer one mark will be deducted.

About CMAT:

Common Management Admission Test (CMAT) is a national level entrance examination conducted by All India Council for Technical Education (AICTE) every year as per the directions of Ministry of Human Resource Development (MHRD), Government of India.
The CMAT score is accepted by all AICTE-Approved Institutions/University Departments/Constituent Colleges/Affiliated Colleges.

For more details, candidates can visit the official website.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"