தீராத நோய் அல்லது முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர், தொடர் சிகிச்சைக்குப் பிறகும் குணமடையாமல் கடுமையான துன்பங்களை அனுபவித்தார் என்றால் அவர் படும் துயரிலிரிந்து விடுவிப்பதற்காக செய்யப்படுவதே கருணைக்கொலை (Euthanasia).
கருணைக் கொலையில், இரண்டு வகைகள் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, அதுவரை அளித்துவந்த சிகிச்சைகளை நிறுத்தி அவர்களை இறக்கச் செய்வது 'பேசிவ் எத்னேஸியா' (Passive Euthanasia). ஊசி அல்லது வேறு ஏதேனும் முயற்சியால் அவர்களை இறக்கச்செய்வது 'ஆக்டிவ் எத்னேஸியா' (Active Euthanasia). 'பேசிவ் எத்னேஸியா' பெரும்பாலான இடங்களில் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கருணைக்கொலை தொடர்பாக இந்தியாவில் நெடுங்காலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. தீராத நோய்வாய்ப்பட்டு கடும் வலியை அனுபவித்து ஒருவரை கருணைக்கொலை செய்வது விடுதலையே என்று ஒரு தரப்பும், ஒரு உயிரை எடுக்க எவருக்கும் உரிமையில்லை... கருணைக்கொலை என்ற பெயரில் அப்படிச் செய்வது கொலைக்குச் சமமானது என்று இன்னொரு தரப்பும் குரல் கொடுத்து வருகிறது.
தன்மானத்துடன் இறப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை, கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும். தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். அதே நேரத்தில் கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுக்க வேண்டும்.
முன்பைவிட, கருணைக்கொலைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும், கடுமையாகக் கண்காணிக்கப்படவேண்டும். ஒரு மருத்துவக் குழு ஏற்படுத்தி அவர்களின் அனுமதி பெற்றபிறகே கருணைக்கொலை செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"