Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/10/2018

காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பு பற்றி தெரியுமா?

காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி. 

இந்த படிப்பு எங்கு படிப்பது? 
வேலைவாய்ப்பு எப்படி?

''இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்பது கொல்கத்தாவில் இருக்கிறது. இதன் மூலமாகத்தான் இந்த படிப்பை படிக்க முடியும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இந்த இன்ஸ்டிடியூட்டில் விண்ணப்பித்து படிப்பைத் தொடங்கலாம். 

ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் மட்டும் தேர்வு நடைபெறும். வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் இந்த படிப்பை படிக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், ஜூன் மற்றும் டிசம்பரில்தான் தேர்வு எழுத முடியும்.

இந்த படிப்பில் மூன்று நிலை உள்ளன. ஃபவுண்டேஷன், இன்டெர்மீடியேட், ஃபைனல் ஸ்டேஜ் என இந்த மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். சி.ஏ. படிப்பில் வரக்கூடிய காஸ்டிங், அக்கவுன்ட்ஸ் வரி மற்றும் சட்டப் படிப்புகள் இந்தப் படிப்பிலும் இருக்கிறது. பி.எஸ்.சி., இன்ஜினீயரிங் என எந்த இளநிலை பட்டம் முடித்தவர்களும் இந்த காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பை படிக்கலாம். இளநிலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக இன்டெர்மீடியேட் நிலைக்குப் போகலாம். அவர்கள் ஃபவுண்டேஷன் நிலை படிக்க வேண்டியதில்லை.

இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் மாணவர்கள் இந்த படிப்பை படிக்கிறார்கள். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி அடைகிறார்கள். காரணம், இந்த படிப்பின் கடினமான தன்மையே. இன்டெர்மீடியேட் நிலையில், இரண்டு குரூப் இருக்கிறது. இந்த குரூப்பில் மூன்று பேப்பர்கள் இருக்கும். இந்த மூன்று பேப்பர்களிலும் தலா 40 மதிப்பெண் குறைந்தபட்சமாகவும், மூன்று பேப்பரின் மதிப்பெண்னை கூட்டினால் 150 மதிப்பெண்களும் வர வேண்டும்.

இந்த இரண்டு கண்டிஷனில் ஒன்று தவறினாலும் அந்த குரூப் பேப்பர்கள் அனைத்தையும் எழுத வேண்டும். இப்படிதான் ஃபைனல் நிலையும் இருக்கும். இந்த தேர்வை ஏன் இப்படி கடினமாக வைத்திருக்கிறார்கள்? ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடிய திறன் படைத்தவர்களால்தான் திறமையான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்-ஆக பணிபுரிய முடியும். அதற்கு தகுந்த வகையில் மாணவர்களை தயார்படுத்துகின்றனர்.

இந்த தேர்வுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்ஸ்டிடியூட் மூலமாகவும், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இறுதித் தேர்வு முடிந்து தேர்ச்சியடைந்த பின்பு ஐ.சி.டபிள்யூ.ஏ. உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு!

இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், குறைந்தளவிலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்டுகள் இருக்கிறார்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் வேலைக்கும் போகலாம் அல்லது சொந்தமாக காஸ்ட் அக்கவுன்டிங் பிராக்டீஸ் செய்யலாம். வேலைக்குப் போக நினைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் ஃபைனான்ஸ், டிரஷரி, பட்ஜெட்டிங், காஸ்டிங், ஃபாரக்ஸ் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் ஆடிட்டிங் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம்.

இந்த படிப்பில் நல்ல ரேங்க் ஹோல்டர், கிரேடு வாங்கியவர்கள் எனில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மாதம் நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்!'.

இப்பவே அப்லை பண்ணுவோம்.. மாதம் நான்கு இலட்சம் சம்பாரிப்போம்..

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"