Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/10/2018

மனிதனுக்குள்ள உணர்வு அரசுக்கு இல்லையே...


'எய்ம்ஸ்' மருத்துவமனை, தமிழர்களின் பகல் கனவாக இருந்து வருகிறது. அன்று, மன்மோகன் சிங் தலைமையிலான, காங்., கூட்டணி ஆட்சி, மத்தியில், 10 ஆண்டுகள் நடந்த போது, லாபம் தரும் இலாகாக்களை பேரம் பேசி, கருணாநிதி வாங்கிக் கொண்டார்.போதாக்குறைக்கு, தன் மகன் அழகிரியை, கேபினட் அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

தமிழகத்தையும், தமிழர்களையும் பற்றி சிந்திக்க, கருணாநிதிக்கு நேரமில்லை. அன்றே, எய்ம்ஸ் மருத்துவமனையை, உரிமையுடன் தமிழகத்திற்கு போராடி பெற்று இருக்கலாம்!எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விட்டால், தனியார் மருத்துவமனைகளுக்கு வருமானம் பறி போய் விடும் என்ற சுயநலத்துடன் இருந்து விட்டார் போலும்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தேவையான இடங்களை தேர்வு செய்து கொடுக்க, மோடி தலைமையிலான, மத்திய அரசு கேட்டுள்ளது. பெருந்துறை, செங்கல்பட்டு, தோப்பூர், செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களை தேர்வு செய்துள்ள, தமிழக அரசு, முடிவான ஒரு ஊரை இன்னும் கூறவில்லை.

மத்திய அரசு குழுவினரும், தமிழக அரசு குறிப்பிட்டுள்ள இடங்களை பார்த்து சென்றுள்ளனர். மத்திய அரசுக்கு, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., மாநில அரசு, தொடர் அழுத்தம் கொடுக்காத காரணத்தால், எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் பகல் கனவாக உள்ளது.

மத்திய பட்ஜெட்டிலும், தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு, நிதி ஒதுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளது.முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய, சிறு கல்லை கூட நகர்த்தவில்லை. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பொது நல வழக்காக, மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய போராடுகிறார்.தனி மனிதனுக்குள்ள உணர்வு, அரசுக்கு இல்லாததது வேதனை அளிக்கிறது!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி அவர்கள் ஒரு நாளிதழுக்கு இதை கடிதமாக அனுப்பி உள்ளார். நம்முடைய மனநிலையும் இவ்வாறே இருக்கிறது.

பெரியார் சிலையை இட்ப்பதாக சொன்ன ராஜாவின் ட்விட்டர் செய்தியை உலகளவில் ட்ரன்ட் ஆக்கினார்கள் நம்ம நெட்டிசங்கள். ஏன் இந்த மாதிரியான விசயங்களையும் ட்ரன்ட் ஆக்கி மக்களின் கவனத்தை நாம் திருப்ப்[அக் கூடாது?

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"