வணிகவியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி?
1. ப்ளூ பிரின்ட்படி கேள்வித்தாள் வருவது இந்த வருடமே கடைசி என்பதால், சுலபமாகத்தான் வரும். புரிந்து படித்தால், அருமையான சப்ஜெக்ட், காமர்ஸ்.
2. மொத்தம் 8 சேப்டர். இதிலிருந்து 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் வரும். இதில், 20 மதிப்பெண்ணுக்குச் சரியான விடையைத்தேடு, 20 மதிப்பெண்ணுக்குக் கோடிட்ட இடத்தை நிரப்புக என்று கேட்பார்கள். 36 கேள்விகள் புக் பேக்கில் இருந்தே வரும் என்பதால், 40 மதிப்பெண்ணைச் சுலபமாகவே எடுத்துவிடலாம். ஆனால், 'கோடிட்ட இடத்தை நிரப்புக' பகுதியின் கேள்விகளை, 'சரியான விடையைத் தேர்ந்தெடு' என மாற்றிக் கேட்கும்போதோ, 'சரியான விடையைத் தேர்ந்தெடு' பகுதியின் கேள்விகளை, 'கோடிட்ட இடத்தை நிரப்புக' எனக் கேட்கும்போதோ, சில மாணவர்கள் சென்டமை நூலிழையில் தவற விட்டுவிடுகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.
3. மேலே சொன்ன பாயின்ட்போலவே, ஒரு விரிவாக்கத்தை சொல்லிவிட்டு, அதைச் சொன்னவர் யாரென்று கேட்பார்கள். குழப்பத்தில் பதிலைத் தவறவிடாதீர்கள்.
4. ஒன் வேர்டைப் பொறுத்தவரை, முதல் இரண்டு சேப்டர்களில் தலா 3 கேள்விகளும், 3 மற்றும் 4-வது சேப்டரில் தலா 7 கேள்விகளும், 5 மற்றும் 6-வது சேப்டர்களில் தலா 6 கேள்விகளும், 7 மற்றும் 8-வது சேப்டர்களில் தலா 4 கேள்விகளும் கேட்கப்படும்.
5. 4 மதிப்பெண் கேள்விகள் 15 கேட்கப்படும். அதில் பத்துக்கு பதில் எழுதவேண்டும். இதில், தனியார் வணிகம் என்கிற முதல் சேப்டரில் ஒரு கேள்வியும், மற்ற 7 சேப்டர்களில் தலா இரண்டு கேள்விகளும் கேட்பார்கள். இந்த சேப்டர்களில் வரும் இலக்கணங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துப் படித்தால் 40 மதிப்பெண் உங்களுக்கே உங்களுக்குத்தான்.
6. 4 மதிப்பெண் கேள்விகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம்.
(அ) ஒருங்கிணைத்தல் என்றால் என்ன?
(ஆ) தரவரிசை முறை கோட்பாடு
(இ) பன்னாட்டு நிர்மத்துக்கு எடுத்துக்காட்டு
(ஈ) கர்த்தா என்பவர் யார்?
(உ) வரையறா பொறுப்பு
(ஊ) கூட்டாளிக்கிடையே நிலவும் உறவுமுறை
(எ) உழையா கூட்டாளி என்பவர் யார்?
(ஏ) கூட்டு மற்றும் தனிப்பொறுப்பு
(ஐ) பொது கூட்டுறு என்றால் என்ன?
(ஆ) தரவரிசை முறை கோட்பாடு
(இ) பன்னாட்டு நிர்மத்துக்கு எடுத்துக்காட்டு
(ஈ) கர்த்தா என்பவர் யார்?
(உ) வரையறா பொறுப்பு
(ஊ) கூட்டாளிக்கிடையே நிலவும் உறவுமுறை
(எ) உழையா கூட்டாளி என்பவர் யார்?
(ஏ) கூட்டு மற்றும் தனிப்பொறுப்பு
(ஐ) பொது கூட்டுறு என்றால் என்ன?
(ஒ) பட்டியல் இடுதல் என்றால் என்ன?
(ஓ) பொதுக் கழகத்திற்கு எகா தருக?
7. 8 மதிப்பெண் கேள்விகளைப் பொறுத்தவரை, இரண்டாவது சேப்டரைத் தவிர, மிச்சம் உள்ள 7 சேப்டர்களில், நாலாவது சேப்டரிலேயே இரண்டு 8 மதிப்பெண் கேள்விகள் வந்துவிடும். இதில்...
(அ) இந்து கூட்டுக்குடும்பத்தைப் பற்றி விவரி.
(ஆ) கூட்டாண்மையில் இளவரின் நிலை...
(இ) செயல்முறையின் விதிகளின் உள்ளடக்கம்
(ஈ) பங்குகளை வட்டத்தில் வெளியிட நிபந்தனைகள்.
(உ) முறைகேடான ஒதுக்கீடு பற்றி...
(ஊ) முதலீட்டாளர், ஊக வணிக வேறுபாடு.
(எ) பொதுத்துறை, தனியார்த்துறை வேறுபாடு
(ஏ) போல்ட் ஆற்றும் சேவைகள்
(ஐ) ஊக வணிகத்தின் வகைகள்.
போன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. ஸோ, எல்லாவற்றையும் புரிந்து படியுங்கள்.
8. 20 மதிப்பெண் கேள்விகள் 4 கேட்கப்படும். இந்தப் பகுதியில் மொத்த மதிப்பெண்ணையும் எடுக்க, இரண்டு சுலபமான வழிகள் இருக்கிறது. இது, கடைசி நேரத்தில் எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்துவிடப் போராடும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
(அ) முதல் வழி ...
முதல் சேப்டரில் இருக்கும் மூன்று 20 மதிப்பெண் கேள்விகள், இரண்டாவது சேப்டரில் நான்கு 20 மதிப்பெண் கேள்விகளை முழுமையாகப் படித்துவிடுங்கள். 40 மதிப்பெண் கிடைப்பது உறுதி.
(ஆ) இரண்டாவது வழி...
முதல் சேப்டர் அல்லது 8-வது சேப்டர்,
2-வது சேப்டர் அல்லது 7-வது சேப்டர்,
3-வது சேப்டர் அல்லது 6-வது சேப்டர்,
4-வது அல்லது 5-வது சேப்டர் .
என்று படித்தாலும் 80 மதிப்பெண்களையும் முழுதாகப் பெற்றுவிடலாம்.
வெற்றி உங்களுக்கே...
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"