Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/15/2018

மார்க்கெட்டிங் நண்பர்களே.. கொஞ்சம் இதை படிங்க...


வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது மிக கவனமாக இருக்கவும்..



செய்யகூடாத சில காரியம் :-

* பேருந்தில் ஜன்னல் ஓரம் உட்கார வேண்டாம் .(அனல் காற்று வீசுகிறது).

*கோழி,நண்டு  சாப்பிட வேண்டாம்.

*மிக குளிர்ந்த உணவை சாப்பிட வேண்டாம்.

* மிக காரமான உணவை சாப்பிட வேண்டாம்.

* இருசக்கர வாகண பயனம்  நீண்ட தூரம் செய்ய வேண்டாம்.

* பாட்டிலில் அடைக்கபட்ட குளிர்பானம் அதிகம் குடிக்க வேண்டாம்.

*ஜூஸ் குடித்ததால் தண்ணீர் குடிக்காமல் விட்டுவிட வேண்டாம்.

* சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டாம்.

* ஒரு நாள் போட்ட ஆடையை துவைக்காமல் திரும்ப அணிய வேண்டாம்...


கண்டிப்பாக சொய்ய வேண்டியது :-

* குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் தொடர்ந்து குடிக்கவும்...

*சீரகதண்ணீர் குடிப்பது நல்லது உடல் சூட்டை சீரகம் சமப்படுத்தும்.

*இளநீர், பதநீர்  அருந்துவது நல்லது( நமக்கும் விவசாயிக்கும்).

*மிக எளிதாக சீரனம் ஆகும் உணவை சாப்பிடவும் ( தயிர் சோறு , பருப்பு சோறு , ரசம் ).

* வாழத்தண்டு ஆப்பிள் காரட் இதை அதிகம் சாப்பிடவும் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கும் .

* தினமும் இருமுறை குளிப்பது நல்லது.

இப்போது தெரிகிறது மார்கெட்டிங் நண்பர்களுக்கு மரத்தின் அருமை வெயிலில் ஒதுங்கி நிற்க நிழல் இல்லை. இனியாவது நமது வீட்டு தெருவின் ஓரம் மரம் நடுவோம்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"