Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/07/2018

How to get centum in 12th Maths


12 ஆம் வகுப்பு கணித பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெறுவது எப்படி?

1. ஒரு மதிப்பெண் கணக்குகள் புத்தகம் முழுக்கச் சேர்த்து 271 இருக்கின்றன. இதை ஐம்பது ஐம்பதாகப் பிரித்து, 50 கணக்குகளுக்கு இரண்டு மணி நேரம் என டைம் டேபிள் போட்டுப் பாருங்கள். இதன்மூலம் 30 மதிப்பெண் உங்களுக்கு உறுதியாகிவிடும்.

2. அணிகள் (35 வினாக்கள்), கலப்பெண்கள் (16 வினாக்கள்), தனிநிலை கணக்கியல் (22 வினாக்கள்), வகை நுண்கணிதம் II (11 வினாக்கள்) என ஜஸ்ட் 84 கணக்குகளே. 6 மார்க் வினா-விடை பகுதிக்காக மாணவர்கள் சால்வ் செய்து பார்க்கவேண்டியது. இந்த 84 கணக்குகளை நன்கு போட்டுப் பழகியிருந்தால், 42 மதிப்பெண்கள் கியாரன்டி.

3. அடுத்து, 10 மதிப்பெண் கணக்குகள் 10 போடவேண்டும். இதற்கு, வெக்டர் இயற்கணிதத்தில் 20 கணக்குகள்(இதில் இரண்டு கணக்குகள் வரும்), பகுமுறை வடிவ கணிதத்தில் 28 கணக்குகள்(இதில் மூன்று கணக்குகள் வரும்), தனிநிலை கணக்கியலில் 15 கணக்குகள், கலப்பெண்களில் 16 கணக்குகள் என 79  கணக்குகள் மற்றும் பயிற்சி 8.6, 10.5, 1.2, 5.11 களில்   உள்ள கணக்குகளைப் போட்டு பழகினால், உங்களுக்கு 100 மதிப்பெண் கன்ஃபார்ம்.

4. '10 கணக்குகளை சால்வ் செய்து பார்த்தால் போதும்; 15 கணக்குகளைப் சால்வ் செய்து பார்த்தால் போதும்' எனச் சொல்லாததற்கு காரணம், அடுத்த வருடம் இன்ஜினீயரிங் படிக்கப்போகிறீர்கள் என்றால், அப்போது கஷ்டம் ஏற்படும். கணக்குகளை செலக்டிவாக சால்வ் செய்து பார்ப்பதற்குப் பதில், இத்தனை கணக்குகளுக்கு இவ்வளவு நேரம் என டைம் மேனேஜ்மென்ட் செய்து, அனைத்தையும் சால்வ் செய்து பழகுங்கள். இதன்மூலம் 142 மதிப்பெண்களைச் சுலபமாக எடுத்துவிடலாம்.

5. வலைதளங்களில் அரசுப் பொதுத் தேர்வுக்கான வினா-விடைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எத்தனை கணக்குகள் உங்களுக்கு சால்வ் செய்யத் தெரிகிறது என்று செக் பண்ணுங்கள்.

6. உருவாக்கப்பட்ட வினாக்கள் (created type) பார்ப்பதற்குக் கடினமாகத்தான் தெரியும். பதட்டப்படாமல் வாசித்துப் புரிந்துகொண்டு விடை எழுதுங்கள்.

7. கட்டாய வினாக்கள் பாடப்பகுதியின் எந்த இடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.

8. பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு இன்னும் 4 நாள்கள் விடுமுறை இருப்பதால், பதற்றப்படாமல் பரீட்சைக்குத் தயாராகுங்கள். 

வெற்றி உங்களுக்கே...

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"