Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/12/2018

Exam நேரத்தில் செய்யக்கூடாதவைகள் என்னென்ன?


தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது மிக முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், கிணற்றில், ஓடையில்  டைவ் அடித்து குதித்து குளிப்பது, மரம் ஏறுவது, முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவார்கள். அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை(அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும்கூட) தயவுசெய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். தேர்வு முடிந்த பிறகு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும்.

கிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

ஏனெனில், தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

தொலைகாட்சி, சினிமா, நாடகம், கேளிக்கைகள் போன்றவைகளையும் இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

கண்ட கண்ட ஓட்டல்கள், கையேந்தி  பவன்கள் , எண்ணையில் பொறித்த உணவுகள் உண்பது போன்றவற்றை  தவிர்த்தல் வேண்டும்.

வெற்றி நமதே....

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"