Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/14/2018

அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை? ஏன் ?


நேரடி மக்களாட்சி முறை தான், இந்தியாவிற்கு தேவை; மக்கள் சொல்வதும், நினைப்பதும் நடக்க வேண்டும்.

பிரிட்டனில், 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு, பிரதமருக்கு மனு அனுப்பினால், பிரதமர் அலுவலகம் அடுத்த, 48 மணி நேரத்திற்குள், அதற்கு பதில் அளித்தாக வேண்டும். ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு, பார்லிமென்டிற்கு மனு அனுப்பினால், அடுத்த கூட்டத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் விவாதம் நடத்தப்பட்டே ஆக வேண்டும்.

இங்கு, சாமானியன் குரல், சபையில் எதிரொலிப்பது இல்லை. வெளிப்படையாக, எதையும் விவாதிப்பதில்லை. உலகின் அழகான நகரங்களில் ஒன்றான, தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில், தண்ணீர் கிடையாது. பெங்களூரில், 9 சதவீத நிலத்தடி நீர் இருப்பதாகவும், 30 ஆண்டுகளில் அதுவும் முற்றிலும் வறண்டு போகும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில், வேலையின்மை பிரச்னை உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சியால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 75 ஆயிரம் பொறியாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாட்டில் உள்ள, 500 முன்னணி கல்லுாரிகளில், 5 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கிறது. இந்திய கல்வித் துறை, தரமானதாக மாறுவதற்கு பதிலாக, பகட்டானதாக மாறியுள்ளது.

கல்விக்கு ஒதுக்கப்பட்ட, 1.3 லட்சம் கோடி ரூபாயில், 87 சதவீதம், கட்டுமானப் பணிக்கே செலவிடப்பட்டுள்ளது. கட்டுமானம் மட்டுமே தரத்தின் அடையாளம் அல்ல. நம் முன்னோர் மரத்தடியில் படித்த அறிவாளிகளாக இருந்துள்ளனர். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாமல், எந்த மாற்றத்தையும் நம்மால் கொண்டு வர முடியாது.

இப்படி எல்லாம், சமீபத்தில், கோவை தொழில் நுட்பக் கல்லுாரியில் நடந்த விழாவில், 'நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞரின் பங்கு' என்ற தலைப்பில், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,யான வருண் பேசினார்.'

அரசியல் சீர்திருத்தத்திற்காகவே, எம்.பி.,க்களை திரும்பப் பெறும் மசோதா ஒன்றை கொண்டு வந்தேன். அதற்கு ஆதரவு இல்லை' என மனம் வருந்தினார், வருண்! ஆளும் கட்சியாக இருந்தாலும், நாட்டு நடப்பை போட்டு உடைத்த, வருணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"