Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/13/2018

காய்கறிகளின் சத்து முழுமையாக கிடைக்கனுமா ? இப்படி சாப்பிடுங்கள்


பொதுவாக காய்கறிகளை சமைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என படித்திருப்போம்.

அதிலும் குறிப்பாக ஒரு சில காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் அந்த காய்கறிகளின் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.


கேரட்

வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள கேரட், கண்பார்வைக்கு மட்டுமல்லாது உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. இதை வேகவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அப்படியே சாப்பிட்டால் அனைத்து சத்துகளையும் பெற முடியும்.
 
தக்காளி

இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து பல சருமப் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதையும் அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். புற்றுநோய் தடுப்பு சக்தி மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய ஆற்றல் தக்காளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளங்கி

இதை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க செய்வது மட்டுமின்றி நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் முள்ளங்கி உதவுகிறது.

பசலைக்கீரை

இதில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைவதற்கும் வலிமை பெறுவதற்கும் உதவும் பசலைக்கீரையை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது சிறந்தது.

பீட்ரூட்

இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் பீட்ரூட்டும் ஒன்று. நம் உடலின் இரத்த அளவை அதிகரித்து, ஆரோக்கியத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றும் பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடுங்கள்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"