ஆங்கிலேயர், இந்தியாவை அடிமைப்படுத்திய பின், தாய்மொழியை இழந்தோம்; ஆடையை இழந்தோம்; பண்பாட்டை மறந்தோம்; கலாசாரத்தை கைவிட்டோம்.'தமிழ்... தமிழ்...' எனக் கூவி, இந்தியை விரட்டினோம்;
ஆங்கில மோகினியை, நடு வீட்டில் குடியமர்த்தினோம். தமிழகத்தின் தலைநகர் சென்னையில், வேட்டி கட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியை, வாசலில் நிறுத்தி அவமானப்படுத்தினோம்.
'பெண்கள், ஜீன்ஸ் - பேன்ட் அணிந்து, மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது; எதை மறைக்க வேண்டுமோ, அதை மறைக்க வேண்டும். இது போன்ற உடைகள், இந்திய கலாசாரத்துக்கு எதிரானது' என, பாடகர் ஜேசுதாஸ், காந்தி ஜெயந்தி விழாவில் பேசியிருந்தார்.
இத்தாலி பூர்வீகமான சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர், இந்தியாவில், இந்திய உடைகளில் ஒன்றான சேலையை அணிகின்றனர்.நம் இந்திய இளைஞியரோ, மேலை நாட்டு உடைகளில் மோகம் கொண்டிருக்கின்றனர்.
இளம் பெண்கள், 'சிக்' என அணியும் ஜீன்சும், 'டைட்' பனியனும், இளைஞர்களின் மனதைக் கெடுக்கும். பின், 'செக்ஸ் டார்ச்சர்' என, பேரணி நடத்தி பயன் இல்லை. புரிந்து கொள்ளுங்கள் பெண்களே!
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"