Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/07/2018

How to get centum in 12th Botany



உயிரியல் பாடத்தில் சென்டம்... பெறுவது எப்படி ..?
1. தாவரவியல் பாடத்தில் சென்டம் வாங்குவது எப்படி என இந்தப் பதிவில் காண்போம்.

2. தாவரவியலில் 10 மார்க் கேள்விகள் முதல் சேப்டரிலிருந்து ஒன்று, இரண்டாம் சேப்டரிலிருந்து ஒன்று, நான்கு மற்றும் ஐந்தாவது சேப்டரில் ஒன்று என 4 கேட்கப்படும். இதில் இரண்டுக்கு பதில் எழுத வேண்டும். அதனால், மேலே சொன்ன நான்கு சேப்டர்களின் 10 மார்க் கேள்விகளை நன்கு படித்துவிடுங்கள்.

3. விலங்கியலில் 10 மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, முதல் சேப்டரிலிருந்து இரண்டு, ஐந்தாவது சேப்டரிலிருந்து ஒன்று, ஆறாவது சேப்டரிலிருந்து ஒன்று என 4 கேள்விகள் கேட்கப்படும். இதில் இரண்டுக்கு பதில் எழுத வேண்டும்.

4. டயகிராமுடன் எழுத வேண்டிய 10 மார்க் கேள்விக்கு படத்துக்கு 4 மார்க், பதிலுக்கு 6 மார்க் எனப் பிரித்து வழங்கப்படும். 5 மார்க் அல்லது 3 மார்க் டயகிராம் கேள்விகளில், படம் வரைந்து பாகம் குறிக்க மட்டுமே கேட்கப்படும்.

5. தாவரவியல் 5 மார்க் கேள்விகளில், 1,2,3,4,6 ஆகிய ஐந்து சேப்டர்களில் தலா ஒரு கேள்வி, 5-வது சேப்டரில் 2 என, ஏழு கேள்விகள் கேட்கப்படும். இதில் 4 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். இந்தக் கடைசி நேரத்தில் படிக்கச் சிரமப்படுபவர்கள் சேப்டர் 6-ஐ மட்டும் விட்டுவிடலாம்.

6. விலங்கியலில், 1,2,3,4,7 ஆகிய சேப்டர்களில் தலா ஒரு கேள்வி என 5 கேள்விகள் வரும். இதில் 3-க்கு பதில் எழுதினால் போதும். இந்த 3 கேள்விகளில் சேப்டர் 3-ல் இருக்கிற நோய்த்தடுப்க் காப்பியல் பற்றிய கேள்வி நிச்சயம் கேட்கப்படும் என்று அரசு அறிவித்துவிட்டது.

இதேபோல, தாவரவியலில் 5 மார்க் கேள்விகளில் பெந்தம் & ஹூக்கர் வகைப்பாட்டின் நிறைகள், ஹெர்பேரியத்தின் முக்கியத்துவம், அகில உலகத் தாவரவியல் பெயர் சூட்டுதலின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை நன்கு படித்துவிடுங்கள். இவை கேட்கப்பட்ட அதிக வாய்ப்புகள் கேள்விகள்.

7. 3 மார்க் கேள்விகளில் முழு மதிப்பெண் வாங்க, தாவரவியல் மற்றும் விலங்கியலில் 1,2,3,4,5,6 ஆகிய பாடங்களில் இருக்கிற 3 மார்க் கேள்விகள் அனைத்தையும் மனனம் செய்துவிடுங்கள். வேறு வழியில்லை.

8. தாவரவியலில் 14, விலங்கியலில் 16 என 30 ஒரு மார்க் கேள்விகள் வரும். இதற்கு நோ சாய்ஸ். பாடங்களின் பின் பகுதியில் இருக்கிற ஒன் வேர்டு கேள்விகளை மட்டும் படித்தால் போதவே போதாது. அத்தனை பாடங்களையும் வரிக்கு வரி ஆழ்ந்து படித்தால் மட்டுமே இந்த 30 மார்க்கையும் வாங்க முடியும். சிரமமாக உணர்பவர்கள், 2006-2017 வரையிலான கேள்வித்தாள்கள் அத்தனையையும் ரிவிஷன் செய்துவிடுங்கள். பயாலஜியில் பல மாணவர்கள் சென்டமை கோட்டை விடுவதற்குக் காரணம் இந்த ஒன் வேர்ட்ஸ்தான் என்பதால், கூடுதல் கவனம் மாணவர்களே.''

வெற்றி உங்களுக்கே...

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"