Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/10/2018

கே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற முத்திரையை மாற்றத்தான் அடித்து ஆடினேன்’ என்று பஞ்சாப் அணி வீரர் ராகுல் கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் கவுதம் கம்பீர் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல், 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் மிக விரைவான அரைசதம் இது. இதற்கு முன் ஐபிஎல் போட்டியில், யூசுப் பதான் (2004) சுனில் நரேன் (2017) ஆகியோர் 15 ரன்களில் அரைசதம் அடித்திருந்தனர். அந்த சாதனையை முறியடித்தார் ராகுல்.

ராகுல் 51 ரன்களிலும், கருண் நாயர் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விளையாடிய மில்லர் மற்றும் ஸ்டொய்னிஸ் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

ஆட்டநாயகன் விருது பெற்ற கே.எல்.ராகுல் கூறும்போது, ‘கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்திரை குத்தப்பட்டிருக்கிறேன். அதில் இருந்து விடுபட நினைத்து அடித்து ஆட நினைத்தேன். ரெக்கார்டுகளை உடைத்ததும் சாதனை படைத்ததும் அப்படித்தான். இது போன்றே அடுத்தடுத்த போட்டிகளிலும் ஆட இருக்கிறேன்’ என்றார்.

டெல்லி கேப்டன் கவுதம் காம்பீர் கூறும்போது, ‘நாங்கள் கவுரவமான ஸ்கோரை எடுத்திருந்தோம். ஆனால், முதல் ஆறு ஓவர்களிலேயே போட்டி எங்களை விட்டுச் சென்றுவிட்டது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்’ என்றார்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"