காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. இதை கண்டித்து, அ.தி.மு.க., உண்ணாவிரதத்தை நடத்தியது.
எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும் முழு கடையடைப்பு நடத்தி முடித்து விட்டது. தே.மு.தி.க., - பா.ம.க., என, ஒவ்வொரு கட்சியும், போராட்ட தேதிகளை அறிவித்து, களம் இறங்கவுள்ளன.
சின்னச் சின்னக் கட்சிகள் கூட, தனியாக போராட தயாராகி விட் டன. நாட்டை, 50 ஆண்டு காலத்திற்கு மேல் ஆண்ட காங்கிரஸ், தனியாகப் போராடும் தெம்போ, திராணியோ, தைரியமோ, தொண்டர்கள் பலமோ இன்றி உள்ளது.
தி.மு.க., நடத்தும் போராட்டத்தில், கும்பலோடு கோவிந்தா... என, அறைகூவல் போட தயாராக உள்ளது, அக்கட்சி!அ.தி.மு.க.,விலிருந்து, பா.ஜ.,வுக்கு தாவி, அங்கு கொஞ்ச காலம் குப்பை கொட்டி, பதவி சுகம் அனுபவித்த, திருநாவுக்கரசர், பின் அங்கிருந்து காங்கிரசுக்கு குதித்து, இன்னமும் மனதில், அ.தி.மு.க., அபிமானத்தோடு உலவிக் கொண்டிருக்கிறார்.
'காவிரி பிரச்னையில், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் உண்ணாவிரத போராட்டம் எவ்விதமான பயனையும் தராது' என்கிறார்.
உங்களுக்கு தைரியமும், தமிழக மக்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுலிடமும், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவிடமும், நேரில் சென்று, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, எதிர்ப்புக் காட்டாமல் அமைதியாக இருங்கள்' என்று கூறி விட்டு வாருங்கள், திருநாவுக்கரசரே!
தமிழக மக்கள் எப்படி வரவேற்கின்றனர் என்பதை பார்க்கலாம். அதை எல்லாம் கேட்காமல், வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறீர்கள்!
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"