Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/04/2018

+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான டிப்ஸ்


ஒரு மதிப்பெண் கேள்வி:

50 மதிப்பெண்ணுக்கு பிராக்டிகல் செய்துவிடுவார்கள். மீதமுள்ள 150 மதிப்பெண்களில் 75 மதிப்பெண்களுக்கு choose the best answer என 75 ஒன் வேர்ட் கேட்பார்கள். அத்தனைக்கும் பதில் அளிக்க வேண்டும். இதற்கு, புக்பேக்கில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டும் படிப்பதில் பயனில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தின் இரண்டு வால்யூம்களையும் படித்தால்தான் 75 மதிப்பெண் எடுக்கமுடியும்.

OMR ஷீட்டில் எப்படிப் பூர்த்தி செய்வது?

கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு வார்த்தை கேள்விகளுக்கான பதிலை OMR ஷீட்டில்தான் (டி.என்.பி.எஸ்.சி. எக்ஸாம்போல), கறுப்பு பால் பாயின்ட் பேனாவால் ஷேட் செய்யவேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்புவரை பென்சிலால் ஷேட் செய்யச் சொல்லியிருந்ததால், போன வருடம்கூட பலர் பென்சிலுடன் வந்து தவித்தார்கள். ஸோ, கறுப்பு பால் பாயின்ட் பேனாவை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் கேள்வித்தாளிலும் OMR ஷீட்டிலும் ஒரே எண் உள்ளதா என்பதை செக் செய்துவிட்டு, அந்த எண்ணை ஷேட் செய்யுங்கள். பிறகு, பதில்களை ஷேட் செய்ய ஆரம்பியுங்கள்.

5 மதிப்பெண் கேள்விகளில் முக்கியமானவை:

7 கேள்விகள் கேட்பார்கள். முதல் சேப்டரிலிருந்து ஐந்தாவது சேப்டர் வரை, இரண்டு 5 மதிப்பெண் கேள்விகளும், ஆறாவது சேப்டரில் 2 கேள்விகளும், ஏழாவது சேப்டரில் ஒரு கேள்வியும் வரும். ஸோ, வால்யூம் ஒன்றிலிருந்தே 5 கேள்விகள் வந்துவிடும்.

இதில், வால்யூம் ஒன்றில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிற கேள்விகளைப் பார்ப்போம்.

(அ) தானியங்கி எழுத்துப்பிழைத் திருத்தம்.

(ஆ) உரையில் ஒரு சொல்லுக்குப் பதிலாக, பிறிதொரு சொல்லைப் புகுத்தும் முறை.

(இ) தரவு தளத்தின் வகைகள்.

(ஈ) சார்பு என்றால் என்ன? உதாரணத்துடன் விளக்குக.

(உ) கணிப்பொறி விதி தரவு செயலாக்கத்தின் நன்மைகள்.

வால்யூம் இரண்டில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள கேள்விகள்:

அ) ஏதேனும் ஒரு மடக்கையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

(ஆ) செயற்கூறு, செயற்குறி, பணி மிகுப்பின் விதிமுறைகள்.

(இ) மதிப்பு மூலம் அமைத்தல், குறிப்பு மூலம் அமைத்தல் எடுத்துக்காட்டுடன் விளக்குக.

(ஈ) ஆக்கி, அழிப்பிகளின் விதிமுறைகள்.

கம்ப்யூட்டர் புரோகிராமில் என்ன மாதிரி கேள்விகள் வரலாம்?

(அ) கம்ப்யூட்டர் புரோகிராம் கோடிங்கில் 10 தவறுகளைக் கண்டுபிடித்து, அவற்றுக்கான சரியான பதிலையும் எழுதவேண்டும்.

(ஆ) ஒரு புரோகிராமைக் கொடுத்து அவுட்புட் கேட்பார்கள். இந்தக் கேள்விக்கான பதில், புத்தகத்திலேயே இருக்கிறது. இந்தக் கேள்வி எல்லா வருட கேள்வித்தாள்களிலும் தொடர்ந்து வருகிறது.

வெற்றி நமதே....

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"