குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை.
உங்களுக்கு ஆறுதல் சொல்வதும், உங்களை தைரியப்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அல்ல அவர் பணி.
நீங்கள் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம்.
நீங்கள் சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்தும் உங்களை விடுவித்து சுதந்திரம் தருவதே அவர் விழைவு.
பகவத் கீதையில் இருந்தோ, பைபிளில் இருந்தோ, குரானில் இருந்தோ இரண்டு பக்கங்களைப் படபடவென்று உணர்ச்சி வசப்படச் சொல்லிவிட்டாலே, அவரைக் குருவாக நினைத்துவிடுகிறார்கள்.
மத போதகர் வேறு.. குரு வேறு.
உறவு என்பது உடல் தொடர்பானதாக இருக்கலாம்.
மனம் தொடர்பானதாக இருக்கலாம்.
அல்லது உணர்வு தொடர்பானதாக இருக்கலாம்.
குருவுக்கும், சிஷ்யனுக்கும் இடையில் இதையெல்லாம் தாண்டிய அக நிலையில் ஓர் உறவு பூக்கிறது.
மற்றவர் தொடாத ஒரு பரிமாணத்தைத் தொடக்கூடியவர் குரு ஒருவரே.
அவர் உங்கள் அகங்காரத்துக்குத் துணை போக மாட்டார். அதைக் கூறு போட்டு அறுப்பார். அதையே உங்களுக்கு இனிக்கும்விதமாகச் செய்வார். உங்களை உறங்க விட மாட்டார். தட்டி எழுப்பிவிடுவார்.
யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும், அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ, அவர்தான் உண்மையான குரு.
அருமை... உண்மை...
ReplyDelete