சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு ஆனந்த தாண்டவம் என்று பெயர்.
வளைந்த இடது பாதத்திற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு மாலையை நடராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது.
சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார். அதனால்தான் எமதர்மராஜன், மார்கண்டயனை துரத்தி பாசக்கயிற்றை வீசியபோது மார்கண்டயன், சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசகயிறு சிவலிங்கத்தின் மேல்பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்கண்டயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்திதேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தாலும் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்திதேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல்நாயகனை தரிசிக்கும்போது கண்டிப்பாக இடதுகாலை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனிஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"