Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/16/2018

ஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு

நான் சுமார் நான்கு மாதத்திற்கு முன் பஸ் அடிக்கடி வராத சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கும் சமயம் 8ஆம் வகுப்பு அரசுப்பள்ளி சீருடை அணிந்தமணவன் ஒருவன் லிப்ட் கேட்டான்.



நான் போகும் வழியிலே 10 கிமீ அவனது வீடும் இருந்ததால் அவனை ஏற்றிக்கொண்டு அவனிடம் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் (எனக்கு தெரிந்தவரை) பற்றி விசாரித்தேன். ஆனால் அவன் அவரைப்பற்றி எனக்கு தெரியாது, இப்போது வேறு ஒருவர் இருக்கிறார் என்றான்.

உடன் நான் சென்ற வருடம்வரை அவர்தானே இருந்தார் 8ம் வகுப்பு படிக்கும் உனக்கு எப்படி அவர் தெரியாமல் இருக்கும் எனக்கேட்டேன்..??

அதற்கு அனது பதில்தான் என்னை இந்த பதிவையே தொகுக்க வைத்தது...!

*இனி ஆங்கிலமும் தமிழும் கலந்த பதில் அவனது வார்த்தையிலே:*

Sir, நான் last year வரைக்கும் ******** Schoolல (சுமாராக பீஸ் வாங்கும் தனியார் பள்ளி) தான் படிச்சேன். என் Father ஒரு Private companyல contract labour ஆ Work செஞ்சிட்டு இருந்தாரு, அப்போ எங்க Fatherக்கு Salary ஜாஸ்தியா இருந்துச்சி. ஆன இப்ப BHELல order குறைஞ்சி போய் அவங்க Companyக்கும் Contract சரியா கிடைக்கல. எங்க அப்பாவுக்கும் Income கொறஞ்சிபோச்சி. அதுனால அந்த அளவு Fees கட்டமுடியாம, அந்த Scoolல Continue பண்ணமுடியல..!

*அதுனால நான் இப்ப அதுக்கு பக்கத்து Government schoolல English medium படிச்சிட்டு இருக்கேண்ணே."*

அதற்குள் நான் இடைமறித்து,  'என்னப்பா சொல்லுற நீ...!! ஏற்கனவே நீ படிச்ச உங்க ஸ்கூல்ல படிக்கும் பசங்க,  நீ இப்ப படிக்கும்  ஸ்கூலப்பத்தியும் அங்க படிக்கும் பசங்களைப்பத்தியும் கேவலமா பாப்பீங்களே என்று எனக்கு தெரிந்த  நிலவரத்தை கேட்டேன்..!

அதற்கான அவனது பதில்:

"அட போங்க Sir, அங்க இருந்த வரைக்கும் நானும் அப்படித்தான் Feel பண்ணேன், ஆனா *இங்க வந்ததுக்கப்புறம் எவ்வளவு Jollyயா இருக்கேன்னு* தெரியுமா Sir...??.

*இங்க படிக்கிற Maximum students எங்கள மாதிரி Average family தான். எல்லாரும் எவ்வளவு நல்லா பழகறாங்க. பழைய School ல பசங்க என்னையெல்லாம் ரொம்ப இளக்காரமா பாப்பாங்க,  எங்கள மாதிரி Poor family students ஐ எதுலயும் சேத்துக்க மாட்டாங்க...!*

இங்க பெரும்பாலும் என்னை மாதிரி Students படிக்கறதால எந்த Difference ம் இல்லாம confident ஆ இருக்கோம் Sir.

அதுமட்டும் இல்ல sir, நா, அங்க இருக்குற வரைக்கும் Average student தான் சார். Class ல Fifty students இருந்தோம், நான் Thirty rankக்கு மேல தான் எடுப்பேன். Tution ல சேந்து படிக்க சொல்லுவாங்க. Fees கட்டவே எங்க Father ரொம்ப கஷ்டப்படுறாரு...!!

*அங்க Class teacher, other subject எடுக்குறவங்க High level englishல தான் Class எடுப்பாங்க. பாதிக்கு மேல Understand ஆகாது. அவங்கல்லாம் எங்களைப்போல Average students ஐ கண்டுக்கவே மாட்டாங்க, எப்ப பாத்தாலும் English புரியாத நீங்கள்ளாம் ஏந்தான் இந்த Schoolக்கு வந்து எங்க உசுர வாங்குறீங்கன்னு  மட்டம் தட்டகிட்டே இருப்பாங்க.*

ஆனா இந்த School எல்லா Teachersம் எவ்வளவு Care எடுத்து Average students க்கும் புரியர மாதிரி Superஆ Class எடுக்குறாங்க தெரியுமா....??

அங்க இருந்த வரை எனக்கெல்லாம் Confidence ஏ இல்ல Sir. ஆனா இப்பல்லாம் இவங்க Care எடுக்கறதால நல்லா படிக்கிறேன்..! Startingல இருந்த பயம் போய் இப்பல்லாம் நல்லா படிக்கிறேன் Sir...!!

*இப்பல்லாம் Fifth rank குள்ள எடுக்குறேன். நல்லா புரிஞ்சி படிக்கறதால 10th standard க்குள்ல At least school firstஆவது வந்துடுவேன் Sir...!! Definitely வந்துடுவேன் Sir, இப்பல்லாம் எனக்கு அந்த Hope நெறயவே இருக்குது...!!!*


*Government scool Teachers பத்தி யாருக்கும் Proper ஆ தெரிய மாட்டேங்குது..!!இவங்கல்லாம் Full effort ஓட எல்லாத்துக்கும் எவ்வளவு நல்லா சொல்லி குடுக்குறாங்க தெரியுமா...???*

நான் கூட பழைய Friends கிட்ட சொல்றேன். பேசாம இந்த Schoolக்கு வந்துருங்கடா. இங்க எந்த குறையும் இல்ல, இங்க படிக்கிறது நமக்கு கேவலமும் இல்ல, நீங்களும் என்ன மாதிரியே நல்லா வந்துருவீங்கன்னு...!!!
But அவங்க Parents க்கு அது புரியமாட்டேங்குது.

*ஏன் Sir இந்த Parents இப்படி இருக்காங்க...?? Hard work பண்ணுண காசையும் செலவழிச்சி... அந்த School ல பசங்கலுக்கு Studies ம் சரியில்லைங்க...!!!*

*எங்களப்பாருங்க எங்க Father ரோட Income Sufficient ஆ இல்லாட்டியும் என்னோட Education  செலவு ரொம்ப கொறஞ்சி போனதால இப்பல்லாம் ரொம்ப Happy யாத்தான் இருக்கோம் "*

சரிண்ணே, நான் இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சி. Okண்ணே.. ரொம்ப Thanksண்ணேன்னு சொல்லீட்டு.....

வண்டியை விட்டு இறங்கி புத்தக பைய தூக்கி தோள்ல போட்டுட்டு டாடா காமிச்சிட்டே நடந்து கிராமத்து குறுகலான சந்தில் மறைந்து போய் விட்டான்...!!!

*இன்று நாடே பேசிக்கொண்டிருக்கும் அரசுப்பள்ளிகளின் பெருமைகளையும் காசுமட்டுமே குறிக்கோளான தனியார் பள்ளிகளின்  அவலமான தரத்தையும் சிறுவன் ஒருவன் நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து விட்டான்...!!*

வாழ்க்கையில் இழந்ததை எண்ணி எந்தவித கவலையுமின்றி.... கிடைத்ததைக்கொண்டு வருத்தமேதுமில்லாமல்..... எளிமையாகவும்,  நிறைவாகவும் எதிர்கால லட்சியத்துடனும் வாழும் இவர்களிடமிருந்து நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று எண்ணியவாறு, நான் சிறிது நேரம் அங்கேயே சுயநினைவின்றி நின்று கொண்டிருந்தேன்...!!!

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"