Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/10/2018

வாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்து மெசேஜ் அனுப்புவதற்காக சிறிது சிரமப்படவேண்டும். அதாவது மைக்ரோபோன் பட்டனை விரல்களால் நீண்ட அழுத்திக் கொண்டே குரலை பதிவு செய்ய வேண்டியிருந்தது. 

அழுத்தம் கொடுத்ததை விடுவித்த உடன் பதிவு செய்த ரெக்கார்டிங் அனுப்ப வேண்டிய நபருக்கு அனுப்பப்படும். வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த முறை எரிச்சலாக இருந்தது. காரணம் சில சமயம் சாட் செய்யும் போது அல்லது தவறுதலாக கை பட்டு ரெக்கார்டிங் ஆகி மறுமுனைக்கு அடுத்த நொடி சென்றுவிடும். மேலும் தவறுதலாக பேசி விட்டால், அவற்றை எடிட் செய்ய இயலாது.

தற்போது லாக்ட் ஆடியோ ரெக்கார்டிங் (Locked Audio Recording) என்ற புதிய அம்சம் வாட்ஸப்பில் வெளி வந்துள்ளது. இந்தப் புதிய வசதியை இயக்க, வாட்ஸ்அப் திரையில் தெரியும் மைக்ரோபோன் பட்டனை 0.5 நொடிகளுக்கு அழுத்துங்கள்.

அதன்பின், வாட்ஸ்அப்பில் லாக் மைக்ரோபோன் பட்டன் தோன்றும். இதனை ஸ்வைப் செய்து லாக் ரெக்கார்டிங் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு ஆடியோ ரெக்கார்டிங்கை செயல்படுத்தியதும், மைக்ரோபோன் பட்டனை அழுத்தாமல் சாட்டிங் திரைக்கு யூஸர் இன்டர்ஃபேஸ் எடுத்துச் செல்லப்படும். மேலும், இனி வரும் வாட்ஸ்அப் அப்டேட்களில் ஆடியோ பதிவுகளை அனுப்பும் முன் ஒருமுறை கேட்கும் வசதியும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் அப்டேட்ஸ் வரும் சமயம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"