Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/09/2018

இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியின் மூலம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.



நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இது கேப்டனாக தினேஷ் கார்த்திக் பெறும் முதல் ஐபிஎல் வெற்றியாகும்.

இதனால் இவரை கொல்கத்தா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதே சமயம் தினேஷ் கார்த்திக்கின் வித்தியாசமான கேப்டன்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். உத்தப்பா துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

இதற்கு வடஇந்தியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது ஒரு மோசமான முடிவு. பட்டியலில் 4வது இடத்தை பிடிப்பதே கஷ்டம். இது அணி நிர்வாகம் எடுத்த மிகவும் மோசமான முடிவு. இவர் ஒரு சுமாரான கேப்டன் என வகைவகையாக பேஸ்புக், டிவிட்டர் என எல்லா பக்கங்களிலும் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் நிதாஸ் கோப்பை இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆடிய ருத்ர தாண்டவம் அந்த ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் வடஇந்தியர்கள் அவரை நல்ல வீரராக மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். அவர் அணியில் இருப்பது பலம், ஆனால் கேப்டனாக இருக்க அவர் தகுதியற்றவர் என்று கிண்டல் செய்து இருந்தனர்.

ஆனால் தற்போது பெங்களூர் அணிக்கு எதிராக அவர் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். அதுவும் 176 ரன்களை மிகவும் எளிதாக கடந்து 18 ஓவர்களிலேயே வெற்றி அடைந்து இருக்கிறார்கள். கேப்டனாக நேற்று பொறுப்பாக விளையாடி, அவுட் ஆகாமல் கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

முக்கியமாக நேற்றைய போட்டியில் அவர் பல இடங்களில் வித்தியாசமான முடிவுகளை எடுத்தார். சரியான நேரத்தில் பார்ட் டைம் பவுலர் நிதீஷ் ராணாவிற்கு பவுலிங் செய்ய கொடுத்து ஒரே ஓவரில் டி வில்லியர்ஸ், கோஹ்லி விக்கெட்டை எடுக்க வைத்தார். பவுலரான சுனில் நரேனை முதலில் இறங்க வைத்து அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது என நிறைய விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

சமீப காலங்களில் தினேஷ் கார்த்திக் மிகவும் அமைதியாக இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் முகத்தில் எந்த விதமான வேறுபாட்டையும் காட்டிக்கொள்வது இல்லை. இவர் டோணி போலவே செயல்படுவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் என்றும் சிலர் கூறியுள்ளனர். 

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"