தமிழக அரசு பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய சீருடைகளை, அவர்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, இல வச சீருடைகள் லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறத்தில் வழங்கப்படுகிறது. 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் அதே நிறத்திலான சீருடைகளை தங்கள் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நலத்துறைகளின்கீழ் செயல்படும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இலவச சீருடை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தனித் தனி சீருடையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்தியது. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டை, மாணவியருக்கு சாம்பல் நிற கோட் அறிமுகமானது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கரு நீல முழுக்கால் சட்டை, கருநீல நிற கோடிட்ட மேல் சட்டை, மாணவியருக்கு கருநீல கோட் கொண்ட சீருடை அறிமுகமானது.
இந்நிலையில், 9 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை சொந்த செலவில் சீருடை வாங்கிக்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் தற்போது சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"