நேற்று குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் காலமானார்.
200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நரசிம்மன். “ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர்.
இவர் கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகளும் பரபரப்பாக பேசப்பட்டன.ஒரு படத்தில் (படம் பெயர் எனக்கு நினைவில்லை)வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ள வருவார் “நின்னுக்கோரி வரணும்” என்ற பாடலை வேறு வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுக்கும் காட்சி இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.
அதே படத்தில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி ஒளியும் காட்சியும் மிகவும் பிரபலம்.
இப்படி நம்மையெல்லாம் சிரிக்கவைத்த எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனுடன் வேண்டுவோமாக..
“நின்னுக்கோரி வரணும்” மறக்க முடியாத காமெடி ..
ReplyDeleteசிறந்த நடிகர்
ReplyDeleteவித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ள வருவார் “நின்னுக்கோரி வரணும்” என்ற பாடலை வேறு வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுக்கும் காட்சி இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.
ReplyDeletesuper comedy seen
நல்ல நடிகர்
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteஓம் நமச்சிவாய ,
ReplyDeleteஆன்மா இறைவனடி சேரட்டும்
ReplyDeleteஅவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
ReplyDeleteகண்ணீர் அஞ்சலி
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteமறக்க முடியாத காமெடிக்காட்சி அது. இவர்தான் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர் என்பதை இப்போது தான் தெரிந்து கொள்கிறேன்!
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்!
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteஆழ்ந்த அஞ்சலிகள்...
ReplyDeleteகண்ணீர் அஞ்சலி
ReplyDeleteஅவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சகோ.
ReplyDeleteம(ற)றைந்த நடிகரை மறக்காமல் நினைவு படுத்திய உம பதிவுக்கு நன்றி...சொல்லப்போனால் இவருடைய பெயரே உங்களுடைய பதிவைப்பார்த்த பிறகுதான் தெரியும்... ஆழ்ந்த அனுதாபங்கள்....எல்லாம் வல்ல இறைவன் அவருடைய குடும்பத்திற்கு தேவையான ஆறுதலை அளிக்கட்டும்...
ReplyDeleteசிறந்த நடிகர்...ஆழ்ந்த அனுதாபங்கள்...
ReplyDeleteஆன்மா சாந்தி அடைய இறைவனுடன் வேண்டுவோமாக..
ReplyDeleteஏராளமான படங்களில் பார்த்த நினைவில் நிற்கும் முகம்.ஆன்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteதமிழை மிக நன்றாக உச்சரித்து திரையிலும்...நாடகத்திலும் நம் மனதை கவர்ந்த நடிகர்.ஆன்மா சாந்தியயட்டும்.
ReplyDeleteஅவரது ஆத்மா சாந்தியடையட்டும் .
ReplyDelete