Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/24/2011

இதுதான் உலகம்? இதுதான் வாழ்க்கை..




கிழிந்த  சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!

ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!

பட்டு சட்டை போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான் அவனுக்கு...!

நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்...!


repost

26 comments:

  1. என்னடா உலகம் இது ..?!

    ReplyDelete
  2. கவிதை கண்முன்னே நடக்கும் நிஜங்கள்

    இந்த கொடுமை ஹோட்டல்களில் அதிகம்..

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  3. தலைவா ....
    கவிதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அருமை
    யதார்த்தமாக நடக்கிற நிகழ்வுகள்
    என்ன செய்வது
    சில மனிதர்கள் அப்படித்தான்

    ReplyDelete
  4. ஏற்ற தாழ்வு என்பது யதார்த்தமாகி விட்டது..

    ReplyDelete
  5. சுருக்கமாய் சொன்னாலும் நச் என ஒரு கவிதை. அற்புதம்.

    ReplyDelete
  6. எதார்த்தமான கவிதை. நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. உண்மை வரிகளானது இங்கே கவிதை வடிவில்....

    ReplyDelete
  8. It is sad..... but so true.... :-(

    ReplyDelete
  9. கடைக்காரன் அந்தப்பக்கம் திரும்பும்போது எடுத்துட்டு வந்துட்டீங்களா தல...

    ReplyDelete
  10. முரண கொண்ட வரிகளில் யதார்த்த உண்மைகள்

    ReplyDelete
  11. நல்ல கருத்து. வெளி வேஷத்தைத்தான் உலகம் நம்புகிறது. நாடகமே உலகம். ஆகவே அரிதாரம் பூசித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  12. உடையைப் பார்த்து எடை போடாதே... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  13. அருமை அருமை இதுதான் உலகம்
    மிக மிக அரிய விஷயத்தை
    மிக மிக எளிதாக விளக்கிப் போகும்
    அற்புதக் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்
    தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

    ReplyDelete
  15. ஏற்றுக்கொள்ளக்கூடிய
    உண்மை.
    இதுதான் நிதர்சனம்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  16. நச் என்று சொல்லியிருக்கீங்க என்ன உலகமடா......இது

    ReplyDelete
  17. உண்மை நிதர்சனமான உண்மை - இதுதான்டா உலகம்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கவிதை அருமை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  19. பணத்துக்கு மரியாதை தருவது தான் இங்கு வாடிக்கை மனிதனுக்கு மரியாதை ஏது சொன்னவிதம் நன்று நண்பா

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அத பத்தி எல்லாம் கவலைப்படக்கூடாது. பணம் கொடுக்கப்போவது நாம். ஆகவே இவர்களை ஒரு பொருட்டாக நினைக்க கூடாது, இல்லை என்றாள் நேரே முதலாளியிடம் சென்று சொல்லி விட வேண்டியதுதான்.

    தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே,

    ReplyDelete
  21. துணி வாங்க
    கிழிந்த சட்டையுடன்
    சென்றேன் நான்...

    என்னருகில்
    கிழிந்த கால் சட்டையை
    வாங்கி கொண்டிருந்தான் ஒருவன்..

    fashion

    ReplyDelete
  22. கவிதையின் கருத்து, நிதர்சனமான உண்மை. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"