இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 700 கோடி என்ற அளவை நெருங்கி விட்டது. அந்த 700 கோடியாவது குழந்தை இன்று நம் இந்தியாவில் பிறக்கப் போவதாக ஐக்கியநாடுகள் அமைப்பின் பாப்புலேசன் ஃபண்ட் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு, இந்தியா மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சி விடும் என்ற எச்சரிக்கையும் தெரிவித்துள்ளது.
அந்த 700 கோடியான சாதனைக் குழந்தை, உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பட் மாவட்டத்தில் உள்ள சன்ஹேடா என்ற கிராமத்தில் சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு பிறந்தது. ( இதே சமயத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்னொரு 700வது கோடி குழந்தை பிறந்துள்ளது. மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை பிறந்தது. இக் குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குழந்தையும், இந்தியாவில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் சமமாக பெறுகின்றன).
இது நம் இந்தியத் திரு நாட்டிற்கு கிடைத்த வரமா? சாபமா?
சொல்லுங்கள் உறவுகளே?
நாடு வல்லரசாக மக்கள் தொகையும் ஒரு செல்வம் தான் நண்பா..
ReplyDeleteஇந்த ஆற்றலை
ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது நம் கடமை..
ஆக்கபூர்வமான் பகிர்வுக்குப் பாராட்டுகள்..
ReplyDeleteஇது வரமே என்பதே என் கருத்து...
ReplyDeleteசில பல நாடுகள் இன்னும் சில வருடங்களில்
இளைய தலைமுறையினர் இன்றி
தவிக்கும் பொழுதுகளில் நம் நாட்டில்
அதிக பட்ச இளைய தலைமுறையினர் இருப்பார்கள்.
இப்போதே சில நாடுகளில் ஓய்வு பெறுவதற்கான
வயது வரம்பை ஐந்து வருடம் கூட்டிவிட்டார்கள்...
நம் நாட்டிலோ இரண்டு வருடம் குறைத்து விட்டார்கள்...
வரும்கால இளைய தலைமுறையினரால்
நம் நாடு பெருமையடைய வேண்டும்
இன்றிருக்கும் மக்கட்தொகைப் பெருக்கத்தை
பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதை வரமாக மாற்றுவது ஆட்சியாளர்கள் கையில் உள்ளது, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது..
ReplyDelete700 கோடியில் ஒருவன்(ள்) வருவதெல்லாம் வரம்தான் சார் நாம் எப்பிடி எடுத்துக்கொளுகிறோமோ அப்படியே
ReplyDeleteசரியான படி பயன்படுத்தினால் இந்த மக்கள் சக்தி நமக்கு வரம் கருன் சார். இல்லையேல் சாபம். சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று விழைவோம்!
ReplyDeleteNichayama sabamdhan. Anal, sabathaiyum varamai matrum vithai nam kaikalil iruku.
ReplyDeleteகத்தி, கல்லு, கம்பு எதுக்கெல்லாம் எப்படி எல்லாம் பயன்படுது - அப்படிதான்,
ReplyDeleteசுர்யாஜீவா, மகேந்திரன் சொல்லறதும் சரிதானுங்கோ
suryajeeva said...
ReplyDeleteஇதை வரமாக மாற்றுவது ஆட்சியாளர்கள் கையில் உள்ளது, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது..
\
\
\
அழகான விளக்கம் சூர்யஜீவா..
நல்லதே நடக்கும் நமக்கு இது வரம்தான்...!!!
ReplyDeleteஎன் பார்வையில் வரம் என்றே படுகிறது நண்பரே..
ReplyDeleteஆம் நண்பரே பிறந்து விட்டது ,பெண் குழந்தை .நன்றி நண்பா தகவலுக்கு
ReplyDeleteத.ம 4
என்னைப் பொறுத்தவரை இது வரமே. இந்தியாவின் பலமே அதன் இளைய சமுதாயமே. சீனாவில் ஒரு குழந்தை முறையை அமல்படுத்தி மக்கள் தொகையை வெகுவாகக் குறைத்திருக்கிறார்களாம். அப்படியே போனால் நாட்டில் பாதிக்கு மேல் கிழவர்களாக எதற்கும் உதவாதவர்களாக இருப்பார்கள் இந்தியாவில் இந்த ஆண் பெண் விகிதாச்சாரமே கவலை அளிப்பதாக உள்ளது. அளவோடு பெற்று வளமோடு வாழ்தல்தான் சிறந்தது.
ReplyDeleteசரியான படி பயன்படுத்தினால் இந்த மக்கள் சக்தி நமக்கு வரம் கருன் சார். இல்லையேல் சாபம். சரியாகப் பயன்படுத்த வேண்டும்
ReplyDeleteநோ கமெண்ட்ஸ் நண்பா.
ReplyDeleteஇது வரமே...
ReplyDeleteவாழ்த்துக்கள்...சச்சின், பிங்கி சர்கார்
அட இதுவும் ஓரு வித்தியாசமான சாதனையாக இருக்கு........
ReplyDeleteஎழுநூறவது கோடியில் பிறந்து புகழ்பெற்ற இந்தக் குழந்தைகளுக்கு
ReplyDeleteஇந்த வாய்ப்பு வரம் .இந்த மக்கள் தொகையை முறைகேடாகப்
பயன்படுத்தின் அது நாட்டுக்கும் மக்களுக்கும் சாபம் ...மிக்க நன்றி சகோ
புதிய தகவல்ப் பகிர்வுக்கு .......வாழ்த்துக்கள் அவ்விரு குழந்தைகளிற்கும் .