தீவிரவாதத்தை ஒழிக்கிறோம், அந்நாட்டுக்கு உதவுகிறோம் என்ற பெயரில், எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து, அந்நாட்டின் வளங்களையெல்லாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொண்டிருக்கிறது சர்வாதிகார அமெரிக்கா.
ரஷ்யா நமக்கு சவாலாக வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் அதன்பிடியில் இருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளவர்களை, ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிவிட்டது இந்த அமெரிக்க அரசு.
அது மட்டுமல்ல, 'விக்கிலீக்ஸ்' வெளியிட்ட பரபரப்பான அறிக்கையின் மூலம், எல்லா நாடுகளின் உள்விவகாரங்களிலும் இந்த அமெரிக்காவின் தலையீடு இருக்கிறது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
எந்தவொரு நாட்டிலும் அமையப் போகும் ஆட்சி, தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நாட்டில் தேர்தலை சந்திக்கும் ஒரு பெரிய கட்சிக்கு தேவையான உதவிகள் செய்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான் முன்பு நாம் பிரிட்டனிடம் அடிமையாக இருந்தோம் இப்போது அமெரிக்காவிடம் அவ்வளவுதான். இந்த ஆட்சி இருக்கும் வரை நாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...
விக்கி லீக்ஸ்க்கும், நம்ம வீடியோ விக்கிக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்காமே?
ReplyDeleteஉண்மையான சொல்
ReplyDeleteரெம்ப தாமதமா சொல்லி இருக்கீங்க
தலைக்கு மேல் வெள்ளம் போயிடுச்சு
என்று உணரும் நம்சமூகம் ?
யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது......
ReplyDeleteமு.மேத்தாவின் ஒரு கவிதை நினைவுக்கு வருது.
ReplyDeleteஎல்லோரும் தலையில் எண்ணெய் தடவுவார்கள்.
அமெரிக்காவோ எண்ணெய்க்காக உலக நாடுகளின் தலையை தடவுகிறது!!
மீண்டும் சுதந்திரப் போராட்டம் !
ReplyDelete//முன்பு நாம் பிரிட்டனிடம் அடிமையாக இருந்தோம் இப்போது அமெரிக்காவிடம்...//
ReplyDeleteCorrect....
சரியா சொல்லி இருக்கீங்க...என்ன பண்றது காலனி வாதம் என்பது பழகிப்போக வைக்கப்பட்டு இருக்கிறது...!
ReplyDeleteஎதிரியை(அமெரிக்கா) நண்பனாக்கி கொண்டு நண்பனை(ரஷ்யா) எதிரி ஆக்கிய வல்லமை காங்கிரஸ்க்கு மட்டுமே உண்டு...
ReplyDeleteவிக்கிலீஸ் இனி ரகசிய ஆவணங்களை வெளியிருவதில்லை என்று அறிக்கை வெளிவந்திருக்காம்.......
ReplyDeleteஇதற்கு காரணம் அமேரிக்கா விக்கிலீசுக்கு நிதி கிடைக்கும் வழிகளை முடிக்கிவிட்டதுதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.......
ReplyDeleteகையாலாகதவர்களிடம் ஆச்சியை கொடுத்தால் இப்படித்தான்
ReplyDeleteஇப்பொழுதெல்லாம் காசித்தவிர எவர் கண்ணுக்கும் எதுவும் தெரிவதில்லை
தன்மானம் என்பதெல்லாம் வார்த்தையோடு சரி
நல்ல பதிவு சகா
பாராட்டுகள்
நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தில் நேரு மவுண்ட் பட்டேனிடம் கூறுவது போல் ஒரு வாசகம் இருக்கும், எங்களுக்கு ஆட்சி பண்ண தெரியாது, ஆகையால் இந்த பிரச்சினை முடியும் வரை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும் என்று... இப்பொழுது ஹிலாரியிடம் மன்மோகன் சொல்லி கொண்டிருக்கிறார் அவ்வளவே...
ReplyDeleteமுன்பு நாம் பிரிட்டனிடம் அடிமையாக இருந்தோம் இப்போது அமெரிக்காவிடம் அவ்வளவுதான். இந்த ஆட்சி இருக்கும் வரை நாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே.../
ReplyDeleteநல்ல பதிவு
பாராட்டுகள்
உண்மை தான் நண்பரே தங்கள் கருத்து ,
ReplyDeleteசுதந்திர அடிமைகள்....
ReplyDeleteஎன்ன செய்யலாம் சொல்லுங்க????
பெரியண்ணன் ஒரு ஆக்டோபஸ்.
ReplyDeleteஅப்பிடியே பழகிப்போச்சே என்ன செய்ய அதைவிட பழி போட இன்னொரு ஆள் வேணுமே
ReplyDeleteஎதிர்வரும் வாய்ப்பை (பாராளுமன்றத் தேர்தலை) சரியாகப் பயன்படுத்த சமூகத்தைப் பண்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாய் இருக்கிறது. ஆளுக்கு 2 பேர் வீதத்தில் நம் பணியைச் செய்தாலே போதும்!
ReplyDeleteமாற்றத்தை நிச்சயம் அருவடைச் செய்யலாம்.
அமெரிக்காவிடம் மட்டுமல்ல இலங்கை,சீனா போன்ற நாடுகளையும் இந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.
ReplyDeleteபிறர் சவாரி செய்ய குனிந்து கொடுத்தே முதுகு வளைந்து போன இந்திய சமூகம்.அப்படி குனியச்செய்வது யார் இப்பொழுது,ஏன் என்கிற கேள்விகளுடன் சேர்த்து இன்னொன்றையும் பார்க்க வேண்டியுள்ளது.நாம் எல்லோரும் நம்மை அறியாமலேயே ஒரு விதத்தில் ட்யூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
ReplyDelete