Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/11/2011

நம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...



ற்றவர் மனதிற்குள் 
நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள் 
நீ,
நுழைந்ததுண்டா ...?




ன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?


ன் மனம்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?

ன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?

ன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?

ந்த
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?

ந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?

ன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும்   என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
 ன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது 
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?

ம்முடைய முகவரிகள் 
பொய்யானவை,
நம்முடைய முகங்கள் 
பொய்யானவை,

நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?


தனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க  முடிவதில்லை.....

முகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...

நாம்
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்.

ம்
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???

 யாரும்  அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????


-Repost.,

43 comments:

  1. //
    உன் மனதின்,
    இருண்ட அறைகளுக்கும்,
    அங்கே உலவும் பேய்களுக்கும்,
    நீ,
    பயந்ததுண்டா...?

    //

    நல்ல கேள்வி

    ReplyDelete
  2. முகமூடி அணியாத மனிதன் யார்?
    நன்று.

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் பாஸ்,

    மனிதம் மரத்துப் போனோருக்கு சொற்களால் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  4. மனம் மனிதனின் குணம் இவை பற்றி அழகான கவிதை பாஸ்...கேள்விகளோடு கூடிய கவிதை சூப்பர்

    ReplyDelete
  5. உறவுகள் சிறக்க
    நட்புகள் நிலைக்க
    இது போன்ற முகமூடி அவசியம்..

    எல்லாவற்றையும் அதுவாகவே ஏற்றுகொள்ளும் மனம் நம்மிடம் இல்லை.

    ReplyDelete
  6. உன் முகவரி
    உன் முகத்தில் இல்லை
    மனதில்தான் இருக்கிறது
    அதை யாருக்காவது
    தெரிவிக்கும் தைரியம்
    உனக்கு உன்டா...?

    //

    நிச்சயம் கிடையாது.
    அப்படி நடந்து விட்டால் நிச்சயம் பிரளயம் தான்!

    ReplyDelete
  7. மச்சி கவிதை சூப்பர் தமிழ்மணம் 7

    ReplyDelete
  8. உறவுகள் சிறக்க
    நட்புகள் நிலைக்க
    இது போன்ற முகமூடி அவசியம்..

    எல்லாவற்றையும் அதுவாகவே ஏற்றுகொள்ளும் மனம் நம்மிடம் இல்லை.

    ReplyDelete
  9. ம்ம்ம் அழகு மீள்பதிவு!த ம 8

    ReplyDelete
  10. எழுப்பிய
    வினா வரிகளில்
    மனித அகத்தின்
    முகமூடி

    ம்ம்ம் அருமை கலக்கல் கவிதை

    ReplyDelete
  11. அன்புநிறை நண்பரே...
    கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
    பொறுத்தருள்க...

    உன்னையே எண்ணிப்பார்
    உன்மனதை தோண்டிப்பார்...

    அழகான கவிதை நண்பரே...

    ReplyDelete
  12. ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா. எல்லோரிடமும் முகமூடி உண்டென்பதுதான் உண்மை. நிர்வாண நிஜங்கள் சுடும் கருண். அழகான கவிதை வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. உன் முகவரி
    உன் முகத்தில் இல்லை
    மனதில்தான் இருக்கிறது
    அதை யாருக்காவது
    தெரிவிக்கும் தைரியம்
    உனக்கு உன்டா...?

    ஆழ்மனதை அழகாகப் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  14. நல்லதொரு சாடும் கவிதை

    ReplyDelete
  15. கலக்கல்...பார்ரா இந்த புள்ளைக்கு என்னமோ ஆயிருச்சி...!

    ReplyDelete
  16. நம்
    முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
    அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???


    நல்ல வரிகள்.

    ReplyDelete
  17. மற்றவர் மனதிற்குள்
    நுழைய முயல்பவனே!
    உன் மனதிற்குள்
    நீ,
    நுழைந்ததுண்டா ...?//

    ஆரம்பமே சாட்டையடியா இருக்கு...??!!!

    ReplyDelete
  18. உண்மைதான்ய்யா முகமூடியை கழட்டி விட்டால் ஒரு மண்ணும் இல்லை!!!

    ReplyDelete
  19. எல்லா ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  20. அருமை வேடந்தாங்கல் தருண்

    ReplyDelete
  21. கலக்கல் பாஸ்!

    ReplyDelete
  22. 'மன' முகமூடி இல்லாமல் யாரும் இவ்வுலகில் உலாவ முடியாது.

    ReplyDelete
  23. அகம் குறித்த கவிதை. அருமை.

    ReplyDelete
  24. அகத்தையும் அழகாய் வெளியில் நின்று பார்க்கும் வண்ணம் ஒரு புதிய கருவி அது வந்துவிட்டால் பின் நீங்கள் சொன்ன எல்லா விசயமும் உண்மை உண்மை என்றே பல முகமுடி
    அணிந்த உறவுகள் கண்ணில் நின்றே மறைந்துவிடும் ....//
    அருமை !......அற்புதமான சிந்தனை சகோ.வாழ்த்துக்கள் .
    வாருங்கள் என் தளத்திற்கும் ..

    ReplyDelete
  25. வரிகள் யதார்த்தம் ..

    ReplyDelete
  26. கேள்விக்கணைகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை. முகமுடிகள் அணிந்திருப்பதால்தான் நாம் சராசரி மனிதன். இல்லையேல் ஞானி, யோகி என்ற பெயர் கிடைத்திருக்கும் நமக்கு.

    ReplyDelete
  27. முகமூடியுடன் வாழும் நாடகமேடை இந்த உலகம் நடிகர்கள் நாம்....அருமை

    ReplyDelete
  28. மீள்பதிவாயினும் WORTH READING AGAIN...-:)

    ReplyDelete
  29. உண்மையை எடுத்துரைக்கும் வரிகள்... நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  30. உன் முகவரி
    உன் முகத்தில் இல்லை
    மனதில்தான் இருக்கிறது
    அதை யாருக்காவது
    தெரிவிக்கும் தைரியம்
    உனக்கு உன்டா...?//

    சூப்பர் சார்

    ReplyDelete
  31. முகமூடி மட்டுமா மனிதனுக்குத் தேவை,அகமூடியும்தான்.நிஜ மனிதனின் அகத்தை அருமையாக விளக்கியுள்ள கவிதை.வாழ்த்துக்கள்,கருன்

    ReplyDelete
  32. arumaiyana kavithai superb
    suyaparisothanai

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"