இன்னும் கொஞ்ச நேரம்
என்னைத்
தூங்கவிடேன்,
கெஞ்சும் இமைகளை
அலச்சியப்படுத்தி எழுந்து,
இன்று ஒரு நாள்
மட்டும் குளிக்காமல்விடேன்,
கேட்கும் மனசை
புறந்தள்ளி குளித்துவிட்டு,
இன்னும் இரண்டு
இட்லி தின்னால்
என்ன குறைந்துவிடப் போகிறாய்?
எச்சில் சுரக்கும் நாவை
உதாசீனப் படுத்தி கைகழுவி,
ரஜினி பாட்டானாலும்
அன்றைய
முக்கிய செய்திகளை மட்டும்
டிவியில் கேட்டே புறப்பட்டு,
ஒரு வாரம்
முழுதும் பாடங்களில்
ஐயிக்கியமானாலும்
சனிக் கிழமை விடுமுறைக்கு
தவமிருக்கிறது மனசு...
ஆனால்
வெள்ளிக்கிழமை,
வரத்திற்கு பதிலாய்
சாபம்தான் கிடைக்கிறது!!!
நாளை பத்தாம் வகுப்பிற்கு மட்டும்
சிறப்பு வகுப்பு.
//நாளை பத்தாம் வகுப்பிற்கு மட்டும்
ReplyDeleteசிறப்பு வகுப்ப//
இப்போதெல்லாம் வாரா வாரம்...
வரா(த) வரம்....
ரோடுன்னா மேடு பள்ளம் இருக்கத்தானே செய்யும்?
ReplyDeleteகிளாஸ் கட் அடிக்கிறது புதுசா என்ன?
சிறுவனின் ஃபீலிங்கை சூப்பரா சொல்லிட்டீங்க, ஆனா சாபம் யாருக்கு வாத்திமாருக்கா...???
ReplyDeleteஉண்மை தான் மச்சி... படிகிற பசங்களை இம்புட்டு பாடு படுத்தறிங்களே
ReplyDeleteமக்கா நானும் அதே தான் சொல்லி இருக்கேன்'
ReplyDeleteஒரு வாத்தியாரே இப்படியா !
ReplyDeleteஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பள்ளி வாழ்க்கையை அப்படியே நினைவுபடுத்தி விட்டீர்கள். அருமை!
ReplyDeleteகவிதை அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநாம் கடந்து வந்த அதே பாதை
ReplyDeleteஅதே உணர்வு
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நீங்களும் சிறந்த பாவலறாகி விட்டீர்கள் பாராட்டுகள் தூள் கிளப்புங்க
ReplyDeletevery true
ReplyDeleteஐயா , இப்பல்லாம் ஞாயிறு கூட விடுமுறை இல்லை .. என்ன செய்ய ...!
ReplyDeleteபள்ளி வாழ்க்கை மீள் ஞாபகம் வந்து விட்டது.....பாஸ்
ReplyDeleteஇப்ப ஞாயிற்று கிழமை கூட சிறப்பு vaguppu ணா
ReplyDeleteஇப்ப ஞாயிற்று கிழமை கூட சிறப்பு வகுப்பு ணா
ReplyDeleteஎனக்கு இந்த வாய்ப்பே இல்லீங்க ஆசிரியரே!
ReplyDeleteஒரு மாணவனின் கஷ்டங்கள்.. நல்லாயிருக்கு கவிதை.
ReplyDeleteசனிக்கிழமை மட்டுமல்ல, ஞாயிற்றுக்கிழமையும், ஏன் வாரம் பூராவும் சிறப்பு வகுப்புகள்தான்.. பத்தாம் வகுப்பு, பண்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு... !!! இது அவர்கள் வாழ்க்கை நிர்ணயிக்கும் முக்கிய தருணம் அல்லவா?
ReplyDeletevery nice....!!!
ReplyDeleteகவிதை ! கவிதை
ReplyDelete