உன்மீது உண்டானது
காதல்தான் என்று
எனக்கு
முதலில் உணர்த்தியது
மழை...!
உன்னுள் கரையும் போது
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!
கரு மேகங்கள் சூழ
ஒரு நாள் மழை தோடு முன்
என் விரல்களை நீ பற்றினாய் ...!
நம் முதல் ஸ்பரிசத்தை
மேலும் மகிழ்த்தியது
மழையின் பகிர்வு...!
நெற்றியில் விழும்
ஒற்றை முடி விலக்கி
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும்
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!
பின்னொரு நாள்
கனத்த இதயத்தையும்
கண்ணீரையும் சேர்த்து
என் காதலுக்கு கல்லறை
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!
அந்த மழை
என் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா
என்று தெரியவில்லை ...!
உண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது
நீ தந்த
மழைக்கும் எனக்குமான உறவு...!
- மறுபதிவு
நச்... சூப்பர்....
ReplyDeleteஉன் பிரிவை விடவும்
ReplyDeleteஎன்னை வருத்துவது
நீ தந்த
மழைக்கும் எனக்குமான உறவு...!/
கவிதை மழைக்குப் பராட்டுக்கள்.
கவிதை அழகாய் இருக்கு ..அதுவும் இறுதி வரிகள் ....
ReplyDeleteசூப்பர் கவிதைகள்
ReplyDeleteமறு பதிவா? ஓ.கே.நல்லாத்தானே இருக்கு!
ReplyDeleteகண்ணீர் மழை.
ReplyDeleteKalakkal kavithai boss
ReplyDeleteNice TM 7!
ReplyDeleteகவிதை சூப்பர் பாஸ்.ஆமா இது என்ன மறுபதிவு வாரமா?
ReplyDeleteநல்ல கவிதை மச்சி.
ReplyDeleteமழையில் தொடங்கிய காதல் பிரிவில் முடியும் போது,
மழையினை ரசிக்கும் ஒவ்வோர் தடவையும் வலி மாத்திரமே எஞ்சியிருக்கிறது என்பதனை உணர்த்தும் காலக் கவிதை!