தமிழகத்திலுள்ள, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவதையொட்டி அதற்கான தேர்தல் அடுத்த வாரம் நடக்க இருக்கிறது .
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பல ஆயிரம், லட்சம் ரூபாய்க்கு, ஏலம் போடுவதாகக் கூறப்படுகிறது.
பல இடங்களில், ஒரு குவார்ட்டர் அல்லது ஒரு ஹாப் , ஒரு பிரியாணி, ஒரு ஓட்டுக்கு குறைந்தது நூறு ரூபாய் கொடுத்து, ஓட்டுகளைப் பெற்று தலைவராக, கடினமாக உழைக்கின்றனர்.
ஆனால், மக்களுக்கு தேவையான மிக முக்கியமான சில அடிப்படை வசதிகளை கூட செய்துத் தருவதில்லை. ஒரு ஊராட்சியின் மாதாந்திர செலவுக்காக, 10 ஆயிரம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதை எத்தனை பேர், முழுமையாக மக்கள் நலனுக்காக செலவு செய்கின்றனர்?
தங்களுடைய வருமானத்தை பெருக்கவும், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் தான், 95 சதவீதம் பேர், ஊள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதை நினைக்கும் போது, கிராமங்களின் நிலை மிகவும் பரிதாபமாகவே தோன்றுகிறது.
இனியாவது எந்தவொரு ஊராட்சியிலும் ஆண்டிற்கு சில முறையாவது கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும் . இல்லையெனில் உடனடியாக அந்த தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், தலைவரும் திருந்துவார், அவரை தேர்ந்தெடுத்த மக்களும் கொஞ்சமாவது சிந்திந்து ஓட்டளிப்பார்கள்.
இத்தேர்தலில் ஓட்டளிக்க செல்வோர், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் பணத்திற்கும் மயங்காமல், ஊரின் தலையெழுத்தை மாற்றுவதற்கு தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.
அப்போதுதான் கிராமங்கள் ஒளிரும்.
நல்ல கருத்து நண்பரே
ReplyDeleteமக்கள் நல்லா தெளிவாதேன் இருக்காங்க, ஏன்னா போன தேர்தலில் பணத்தால் ஜெயிக்கலாம் என்று இருந்தவர்களின் டங்குவார் கிளிஞ்சதை நாம் அறிவோம்!!!!
ReplyDeleteபணத்துக்கும் ஜாதீய அரயசியளுக்கும் எதிரா மக்கள் ஓரளவுக்கு வாக்களிக்கறாங்க!ஆனா உள்ளாட்சிதேர்தல்ல இது நடக்காதுன்னு என்னோட கருத்து!
ReplyDeleteஉங்கள் கருத்து சரிதான் நண்பரே
ReplyDeleteஇனியாவது மக்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்
சரியா சொன்னீங்க வாத்தியாரே
ReplyDeleteஅருமையான கருத்து சார்.......
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//
ReplyDeleteஒரு ஊராட்சியின் மாதாந்திர செலவுக்காக, 10 ஆயிரம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதை எத்தனை பேர், முழுமையாக மக்கள் நலனுக்காக செலவு செய்கின்றனர்? //
ஒருத்தன் கூட இல்லை
//
ReplyDeleteஇத்தேர்தலில் ஓட்டளிக்க செல்வோர், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் பணத்திற்கும் மயங்காமல், ஊரின் தலையெழுத்தை மாற்றுவதற்கு தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.
///
உண்மை
இன்று என் வலையில்
ReplyDeleteசிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்
\\இத்தேர்தலில் ஓட்டளிக்க செல்வோர், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் பணத்திற்கும் மயங்காமல், ஊரின் தலையெழுத்தை மாற்றுவதற்கு தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.//
ReplyDeleteகுவாட்டருக்கும்,பிரியாணிக்கும் ஓட்டு போட்டது அந்தக்காலம்,எங்கள் ஏரியாவில் ஓட்டுப்பதிவு,19 ம் தேதி தான் ஆனால் இன்றைய தேதியில் ஒவ்வொரு வோட்டுக்கும் சுமார் 2000/= பணம்,2 கிராம் தங்கம்,4 புடவைகள்,இன்னம்,பிற தட்டு முட்டு சாமான்கள் கொடுக்கப்பட்டு விட்டன,பொறாமையாக இருக்கிறதா,நான் மேலே குறிப்பிட்டது 30 சதவீதம் தான்,இன்னமும் 70 சதம் வரவேண்டியது பாக்கியிருக்கிறது கணக்கு போட்டு பார்துகொள்ளுங்கள்.
குவாட்டருக்கு ஓட்டை வித்துட்டு அப்புறமா பைப்புல தண்ணிவரலைன்னு சொன்னா ....
ReplyDeleteநல்ல கருத்துதான், மக்கள் இப்பொழுதெல்லாம் தெளிவாக இருக்கிறார்கள்.
ReplyDeleteநல்ல கருத்து பாஸ் மக்கள் உணர்ந்துகொண்டால் சரி
ReplyDeleteநல்ல பகிர்வு. குவாட்டரும் கோழி பிரியாணியும் தமிழக தேர்தலின் அடையாளமாகி போனது வேதனை!!
ReplyDeleteமாப்ள நீங்களும் வேட்பாளரா களத்துல நிக்கறீங்களாமே..தெரியும்யா எனக்கு!
ReplyDelete//பொ.முருகன் said...
ReplyDelete\\இத்தேர்தலில் ஓட்டளிக்க செல்வோர், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் பணத்திற்கும் மயங்காமல், ஊரின் தலையெழுத்தை மாற்றுவதற்கு தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.//
குவாட்டருக்கும்,பிரியாணிக்கும் ஓட்டு போட்டது அந்தக்காலம்,எங்கள் ஏரியாவில் ஓட்டுப்பதிவு,19 ம் தேதி தான் ஆனால் இன்றைய தேதியில் ஒவ்வொரு வோட்டுக்கும் சுமார் 2000/= பணம்,2 கிராம் தங்கம்,4 புடவைகள்,இன்னம்,பிற தட்டு முட்டு சாமான்கள் கொடுக்கப்பட்டு விட்டன,பொறாமையாக இருக்கிறதா,நான் மேலே குறிப்பிட்டது 30 சதவீதம் தான்,இன்னமும் 70 சதம் வரவேண்டியது பாக்கியிருக்கிறது கணக்கு போட்டு பார்துகொள்ளுங்கள்.//ஹா.ஹா...
உள்ளாட்சித்தேர்தலுக்கு இவ்ளோ செலவு செய்றாங்களே, திரும்ப எடுத்துட முடியுமா?
ReplyDeleteஅதாவது கிடைக்குதேன்னு மக்கள் வாங்கிருவாங்க.....
ReplyDeleteசமூக அக்கறை உள்ள பதிவு.
ReplyDeleteசமூக அக்கறை உள்ள பதிவு. ஜனங்களும் கொஞ்சம் யோசிக்கனும்.
ReplyDeleteஎங்கள் பகுதியில் தினம் காலை மாலை இரு வேலைகளும் இலவச பால் பக்கெட்... என்னத்த சொல்ல... அடங்க மட்ட்டேன்குரானுங்க 49 '0' தான் கரெக்ட்
ReplyDeleteதக்க சமயத்தில் சரியான பதிவு
ReplyDeleteதந்தமைக்கு நன்றி
சமூக சிந்தனை அதிகம் உள்ளவர்களாக இருப்பதால்
பதிவர்கள் யாரும் விலை போகமாட்டர்கள் என
உறுதியாக நம்புகிறேன்
த.ம 15
ஊரின் தலையெழுத்தை மாற்றுவதற்கு தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும்.
ReplyDeleteநல்ல கருத்து நண்பரே
ReplyDelete49 ஒ தான் கரேக்ட்
ReplyDeleteகேக்க நல்லாருக்கு.நடக்குமா?
ReplyDeleteநெற்றியடிக் கேள்வி
ReplyDeleteநல்ல கருத்து.
ReplyDelete